Wednesday, April 27, 2011

ஐ நா முழு - இறுதி அறிக்கை

ஐ நா முழு - இறுதி அறிக்கை

இந்த இரத்தம் தோய்ந்த விழிகள் என்று உலரும்?

ஐ நா முழு - இறுதி அறிக்கைக்கு இங்கே சொடுக்குக





.கவி.

Sunday, April 24, 2011

கௌதமரின் கண்ணீர்

கௌதமரின் கண்ணீர்



அனைத்துக் கட்சியின் ஆதரவுடன் நடந்து, மிகப் பெரிய எழுச்சி உண்டாக்கிய போராட்டங்கள்.

தமிழர் மீண்டும் இணைந்து ஈழ ஆதரவை வெளிப்படுத்தும் நன்னாள் எந்நாள்?

தொடரும் ஈழச் சிக்கலும்- தமிழகப் போராட்டங்களும் -1

Tuesday, April 12, 2011

தமிழகத் தேர்தல் 2011 - உதயசூரியனுக்கே உங்கள் வாக்கு

தமிழகத் தேர்தல் 2011 - உதயசூரியனுக்கே உங்கள் வாக்கு

இனிய தமிழரே

உங்களை அடுத்த ஐந்து ஆண்டுகள் வழி நடத்தும் தகுதி, தலைமையுடயை ஒரே சின்னம் உதயசூரியனே என்பது தெளிபு.

தகுதியான வேட்பாளர், வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் உங்கள் தொகுதியில் போட்டியிட்டால் முதலில் அவருக்கு வாக்களியுங்கள். கட்சி சார்பின்றி வெற்றி வாய்ப்புள்ள தகுதியுள்ள தமிழ் இன ஆர்வலருக்கு தாங்கள் வாக்களித்து வெற்றியடையச் செய்ய வேண்டியது தங்கள் முதல் கடமை.


உங்கள் வாக்கு வீணாகக் கூடாது, நீங்கள் வெற்றி பெற இயலாதவருக்கு வாக்களித்தால், தமிழ் எதிரிகள் வெற்றி பெற ஏதுவாகிவிடும் என்பதையும் கவனத்தில் கொண்டு சீர் தூக்கி வாக்களியுங்கள்.

கீழ்வரும் சின்னங்களை நமது தமிழ்க் கூட்டணி வேட்பாளர்கள் என உறுதி செய்து உங்கள் பொன்னான வாக்கை அளியுங்கள்.





வெற்றி பெறக்கூடிய நாம் தமிழர் வேட்பாளர்கள்.



தாங்கள் வாக்களிக்கும் தொகுதியில் தாங்கள் அளிக்கும் வாக்கு கலைஞர் ஆட்சி அமைக்கும் வண்ணம் அமைவது முக்கியம் என்பதைக் கவனத்தில் கொள்க.

மனம் தளர்ந்து இருக்கும் மதிமுக அன்பர்களை அரவணைத்து அழைத்துச் செல்க!!!!

வாழ்க அமைதிப் புரட்சி.
வளர்க சனநாயகம்.

நட்புடன்
.கவி.

தமிழகத் தேர்தல் 2011 - வாக்குச் சாவடிக்கு செல்லும் முன் இந்த ஒலிப்பேழையைக் கேளுங்களேன்

தமிழகத் தேர்தல் 2011 - வாக்குச் சாவடிக்கு செல்லும் முன் இந்த ஒலிப்பேழையைக் கேளுங்களேன்
ஆறாவது முறை முதல்வரானால்...(ஒலிப்பதிவு)

ஆணவப் போக்கு - அண்ணன் வைகோ (ஒலிப்பதிவு)

ஏன் உரிமையுடன் வாக்குக் கேட்கிறோம் - தளபதி ஸ்டாலின் (ஒலிப்பதிவு)

மன்மோகன் உரை - பொருளாதாரத்தில் முதல் மாநிலம் -பொருளாதார நிபுணர்கள் கணிப்பு!!! (ஒலிப்பதிவு)

ஈழம் - கலைஞரின் உரை(ஒலிப்பதிவு)


ஈழம் - சோனியாவின் உறுதிமொழி(ஒலிப்பதிவு)

தளபதி ஸ்டாலின் (ஒலிப்பதிவு)

கனிமொழி (ஒலிப்பதிவு)


தளபதி ஸ்டாலின் (ஒலிப்பதிவு)

நட்புடன்
.கவி.

