Sunday, November 6, 2011

அவனும் இவனும்

அவனும் இவனும்

அவனும் இவனும்
அடித்துக் கொண்டே உள்ளான்
ஈராயிரம் ஆண்டுகளாக
இன்றளவும்

அவன் தர்மபுரி என்றால்
இவன் மதுரை என்பான்

அவன் மலையாளி என்றால்
இவன் தெலுகு என்பான்

அவன் சுடுகாடு என்றால்
இவன் 2 ஜி என்பான்

அவன் பகுத்து அறி என்றால்
இவன் பக்தி அரி என்றான்

அவன் அயோத்தி என்றால்
இவன் அல்லா என்றான்

அவன் அபிஷேகம் என்றால்
இவன் முழுக்கு என்றான்

இன்னொருவன் வந்தான்
அழி இத் தமிழனை என்றான்.

அவனும் இவனும் இணைந்தனர்.
அழிக்கத் தமிழனை.

காலங்கள் பல ஓடினாலும்
அவனும் இவனும்
அடித்துக் கொண்டே
ஆழத்தில் புதைத்தான்
தமிழனை மட்டும்
மீண்டும் மீண்டும்!!!!!!!!!!!!!!!!!!

.கவி.

No comments:

Post a Comment