Sunday, March 29, 2009

திமுக ஆதரவாளர் என்று நிந்திக்கும் தோழர் கவனத்திற்கு

திமுக ஆதரவு என்று என்னை/எங்களை நிந்திக்கும் அன்புத் தோழர்களே

என்னை / எங்களை அறிந்தவர் அறிவர்.

நாங்கள் என்றும் மறைத்ததில்லை.

நாங்கள் எவர் என்றும் 'பார்ப்ப' தில்லை.

தமிழுக்கு/ தமிழினத்திற்கு என்றால் எங்கள் ஆதரவு என்றும் இருக்கும்.

அது எவராயினும் சரி.

எதிர்த்து எம்மையே அழிக்கத் துடிக்கும், எம் நண்பர்களுக்கும், எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.

தாயின் ஈரக்குலையை, காதலிக்கு வெட்டி எடுத்துச் சென்ற மகனின் கதை நினைவுள்ளதா தோழர்களே? கல் தடுக்கிய மகனைக் கண்டு பதறிய ஈரக்குலைத் தாய் நாங்கள் தோழர்களே.

தன் பிறப்பையும், மனையாளின் கற்பையும் சந்தேகிப்பது எளிது தானே தோழா? நம்பிக்கை தான் அதன் மூலம்.

எங்களை எதிர்க்கும் எம் தமிழின நண்பர்களை ஒழிக்கும் கோட்பாட்டில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

ஐம்பது காலத் தமிழ் உணர்வைப் பல அரசியல் மாற்றங்களுக்கிடையும் இன்றும் களத்தில் இறங்கிப் போராடும் வழியில் வந்தவர்கள் நாங்கள்.

நெருக்கடி நிலை / இராசிவ் மரணம் எனப் பல தமிழின உணர்வு அழிப்பு நிகழ்வுகளையும் மீறி எப்படி எங்கள் மண்ணில் இந்த அளவாவது தமிழ் உணர்வு தழைத்தோங்குகிறது என்று எண்ணுகின்றீர்கள்.

மந்திரத்தில் மாங்காய் காய்க்கவில்லை தோழர்களே

மற்றவரின் பணிகளை அறிய மறுப்பது அல்லது மறப்பது.

இது தான் தமிழினத்தின் மிகப் பெரிய வீழ்ச்சி.

திரை தவிர்த்த எத்தனை தமிழ் அறிஞர்களுக்கு நாம் உதவியுள்ளோம். சிந்தித்துப் பாருங்கள். தமிழுக்காக தன்னையே அர்ப்பணிக்கும் அவரின் தேவையைப் பூர்த்தி செய்பவர் யார்? பொருளாதார வசதி படைத்த நாம் அவருக்கு உதவியிருக்கலாமே? உதவினோமா? நீங்கள் அளித்த ஒரு சில பத்து/நூறு டாலருக்காக, அறிஞர்கள் உங்களுக்கு விலை போய்விட்டார் என்று பேசுவதும்/எழுதுவதும் சிறுமைத் தனம் தானே தோழர்களே.

இது தான் நிசம் தோழர்களே. எவரும் ‘பொம்மலாட்டி பொம்மைகள்' அல்ல, நம் நூலிழையில் ஆடுவதற்கு.

நீங்கள் களத்தில் போராடுபவர்களின் தேவைகளை அறிய முயற்சிப்பதும் இல்லை. ஆதரிப்பதும் இல்லை.

மாடப் புறாவக இருந்து சிந்திக்காமல், மண் புறாவாக மாறிச் சிந்திக்க வேண்டும் தோழா, அப்போது தான் அந்த வலிகள் புரியும். மிகக் குறைந்த பட்சம் அந்த மண்புறாக்களுக்கு வாழ உதவும் வள்ளலாக இருந்து பாருங்கள் தோழர்களே, வங்கியில் இருக்கும் காசு வழியில் இறைக்கப் படும் போது தான் வலி புரியும்.

பிரெஞ்சுப் புரட்சியில் அரசியின் “ரொட்டித்துண்டு” வசனம் நினைவில் உள்ளதா தோழா? அந்த அரசி தவறாகப் பேசவில்லை, அறியாமையில் பேசினார், ஏனெனில், அந்த மாடப் புறா களத்தில் மக்களுடன் வாழவில்லை, அதனால் மக்களின் வலி அறியவில்லை.

1991லிருந்து இன்று வரை ஈழத் தமிழர் ஆதரவு எப்படி தமிழ் மண்ணில் மீண்டும் நிலை நிறுத்தப் பட்டது என்று நினைக்கிறீர்கள்.

