அமெரிக்காவில் 31ம் உலகக் கவிஞர் மாநாடு, கொனொசா - உலகக் கவிஞர்களுக்கு வரவேற்பு விருந்து
உலகளாவிய பன்மொழிக் கவிஞர்களின் 31ம் மாநாடு அமெரிக்காவின் விசுகான்சின் மாகாணத்தின் மிச்சிகன் ஏரிக்கரையில் உள்ள நகரமான கெனொசாவில் மிகவும் சிறப்பாகத் தொடங்கியது.
இம்மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராக மேரிஆன் என்ற அமெரிக்கப்பெண்கவிஞர் பொறுப்பேற்றிருந்தார்.
இவர் தம் குழுவினருடன் சிறப்பாகக் கவிஞர் மாநாட்டின் வரவேற்பு நிகழ்வு தொடங்கியது.
உலகக் கலைப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் மௌரசு
யங் (Maurus Young), துணைத்தலைவர் எர்னசுடோ கான் (Ernesto Kahan) அவர்கள் உலகக் கவிஞர்களை வரவேற்றனர்.
31ம் உலகக் கவிஞர் மாநாட்டுத் தலைவர் மேரிஆன் லாகோவிச் (Marian Lakhovich) அடுத்த நாள் ஏற்பாடுகள் குறித்து கவிஞர்களிடம் உரையாடினார்.
அமெரிக்க ஃகவாய் தீவின் ஃகூலா நடனத்தை சிறப்பாக ஃகவாய் நடனமாடினார்கள்.
உலகக் கவிஞர்கள் அமெரிக்க மண்ணின் சிறப்பு நடனத்தை கண்டு மகிழ்ந்தனர்.
31 – ஆம் உலகக் கவிஞரக்ள் மாநாடு கெனொசாவில் 28-8-2011 முதல் 3-9-2011 வரை நடைபெற்றது. 27ம் நாள் வந்திருந்த உலகக் கவிஞர்கள் தங்கள் தங்கள் பெயர்களை உரிய கட்டணத்தைச் செலுத்திப் பேராளர்களாகப் பதிவு செய்து கொண்டனர்.
கெனொசா உணவகத்தில் அமெரிக்க ஃகவாய்த் தீவின் பாராம்பரிய நடனமான ஃகூலா நடனத்துடன் அறிமுக விருந்தும்- பன்னாட்டுக் கவிஞர்கள் சந்திப்பும் சிறப்பாக நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது உலகநாட்டுக் கவிஞர்களும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்கள் சகோதர பாசத்தைப் புதுப்பித்துக் கொண்டனர்.
.கவி.
Sunday, September 4, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment