Sunday, September 4, 2011

அமெரிக்காவில் 31ம் உலகக் கவிஞர் மாநாடு, கொனொசா - தமிழ்க் கவிஞனின் இந்தியக் கொடியுடன் கவிஞர் அணிவகுப்பு

அமெரிக்காவில் 31ம் உலகக் கவிஞர் மாநாடு, கொனொசா - தமிழ்க் கவிஞனின் இந்தியக் கொடியுடன் கவிஞர் அணிவகுப்பு

29-8-2011 ஆம் நாள் கெனொசாவின் கார்ட்ஃக்ச்(CartHage) கல்லூரியில் தொடக்க விழா நடைபெற்றது. இந்தமாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, சீனா, சப்பான், ஆசுதிரியா போன்ற 21 நாடுகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பன்மொழிக் கவிஞர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாத் தொடக்கத்தில் அனைத்து நாட்டுக் கொடிகளையும் அந்தந்த நாட்டுக் கவிஞர்கள் முன் நின்று அவர் நாட்டுக் கொடிக்கும், அனைத்து மக்களுக்கும் மரியாதை செய்தது பிரமிப்பை ஏற்படுத்தியது.

இந்திய தேசக் கொடியை நம் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தமிழருக்கான பாரம்பரியப் பண்பாட்டு உடை அணிந்து இந்தியக் கொடியைக் கம்பீரமாகப் பிடித்து பன்னாட்டுக் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டது மாநாட்டின் கண்கவர் அம்சமாகவும் கண்கொள்ளாக் காட்சியாகவும் அமைந்தது.

இந்த உலகக் கவிஞர் மாநாட்டின் கருப்பொருள் “உலக அமைதி-மனிதநேயம் உலக மக்கள் ஒருமைப்பாடு” என்ற பொருள் பற்றியதாகும். இக்கருத்துக்கள் பற்றிய இசைப்பாடல்கள் இசைக்கப்பட்டன.

.கவி.

1 comment:

அம்பாளடியாள் said...

இந்திய தேசக் கொடியை நம் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தமிழருக்கான பாரம்பரியப் பண்பாட்டு உடை அணிந்து இந்தியக் கொடியைக் கம்பீரமாகப் பிடித்து பன்னாட்டுக் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டது மாநாட்டின் கண்கவர் அம்சமாகவும் கண்கொள்ளாக் காட்சியாகவும் அமைந்தது.

இது இந்திய தேசத்திற்குப் பெருமை சேர்த்த விசயம்.கவிஞர் சேதுராமன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ........

Post a Comment