நீங்கள் வேரை மறுக்கலாம், மறந்திருக்கலாம். எங்களால் முடியாது, ஏனெனில் அந்த வேரை சில 'தன்மானத் தமிழர்' வெட்டி எறிய முயன்ற போது, எங்கள் உழைப்பை எங்கள் கைக் காசை இழந்து போற்றிப் பாதுக்காத்த சிறுகூட்டத்தில் சிலர் நாங்கள். இது போன்ற பல சிலர் உள்ளனர். மாடப் புறாக்களுக்கு அறிய வாய்ப்பில்லை தானே தோழர்களே.

இக்கரையிலிருந்து அக்கரை பச்சையாகத் தான் தெரியும். அக்கரையில் உள்ளவர்களின் அக்கரையின் கறைகளை அறிய/ அகற்ற முயலலாமே.....

மேலும் மேலும் எழுதலாம். எப்படியும் பின்னூட்டலில் மீண்டும் நிந்திக்கப் படுவோம். அப்போது தங்களுக்கு மீண்டும் விளக்குகின்றேன் :)

உடல்,உள்ளம், பொருள் என எல்லாவற்றையும் இழந்து ஈகைத் தியாகம் செய்யும் மண் எம்மண்.

தி. மு.க. வை ஆதரித்து எழுதினால், இப்படித்தான் பதில் வரும் என நான் எதிர்பார்த்ததே, அதனால் எனக்கு வலியில்லை :)

71ல் இருந்தே இதே நிலை தான், ஆட்களும் / நிலைகளும் தான் மாறுபடுகின்றன. என்னுடைய மடலில் தோழர்களை நிச்சயம் நான் சிறுமைப் படுத்த வில்லை. அது எனது நோக்கமுமல்ல.

தன் இனப் பெரியோர்களை மற்றவர்கள் எப்படி மதிக்கின்றார்கள். நாம் வளர்ந்தவுடன் முதலில் எட்டி உதைப்பது நம் இனப் பெரியோர்களை. திருந்த வேண்டாமா தமிழினம்? குறிப்பாக அமெரிக்கத் தமிழரின் மாடப் புறா மனப்பான்மையில் மாற்றம் வேண்டாமா?

ஈழம் குறித்து கலைஞரை எதிர்க்கும் நிலையில் எனக்கு உடன் பாடில்லை. ஈழத்திற்கு எப்படி நாம் ஈழத்தவர் தேர்ந்தெடுக்கும் தலைவரை ஏற்கின்றோமோ, அதே போல் ஈழத்தவர் தமிழர்களின் தமிழகத் தலைவரை ஏற்க வேண்டும். ஏற்க மறுப்பது ஈழத்தவரின் / ஈழ ஆதரவாளரின் பெரும் தவறு என்பது என் கருத்து. தமிழக அரசியலில் ஈழத்தவர் அவசியமில்லாமல் நுழைவது ஈழத்து விடுதலையில் தொய்வு ஏற்பட ஏதுவாகும்.

துடிப்பான இளைஞர்கள் நமது சமுதாயத்தின் இன்றைய தேவை. அன்பு கூர்ந்து பின் நோக்கிப் பார்த்து பின் பயனியுங்களேன்.

நாம் நடக்கும் இந்தப் பாதை எத்தனை பெரியோர்களால் வழிவழியாக செப்பனிடப்பட்டது என்பதை நாம் உணர்ந்தோமானால் நமக்கும் நல்லது, நமது சமுகத்திற்கும் நல்லது. அதை உணராமல், கண்ணாடி மாளிகைக் கல் எறிதலால் யாருக்குப் பயன்?

”யாகாவா ராயினும் கைகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு”

எங்களை நிதானித்து நிந்தியுங்கள் தோழர்களே!

நட்புடன்
.கவி.

Tuesday, March 10, 2009

மொழியும் ஆன்மிகமும்

ஒரு மதம் பல்கிப் பெருக வேண்டுமெனில் அந்த மதம் உதித்த மொழியை/இனத்தைத் தியாகம் செய்ய வேண்டும்.

பீகாரில் உதித்த பௌத்தம் சீனா, சப்பான் வரை பரவியது,

மொழி என்ற சுமை இல்லாததனால் என்பதே என் கருத்து.

ஆன்மிகத்தையும் ஆரியத்தையும் இணைப்பது ஆன்மிகவாதிகளை அந்நியப்படுத்தும்.

பல முறை குறிப்பிட்டேன், மீண்டும் குறிப்பிடுகிறேன்.

ஆண்டாள், அப்பர், மாணிக்கவாசகர், என அன்பர் கூட்டம் ஆன்மிகத்தை எந்த அந்நிய மொழியின் உதவியில்லாமல் வளர்த்திருக்கும் போது, நாம் மட்டும் ஏன் அதை மறுக்க வேண்டும்.

