Sunday, July 5, 2009

குனமளவேனும் குணம்.......

குனமளவேனும் குணம்.......

பகுத்தறிவென்பார்
பலநூல்கள் படிக்காமல்...

பக்தியென்பார்
பாமரர் அவலம் பார்க்காமல்.....

அறிவாளியென்பார்
அறமேதும் அறியாமல்.....

ஞானியென்பார்
ஞாலத்தை ஞானமயறியாமல்......

போராளியென்பார்
போரிட்ட புண்ணேயில்லாமல்....

தமிழனென்பார்
தமிழில் பேச முயற்சிக்காமல்.....

குணாளனென்பார்
குனமளவேனும் குணமில்லாமல்.....

இவரிடையில்....

பெண் விடுதலையென
பெயரளவில் பேசித் திரியாமல்
செயல் வடிவம் தந்த சீமானென
சின்னச் செய்தியொன்று
சொன்னது சிட்டுக்குருவி.

குனமளவேனும் குணமில்லா
குடிமக்கள் நடுவில்
கோபுரத்தில் குன
வைரமாக மிளிர்கிறாய் நீ.

உன் வாழ்வு ஊரறிய
இளைஞருக்கு எடுத்துக்காட்டாய்
அமையவே இந்தப் பதிவு.

உன்னுடன் எழுவரானோமென
உனை உயர்த்த
நான் அரசகுடியுமல்ல
நீ ஏற்றே ஆகவேண்டிய
நிலையில் இருப்பவனுமல்ல.

எனவே உன் பணிக்கு
என்றேனும் ஒரு ஏணி தேவைப்படின்
உன் செயல்வழி வாழ்விற்கு
என் சிறிய பரிசாக
இந்த இலவச ஏணியில்
ஏறிச் செல் என் தோழா.

அன்புடன்
.கவி.

No comments:

Post a Comment