தமிழகத் தேர்தல் 2011 - யாருக்கு வாக்கு? - 3 - இழவு வீட்டில் வாக்குக் களவாடியவருக்கா? மீண்டுமா?

தமிழகத் தேர்தல் 2011 - யாருக்கு வாக்கு? - 3

இழவு வீட்டில் வாக்குக் களவாடியவருக்கா? மீண்டுமா?

அன்புத் தமிழ்ச் சொந்தங்களே


விடுதலை இந்தியாவில் மூன்று இனங்கள் இந்தியாவின் அண்டை நாடுகளில் பிரிந்து வாழ்ந்தன, பஞ்சாபியர், வங்காளியர். வங்காளிகள் மதத்தின் பேரால் பிரிக்கப்பட்டு, பின்னர் இந்திராவின் துணிவால் தனக்கென ஒரு நாடும் பெற்றனர்.

பஞ்சாபியரின் உணர்ச்சித் தவறு அவரின் விடுதலை வேட்கைக்கு முற்றுப் புள்ளியானது.

நம் தமிழ் இனம் விடுதலைக்கு முன்னரே இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டோம். விடுதலை இந்தியாவில் சமுக ஏற்றத் தாழ்வுகள் இருப்பினும் கூட அரசியல் உரிமைகள் பெற்றே வாழ்கிறோம்.

அங்கும் இங்கு நடக்கும் ஓரிரு அதிகார வர்க்கத் தவறுகள் அரசியல் தவறுகள் ஆகாது. அவற்றைக் களை எடுப்பது இன்னும் சாத்தியமே. நம் இனம் ஒன்று பட்டிருந்தால்.

பல்லாண்டுகளாக நடைபெறும் தமிழ் இனப் போராட்டத்தில், இந்திய அரசு, இந்திய அரசுக் கட்டிலில் அமர்ந்திருந்தவர் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தடுக்கவில்லை என்ற கறை இந்திய அரசின் மேல் படிந்துள்ளது என்பதே இன்றைய நிஜம்.


2009 பாராளுமன்றத் தேர்தலில், அதுவரை தமிழ் எதிரிகளாக இருந்தவர்கள், சந்தர்ப்பவாதிகளாக மாறி நமது வாக்குகளைக் கவர்ந்தார்கள். கவர்ந்து வெற்றி பெற்றவர்கள் இரு ஆண்டுகளாகச் சாதித்தது என்ன?

ஈழ மக்களுக்காக எத்தனை முறை பாராளுமன்றத்தை முடக்கினார்கள்?

2011 தேர்தலில் ஈழத்தைப் பற்றிப் பேசக் கூட தயங்குவது மட்டுமல்லாமல், ஈழ ஆதரவே வேண்டாமென அண்ணன் வைகோவை அம்போ வென அவிழ்த்து விட்டனர். நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் கயமையை மீண்டும் ஒரு முறை நடத்திக் காட்டியுள்ளனர்.

நாம் தமிழர் தலைவர் சீமான், மற்றும் அயல்நாட்டில் வாழ் தமிழ் அன்பர்களின் பேராயக் கட்சி எதிர்ப்பில் ஓர் நியாயம் உள்ளது.

காயம் பட்ட நமது உள்ளங்கள் ஆறும் வகையில் இன்னும் பணிகள் ஆற்றப்படவில்லை.

2009ல் இழவு நேரத்தில் நமது வாக்குகளை களவாடிய அதிமுக, நமது வாக்குகளை இழந்து பல தொகுதிகளில் தோல்விக்கு உள்ளான பேராயக் கட்சி இவற்றில் எவருக்கு இம்முறை ஓட்டுப் போடுவது?

பேராயக் கட்சி போட்டியிடும் இத் தொகுதிகளில் நாம் தமிழர் வெற்றி பெறும் வகையில் வியூகம் அமைத்திருந்தால் எமது முதல் ஓட்டு சீமானுக்கே!!!