தமிழில் சரியான பயிற்சி இல்லை அதனால் பிறமொழி எழுத்துக்கள் எனக்குத் தேவை என்பதற்கும், மொழியால் இயலாது என்று கூறுவதற்கும் வேறுபாடு உண்டு தானே...

மொழிப் பயிற்சி இல்லை என சொல்வது என்ன தடையாக இருக்க முடியம்

நான் இந்தி தேசத்தில் வாழும் அளவு இந்தி கற்றுள்ளேன், அதனால் நான் இந்திப் பண்டிதன் ஆக முடியாது தானே, இந்திப் பண்டிதன் ஆக நான் இந்தியில் மேல் பயிற்சி கொள்ளாமல் இந்தியால் முடியாது என்று சொல்வது சரியாகுமா? ‘ழ’ , ‘ற’ தேவநகரியில் இல்லை என்பதற்காக தமிழ் எழுத்தையா தேவநகரியிலேயோ, ஆங்கிலத்திலேயோ சேர்த்தோம், இல்லையே.

ஆக தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்குச் சென்றால், அந்த மொழிக்கேற்ப மாற்றி எழுதலாம், ஆனால் பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு வரும்போது அந்த மொழியின் எழுத்துக்கள் சிதையாமல் தமிழில் எழுத வேண்டும் என்பது ஏற்கக்கூடிய வாதமா இல்லையே...

அன்புடன்
.கவி.

Sunday, March 8, 2009

தேவையா மகளிர் தினம்..?

தேவையா மகளிர் தினம்..?


என் அக்கா ஜனித்த போது தான்
அன்னை முகம் வாடினாள் - ஆம்
பாட்டி முதலே பெண்ணா என
அன்னை முகம் திருப்பி அழுதாள்


என் தங்கை உதித்த போது தான்
பால் தராமல் காக்கப் போராடினாள்- ஆம்
கள்ளிப் பால் தராதே என
அன்னை கதறிப் போராடினாள்


என் அக்காளுக்கு மாமன் கட்டிய
தாலியை கண்டு மகிழ்ந்த நான்
மாமனுக்கு அக்காள் கட்ட வேண்டிய தாலியை
இன்றும் தேடிக் கொண்டுருக்கின்றேன்


என் பாட்டன் மறைந்தது முதல் பாட்டி
கட்ட மறந்த பட்டுச் சேலைகளையும்
வைக்க மறந்த சிவப்புப் பொட்டினையும்
சூட்ட மறந்த பூவினையும் என்ன செய்வதென அறியாமல்


மகளிர் நாள் மாற்றம் தரும் நாளோ என
மாறுதலுக்காக காத்திருந்தேன்
மகளிர் தினம் வந்து போனது பலமுறை
மாற்றம் எந்த நாள் என இன்றும் தேடுகிறேன்...


தாயாக தாரமாக தன்னுயிர் மகளாக
தமக்கையாக, தங்கையாக என்னுள் இணைந்த
எம்மகளிர் இதை நிறுத்தவியலா நீயொரு
ஆண்மகனா எனக் கேலியுடன் நோக்க

ஆம் தோழர்களே! எனக்குத்
தேவையே இந்த மகளிர் தினம்!!!
என் இனத்தைப் பெருக்கும் என் பேத்தி
என்னை ஆண் மகன் என்று ஏற்கும் வரை!!!!!!!!!!


.கவி.



( எதிர்மறையாக எழுத வேண்டும் என எழுதவில்லை,

தங்களின் கருத்தையே என் மனையாளும் சொன்னார் ஏன் முழுக்க எதிர் மறை என்று....

ஆனால் சில உண்மைகள் எதிர்மறையாகத் தானே உள்ளன, நாம் மாற வேண்டுமெனில் அவற்றை உணர்ந்து தானே ஆக வேண்டும் என்றதும் சரி என ஒப்புதல் தந்த விட்டார், தாங்களும் இக்கருத்தை ஏற்பீர்கள் என நம்புகின்றேன் )

Why not deprecate ஸ்ரீ

Dear Friends

This post is a technical cum language post on why not deprecate ஸ்ரீ

Implementing in Unicode is a simple on changing the key sequences on rendering and hence I believe it is possible.

ஸ்ரீ is mostly used for non-tamil words representation.

Here are equivalance for known ஸ்ரீ implementations :

ஸ்ரீ => திரு / அருள் (அருள் பெற்றவரை விளிக்கும் போது)

ஸ்ரீரங்கநாதர் => அருள்மிகு அரங்கநாதர்

ஸ்ரீமான் => அருள்மான்

ஸ்ரீமதி => அருள்மதி

ஸ்ரீசக்கரம் => அருள்சக்கரம்

ஸ்ரீலங்கா => சிறிலங்கா

ஸ்ரீகாந்த் => சிறிகாந்த்

ஸ்ரீதர் => சிறிதர்


அன்புடன்
.கவி.

