Thursday, February 26, 2009

காவேரி, பாலாறு, பெரியார், ஒகெனக்கல், ஈழத் தமிழர் சிக்கல்

காவேரி, பாலாறு, பெரியார், ஒகெனக்கல், ஈழத் தமிழர் சிக்கல்

இவற்றில் இந்திய அரசின் “கோக்கு மாக்கு” வேலைகள், தமிழரை “ஏப்பை சாப்பை” என்றெண்ணுகிறார்களே?

நாம் இன்னும் ஏமாற்றப் படுவது உண்மையில்லா என்கின்றீர்களா?உணர்ச்சியின் காரணமாக இதை எழுதவில்லை. ஏமாற்றத்தின் காரணமாகவே எழுதுகிறேன். ”இன்னும் எத்தனை காலம் நாம் ஏமாறிக் கொண்டே இருக்க வேண்டும்? “

நான் அரிசி கொண்டு வருகிறேன், நீ உமி கொண்டு வா ,ஊதித் திம்போம்” இன்னும் எத்தனை காலம்? காவேரி, பாலாறு, பெரியார், ஒகெனக்கல், ஈழத் தமிழர் சிக்கல்....தமிழகம் ஏமாற்றப் படவில்லையா...............

விவேகமாகச் செயல்பட்டதால் தானே, தனிநாடு கொள்கையைக் கைவிட்டார் அண்ணா......

அதற்கு இந்திய அரசு செய்த கைமாறு என்ன?

இன்னும் காவேரி, பாலாறு, பெரியார், ஒகெனக்கல், ஈழத் தமிழர் சிக்கல்....குறை காணும் நோக்கமல்ல, குறை உணரும் நோக்கம்....

பாகிஸ்தானுடன், வங்கதேசத்துடன், சிக்கலற்ற நீர்ப் பகிர்வு, ஆனால் தமிழகத்திற்கு.........?

உரிமைகளைக் கேட்பதற்கும், பிரிவினைக்கும் பல வேறுபாடுகள் உண்டு தானே....

தமிழில் ஆகமங்கள் கேட்டோமென்றால் நாம் பிரிவினைவாதி.....
தமிழனுக்குத் தண்ணீர் வேண்டுமென்றால் நாம் பிரிவினைவாதி.....
தமிழில் ஆலய வழிபாடு மென்றால் நாம் பிரிவினைவாதி.....
தமிழன் அனைவரும் சம மென்றால் நாம் பிரிவினைவாதி.....
தமிழ்மொழி உயர் மொழியென்றால் நாம் பிரிவினைவாதி.....

ஆக தமிழ் / தமிழ் நாடு / தமிழ் தேசம் என்றால் நாம் பிரிவினைவாதி..... என்று எழுதவது நியாயமல்லவே.....

பிரிவினை எங்கு இல்லை?

தமிழில் ஆகமங்கள் என்றால், சைவ ஆகமா ? வைணவ ஆகமா என்று?
சைவத் திருத்தலங்களுக்கும், வைணவத் திருத்தலங்களுக்கும் தனித்தனி வழிபாட்டு முறைகள் என்று..
நமக்குள்ளே ஆண், பெண் என்று.
நம் வாழ்வில் நம்முடன் பயணப்படும் ஆண்கள்/பெண்களை நாம் பிரித்து நோக்குவதில்லையா?

தமிழ் என்றால் பிரிவினை என்று நோக்கினால் சிவபெருமான்,ஆண்டாள், திருநாவுக்கரசர், கம்பர், நக்கீரர், அகத்தியர் என்று பட்டியல் நீளுமே.....

ஆகவே அன்பு கூர்ந்து தோழர்களே, தமிழ் / தமிழ் நாடு / தமிழ் தேசம் என்றாலே அவர்கள் பிரிவினை பேசுபவர்கள் என்று கூற்றை மாற்றி, அவரின் நோக்கங்கள் /கருத்துக்கள் உண்மையா என்று நோக்குங்கள்.

இது நமது உரிமை. தமிழர்கள் இந்தியாவிற்கு கட்டிக்கொண்டிருக்கும் வரிக்கு (கப்பத்திற்கு ? ) தமிழர்கள் எதிர்பார்க்கும் உரிமை.

உரிமைக் குரல் எழுப்பினாலே திருமணமுறிவு(விவாகரத்து) என்று ஒவ்வொரு தம்பதியரும் எண்ணிச் செயல் படத் தொடங்கினால் , பின் உலகில் குடும்பமே இருக்காது......

உரிமைக்கும், பிரிவினைக்கும் பல வேறுபாடுகள் உண்டு தானே....

அன்புடன்
.கவி.

(தமிழ் / தமிழர் நலன் / தமிழக உரிமைகள் பற்றிப் பேசினாலே பிரிவினைவாதி ஒரு தவறான போக்கு நிலவுகிறது. முகவை மாவட்டத்தில் பயன்படுத்தப் படும் சில பொதுமக்கள் சொற்றொடர்கள் இழையின் தொடர்ச்சியாக எழதப் பட்ட இழையாயின் அந்தச் சொற்றொடர்களும் இடம் பெற்றுள்ளன)

No comments:

Post a Comment