இன்றைய நிலையில் சீமானுக்குச் செல்லும் ஒவ்வொரு ஓட்டும் இழவு வீட்டில் வாக்கைக் களவாடியது மட்டுமன்றி, அவர் உறவையும் இன்று ஒட்டு மொத்தமாக அறுத்துக் கொண்ட செல்வி செயலலிதா முதல்வராக வாய்ப்பாக அமையும் என்பதை அரசியல் பாலகரே அறிவர்.

http://kavise.blogspot.com/2011/04/2011-1_10.html

இத் தேர்தலில் சோனியா ஈழச் சிக்கலைப் பற்றி குறிப்பிடுவதைத் தவிர்க்கவில்லை. இந்தத் தேர்தலில் நாம் காங்கிரசிற்கு வாக்களித்தாலும் அவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதையும் நான் அறிவேன், இருப்பினும் ஏமாற்றும் செயலலிதா, இன்னும் வாய்ப்பிருக்கும் சோனியா, இருவரில் எவர் ஈழத் தமிழருக்கு சாதிக்க இயலும் என்பதை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்.

பேராயக் கட்சி இழக்கும் ஒவ்வொரு தொகுதியும், செல்வி செயலலிதா ஆட்சிக்கட்டிலில் ஏறச் செய்யும் படிக்கற்கள் என்பதை என்னைப் போல் நீங்களும் உணர்ந்தே இருப்பீர்கள்.

மதிமுக, நாம் தமிழர் போன்ற தமிழ் உணர்வுக் கட்சிகள் அதிமுகவிற்கு மாற்றாக வரும் வரை இந்த நிலை நீடிக்கும்.

பேராயக் கட்சியின் தமிழ் எதிரிகளை அண்ட விடாதீர்கள். பேராயக் கட்சியின் வேட்பாளர்களில் தமிழ் எதிரிகளை அடையாளம் கண்டு அவர்களை தோற்கடியுங்கள். அடையாம் காணப் பெற்ற அந்த ஒரு சில தொகுதிகளில் நாம் தமிழர் இயக்கத்தின் போர் வாள்களை வெற்றி பெறச் செய்யுங்கள்.

அந்த அடையாளம் காணப்பட்ட ஒரு சில தமிழ் எதிரிகள் தவிர மற்ற பேராயக் கட்சியினரை “கை” சின்னத்தில் ஆதரித்து, “இழவு வீட்டில் வாக்குக் களவாடி இரண்டு வருடங்களாக ஏமாற்றிய” செல்வி செயலலிதா ஆட்சிக் கட்டிலில் ஏறுவதைத் தடை செய்வோம்.

பேராயக் கட்சி போட்டியிடும் தொகுதிகளில்



1. தமிழ்/தமிழர் எதிரி என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட பேராயக் கட்சி வேட்பாளர்கள் தோற்கடிப் பட வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த ஒரு சில தொகுதிகளில் மட்டும் வெற்றி வாய்ப்புள்ள நாம் தமிழர் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளியுங்கள்.

2. மற்ற அனைத்துப் பேராயக் கட்சி போட்டியிடும் இடங்களில் “கை” சின்னத்தில் வாக்களியுங்கள். பேராயக் கட்சியானாலும் தமிழ்/ தமிழர் ஆதரவும் அவர் வெற்றிக்குத் தேவை என்பதை புலப்படுத்துங்கள்.

சிந்திப்பீர் செயல்படுவீர்.

நட்புடன்

.கவி.

Monday, April 11, 2011

தமிழகத் தேர்தல் 2011 - காரியமும் முடிந்தது. இனிக் காரியத்தில் ஈடுபடுங்கள் : அண்ணன் வைகோ

தமிழகத் தேர்தல் 2011 - காரியமும் முடிந்தது. இனிக் காரியத்தில் ஈடுபடுங்கள் : அண்ணன் வைகோ

அன்று வேலூர்ச் சிறையில் அடைத்து முடக்கினார். இன்று வீட்டினுள் அடைத்து முடக்கினர்.


மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பது முதுமொழி.

அண்ணன் வைகோவை ஐந்து வருடங்கள் பயன்படுத்தி, பலன் பெறும் நேரத்தில் வெட்டிச் சாய்த்தார்.