Tuesday, March 3, 2009

தமிழக அரசியல் வாதிகளும் அவர்களின் ஈழ ஆதரவு நிலையும்

தேர்தல் - 2009

தமிழக அரசியல் வாதிகளும் அவர்களின் ஈழ ஆதரவு நிலையும்

இந்தச் சூழலுக்கு மிகப் பொருத்தமானது.

ஏமாற்றுபவர்களை எளிதில் அடையாளம் காணலாம் தானே.......

சிறுத்தைகள்,ம.தி.மு.க., பா.ம.க., வலது கம்யூனிஸ்ட், தி.மு.க., இடது கம்யூனிஸ்ட்,பா.ஜ.க., அ.தி.மு.க.காங்கிரசு ஆகியோரைத் தனித் தனியாக அழைத்துக் கேளுங்களேன்.

இந்தக் கேள்வியை நீங்கள் ஓட்டளிக்க விரும்பும் ஒவ்வொரு வேட்பாளரிடமும் கேளுங்கள், பின் ஆதரவு நிலை அறியுங்கள்.

“திடீர் ஆதரவு வேடதாரிகளை அறியுங்கள்”

1. 1975 நீங்கள் மத்திய ஆட்சியில் பஙகு பெற்றீர்களா/ ஆதரவளித்தீர்களா? ஆட்சியில் இருந்த காலத்தில் நீங்கள் ஈழச் சிக்கல் தீர உங்களின் பங்கு

2. 1980 நீங்கள் மத்திய-மாநில ஆட்சியில் பஙகு பெற்றீர்களா/ ஆதரவளித்தீர்களா? ஆட்சியில் இருந்த காலத்தில் நீங்கள் ஈழச் சிக்கல் தீர உங்களின் பங்கு

3. 1987, சூலை நீங்கள் மத்திய ஆட்சியில் பஙகு பெற்றீர்களா/ ஆதரவளித்தீர்களா? அமைதி ஒப்பந்தத்தில் / புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று முடிவெடுத்ததில் உங்களின் பங்கு

-------எம்.ஜி.ஆர். மறைவு திசம்பர் 24 1987--------

4. 1991, மே நீங்கள் மத்திய ஆட்சியில் பஙகு பெற்றீர்களா/ ஆதரவளித்தீர்களா? ராசிவின் மரணத்திற்கு முன்னும் / பின்னும் நடந்த நிகழ்வுகளில் உங்களின் பங்கு

5. 1991- முதல் 1996 ம் வரை, மத்திய ஆட்சியில் பஙகு பெற்றீர்களா/ ஆதரவளித்தீர்களா? ராசிவின் மரணத்திற்கு பின்னர் 1991- 1996 ல் நீங்கள் நடத்திய ஒரு புலி / ஈழ ஆதரவு நிகழ்வும் தேதியும்.

6. 1996- முதல் 2004 ம் வரை, மத்திய ஆட்சியில் பஙகு பெற்றீர்களா/ ஆதரவளித்தீர்களா? உங்களின் பங்கு

7. 2004 முதல் இன்றுவரை மத்திய ஆட்சியில் பஙகு பெற்றீர்களா/ ஆதரவளித்தீர்களா? உங்களின் பங்கு

8. 1970லிருந்து இதுவரை எத்தனை ஆண்டு மத்திய ஆட்சியில் பங்கு பெற்றீர்கள். ஈழச்சிக்கலிலைத் தீர்க்க ஆட்சியாளராகத் தங்கள் பங்கு

(அதிமுக / திமுக சிறப்புக் கேள்விகள்)

9. 1975லிருந்து இதுவரை எத்தனை ஆண்டு மாநில ஆட்சியில் பங்கு பெற்றீர்கள். ஈழச்சிக்கலைத் தீர்க்க ஆட்சியாளராகத் தங்களின் / தங்கள் இயக்கத்தின் பங்கு

(சிறு கட்சிகளுக்கு)
10. 1975லிருந்து இதுவரை எத்தனை ஆண்டு மாநில ஆட்சியில்/ ஆதரவுக் கட்சியாக் , கூட்டணிக் கட்சியாக பங்கு பெற்றீர்கள். ஈழச்சிக்கலைத் தீர்க்க ஆட்சியாளராகத் தங்களின் / தங்கள் இயக்கத்தின் பங்கு

உங்கள் ஓட்டு வேட்பாளரின் / கட்சிகளின் ஈழ ஆதரவைப் பொருத்தே அமையும் என்று தெளிவுபடுத்துங்கள்...

அன்புடன்
.கவி.