ஒட்டாத மெர்க்குரியாகவே அண்ணன் வைகோவைப் பயன்படுத்தினார் என்பதை நம்மைப் போல் பலர் அறிந்தும், கூடா நட்பு செய்த கொடுமையின் காரண் இன்று தனி மரமாக்கப்பட்டார்.

ஓரிரண்டு இடத்திற்காக அணி மாறிய வைகோவை ஓரிலக்க இடம் தருவதாகக் கூறி, இயக்கத்தையே குலைக்கப் பார்த்தார் அம்மையார்.

அண்ணன் வைகோ பெற்ற அவமானத்திற்குச் சன்மானம் செல்வி செயலலிதாவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதா?

மதிமுக உடன்பிறப்புக்கள் சிந்திக்க வேண்டும்.

அண்ணன் வைகோவின் வாசகங்களில் “ஆணவப் போக்கிற்கு” என்ன அடி நீங்கள் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்.

உங்களை ஒதுக்கியவருக்குப் புத்தி புகட்டுங்கள்.



கலைஞர் அணி வெற்றி பெறுவதன் மூலம், உங்களை ஒதுக்கியது இமாலயத் தவறு என்பதை உணர வையுங்கள் உடன்பிறப்புக்களே.

காரியம் முடிந்தது. இனிக் காரியத்தில் ஈடுபடுங்கள். புறப்படுங்கள் வாக்குச்சாவடிக்கு.

நட்புடன்
.கவி.

தமிழகத் தேர்தல் 2011 - யாருக்கு வாக்கு? - 2

தமிழகத் தேர்தல் 2011 - யாருக்கு வாக்கு? - 2

நண்பர்களே


பாரபட்சம் இல்லை, என்று தேர்தல் ஆணையம் ஒரு புறம். பாரபட்சம் உள்ளது போல் செய்தி ஏடுகளில் வெளிவரும் செய்தி மறுபுறம். நிச்சயம் தேர்தலுக்குப் பின் ஆய்வு செய்ய வேண்டிய ஒன்று.

பாரபட்சமின்றி வெளியிடப்படும் கருத்துக் கணிப்புக்களில் பாமகவிற்கு 7 எண்ணிக்கை மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.

திமுகவிற்கு 70 இடங்கள் என்ற கணிப்பு உண்மை என்று எடுத்துக் கொண்டால், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் இணைந்து ஐம்பது தொகுதிகள் எடுத்தாலே கலைஞர் முதல்வர், விகடன் கருத்துக் கணிப்பின் படி.

எனவே தோழமைக் கட்சிகள் வி.சி.,பா.ம.க., கொ.மு.க. நிதானத்துடன் ஆதரித்து நூற்றுக்கு நூறு வெற்றி பெறச் செய்தல் அவசியமாகிறது.

பாமகவின் தமிழ் உணர்வில் நம்பிக்கை இல்லாத தமிழர் இருப்பது சற்றே கடினம்.

தமிழ் உணர்வு முதன்மை யெனில் திமுகழகம், விடுதலைச் சிறுத்தைகளைத் தொடர்ந்து பாமக பங்கு வகிக்கும் என்பதில் ஐயம் இருக்காது.


ஆக தமிழ் / தமிழர் என்ற உணர்வு செழிக்க வேண்டுமெனில் பாமகவிற்கு ஆதரவு தருவதும் அவசியமாகிறது.

சிந்திப்பீர். செயல்படுவீர்.

நட்புடன்

.கவி.

தமிழகத் தேர்தல் 2011 - பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதல் மாநிலம்

தமிழகத் தேர்தல் 2011 - பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதல் மாநிலம்.

மன்மோகன் உரை - பொருளாதாரத்தில் முதல் மாநிலம் -பொருளாதார நிபுணர்கள் கணிப்பு!!! (ஒலிப்பதிவு)


உலக அளவில் மிகப் பெரும் பொருளாதார நிபுணராக மதிக்கப்படும் இந்தியப் பிரதமர் திரு. மன்மோகன் சிங், கலைஞரால் நடத்தப் பெற்று வரும் தமிழக அரசு பொருளாதார வல்லுநர்களால் இந்தியாவின் முதன்மை அரசாக தரமிடப் பட்டதை பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இலவசங்கள் பல அளித்தும், தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை இந்தியாவின் முதன்மை மாற்றிய கலைஞர் “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற தத்துவத்தை இந்தியாவின் மற்ற மாநில முதல்வர்களுக்கு ஓர் எடுத்துக் காட்டாகவும் திகழ்கிறார்.
மன்மோகன் உரை - பொருளாதாரத்தில் முதல் மாநிலம் -பொருளாதார நிபுணர்கள் கணிப்பு (ஒலிப்பதிவு)


தமிழகத்தை இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலகில் அளவில் தலை சிறந்த முதன்மைப் பகுதியாக்க சிந்தித்துச் செயல்படுவீர்!!!!

நட்புடன்
.கவி.

Sunday, April 10, 2011

தமிழகத் தேர்தல் 2011 - தேர்தல் ஆணையம் எல்லை மீறுகிறதா?

தமிழகத் தேர்தல் 2011 - தேர்தல் ஆணையம் எல்லை மீறுகிறதா?

கலைஞரின் உரை - எல்லை மீறுகிறதா?(ஒலிப்பதிவு)

தமிழகத்தின் தேர்தல் 2011 பல விசித்திரங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

அவற்றில் ஒன்று தேர்தல் ஆணையம் எல்லை மீறிய அடக்குமுறை.

ஆளும் கட்சியை மட்டும் குறிவைத்துத் தாக்குவது, அதிகார வரம்பின் எல்லையைத் தாண்டுகிறதோ என்று படித்தவர் முதல் பாமரர் வரை கேள்வி எழுப்புகின்றனர்.

கலைஞர் அவர்கள் இன்றைய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைள் பற்றி அவரே குறிப்பிடுகிறார்.

எல்லை மீறுகின்றதா என்பதை வாக்காளாராகிய நீங்கள் முடிவு செய்யுங்கள்

கலைஞரின் உரை - எல்லை மீறுகிறதா?(ஒலிப்பதிவு)

நட்புடன்
.கவி.

தமிழகத் தேர்தல் 2011 - ஈழம்-2

தமிழகத் தேர்தல் 2011 - ஈழம்-2

ஈழம் குறித்து கலைஞரின் உரை :

கலைஞரின் உரை(ஒலிப்பதிவு)

2009 பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் நோக்கில் ஒளி தருவதாகக் கூறி விட்டில் பூச்சிகளாக ஓடியவர்கள் இன்று வீட்டில் ஓடி ஒளிந்துள்ளனர்.

இன்னல் வாழ்க்கை தொடரும் ஈழத் தமிழருக்கு, என்ன மாற்றம் நேர்ந்தது?

கலைஞரின் உண்ணா நோன்பையும் அரசியலாக்கினர்.

ஈழச் சிக்கலைத் தீர்ப்பதில் கலைஞர், திமுகவின் பங்காற்றை விளக்கும் உரை
கலைஞரின் உரை(ஒலிப்பதிவு)

நட்புடன்
.கவி.

தமிழகத் தேர்தல் 2011 - ஈழம்-1

தமிழகத் தேர்தல் 2011 - ஈழம்-1

இந்தத் தேர்தலில் ஈழத்தமிழருக்கு பேராயக் கட்சித் தலைவர் சோனியாவின் உரை இங்கே.

சோனியாவின் உறுதிமொழி(ஒலிப்பதிவு)

என் நினைவு தெரிந்தது முதல் நம்முடனே வளரும் ஈழச் சிக்கலுக்கு இன்று வரை ஒரு முடிவில்லை.

2009ல் ஈழப் போரில், இந்தியாவின் நிலை அனைத்துத் தமிழ் நெஞ்சங்களின் உள்ளத்தையும் பாதித்தது.

2009 பாராளுமன்றத் தேர்தலில் அது எதிரொலித்ததை பேராயக் கட்சி மறக்க இயலாது.

2009 ஈழப் போருடன் உணர்வுகள் மங்கும் என்று எண்ணியவர், வியக்கும் அளவிற்கு ஈழ விடுதலை உணர்வு பன்மடங்கு பெருகியது.

உங்களுடன் இணைந்து மனவலிக்கு மருந்து தேடுவது மட்டுமல்லாமல், ஈழத்தில் வாழும் மக்களுக்கு ஓர் நல்வழி அளிக்கும் கடமையும் நமக்குண்டு என்பதை மறவாதீர்கள்.

இன்றைய அரசியல் நிலையில் இந்திய அரசைச் சார்ந்தே நாம் நம் ஈழத்தமிழ் மக்களுக்கு உரிமை பெற இயலும்.
சோனியாவின் உறுதிமொழி(ஒலிப்பதிவு)

பல்வேறு சிக்கல்களுக்கு பாராளுமன்றத்தை இயங்கவிடாமல் செய்த கம்யூனிஸ்ட், பாசக, அதிமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், ஈழச் சிக்கலுக்கு என்ன செய்தனர் என்பதை எண்ணிப் பாருங்கள்.

நமது சிந்தனையைத் தொடர்வோம்....


நட்புடன்
.கவி.

தமிழகத் தேர்தல் 2011 - யாருக்கு வாக்கு? - 1

தமிழகத் தேர்தல் 2011 - யாருக்கு வாக்கு? - 1

தமிழகத் தேர்தலில் தலைவர் கலைஞரை அடுத்த முதல்வராக ஏற்று, கொள்கை அளவில் இணைந்து பணியாற்றும் அரிமா.

சாதியின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டாலும், இனத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டாலும், மொழியின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டாலும் சீ்றி எழும் எழும் சிறுத்தை.

தன் தசையாடி தன் இனத்திற்காகப் போர்க்குரல் எழுப்பும் போர்வீரன்.



திருமாவளவனின் கரங்களை வலுப்படுத்துவது தமிழ்/ தமிழ் ஆர்வலர் அனைவரின் முதற்கடமை என்பதை மறுக்க இயலுமா?

தமிழனின் உரிமைகள் எங்கு மறுக்கப்பட்டாலும் சீறி எழும் சிறுத்தை. நம் தமிழ் நலம் காக்கும் தமிழர்.

அவரின் இளவல் இரவிக்குமார், சமீபத்தில் கிரந்தச் சிக்கலில் மத்திய அரசின் மாறு பட்ட கருத்தை எங்களுடன் இணைந்து நின்று போராடியவர்.

தமிழ்க் காப்பிற்கு உரிமைக்குரல் எழுப்பியவர்.

தலைவர் கலைஞருடன் இணைந்து தேர்தல் களம் கானும் சிறுத்தைகளுக்கு மெழுகுவர்த்தியில் வாக்களிப்பது நம் இனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு நாம் இடும் அடித்தளமாக அமையும்.

தலைவர் கலைஞரின் அணி வலுவடைய, திருமாவின் குரல் மேலும் உரக்க ஒலிக்க வாக்களிப்பீர் திருமா போட்டியிடும் மெழுகுவர்த்தி சின்னத்தில்...

நட்புடன்
.கவி.

தமிழகத் தேர்தல் 2011 - தனித் தராசு ஏன்?

தமிழகத் தேர்தல் 2011 - தனித் தராசு ஏன்?

தமிழகத்தின் கல்வியறிவு சதவிதம் ஏறுமுகத்தில் உள்ளது என்பது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஓர் சிறப்பம்சம்.

இருப்பினும் சில தொகுதிகளை தனித் தொகுதிகளாக அறிவிக்க வேண்டிய அவலத்தில் தான் நாம் இன்றும் உள்ளோம்.

இந்த நிலை மாற வேண்டும்.

தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

தவறு செய்ததை உறுதிப்படுத்தாமல் தண்டித்தவர் தன்னையே தண்டித்துக் கொள்ளும் தன்மையுடையோர் வாழ்ந்தது நம்மண்.

தவறு செய்திருந்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும்.

பதினைந்து வருடங்களாக நடந்து வரும் சில வழக்குகளின் குற்றவாளிகளே தண்டிக்கப் படாமல் வாய்தா வாங்கிக் கொண்டிருப்பதும் நாம் அறிந்ததே.

சமுதாய அவலங்களை மாற்றி, ஒரு ஜெகஜீவன்ராம் போல் உருவாகி வந்த தமிழக தலித் அமைச்சர், இன்று மேல் சமூகங்களின் பலிகடாவாக்கப்பட்டுள்ளோரோ என்ற சிந்தனையில் உண்மையை மறுப்பதற்கில்லை.

சாதிக்கு ஒரு நீதி சொல்லும் வழியில் வந்தவர் நடத்தும் சில பத்திரிக்கைகள் பல ஆண்டுகளாக தீர்ப்பு சொல்லப்படாமல் இழுத்தடிக்கப்படும் செல்வி செயலலிதாவிற்கு ஒரு நீதியும், தட்டுத் தடுமாறி முன்னேறிய தலித் அமைச்சருக்கு ஒரு நீதி என தன் “சாதிக்கு ஒரு நீதி” என்ற தத்துவத்தை வெளிச்சம் போட்டு விளக்குவதை கல்வியறிவு பெற்ற நண்பர்கள் நிச்சயம் சிந்திப்பீர்கள்.

தனித் தராசு ஏன்?

தனித் தொகுதி, தனி தம்ளர் , தனிக் குடியிருப்பு என்ற அவலங்களைப் போல், தனித் தராசு ஏன்?

மீண்டும் தவறு செய்பவரை ஆதரிப்பது நமது நோக்கமல்ல.

ஆனால் தனி நீதி அளவுகோல் வேண்டாமே. நீதி என்பது அனைவருக்கும் பொதுவானதே. குற்றம் சாட்டப்பட்டவுடன் ஒருவர் குற்றவாளி போல சித்தரிப்பதும், அதுவும் குற்றம் சாற்றப்பட்ட மற்றவருக்கு ஆதரவாக சித்தரிக்கப்படுவது......

ஒரே தராசில் வைத்து எடை போடுங்கள் செய்தித் தோழர்களே.

குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு பல வருடங்களாக நீதியை இழுத்தடிக்கும் தலைவர்கள் ஒரு பக்கம், குற்றம் சாட்டப்பட்டவுடனேயே மத்திய சிறையில் அடைக்கப்பட்டு வாட்டப்படும் நிலை மறு பக்கம்.

ஏன் தமிழர், அதிலும் தலித் தமிழர் என்பதனால் இந்தத் தனி நீதியா...

சிந்திப்பீர். செயல்படுவீர்....

சூழ்ச்சிக்கு இரையாகாதீர்கள். தவறு செய்தால் தண்டிக்கப் படுவார். நீதி நின்று வெல்லும்.

நமது இனம் பெற்ற வெற்றியை நிலைப்படுத்த சிந்தித்து வாக்களிப்பீர்.

நட்புடன்
.கவி.

Saturday, April 9, 2011

தமிழகத் தேர்தல் 2011 - ஓர் தொலை நோக்குப் பார்வை

தமிழகத் தேர்தல் 2011 - ஓர் தொலை நோக்குப் பார்வை

தமிழகம் தனது பதினான்காவது சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அடுத்த முதல்வராக இருவர் அறிவித்தும், ஒருவர் அறிவிக்காமலும் போட்டியிடுகின்றனர்.


ஆறாவது முறையாக தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் திட்டத்துடன் கலைஞர்.

அறுபதுகளிலேயே அயர்ச்சியுடன் கூண்டுக்குள்ளிருந்தே மக்களை மட்டுமல்ல, வேட்பாளர்களைக்கூட



தன் அருகில் அண்ட விடாமல் ஆவலுடன் காத்திருக்கும் செல்வி செயலலிதா.

செல்வி செயலலிதாவின் கட்டுக்குள் அதிமுக இல்லை என்பதை மீண்டும் வெளிப்படுத்திய வேட்பாளர் பட்டியல் குழப்பத்தைத் தொடர்ந்து தங்கத் தாம்பாளத்தில் தரப்பட்ட


தலைமைப் பொறுப்பு ஏற்பதைத் தவிர்த்து, ஒரு சில இடங்களுக்காக ஓடோடி அதிமுகவுடன் உறவாடி, அரசியல் முதிர்ச்சி இல்லாத நடவடிக்கைகளால், அதிமுக கூட்டணிக்குச் சங்கடத்தை மீண்டும் மீண்டும் ஏற்படுத்துவதுடன் மட்டுமில்லாமல், அறிவிக்கப் படாத மூன்றாவது போட்டியாளாராக முதல்வராகப் போட்டியிடுகிறாரா என்ற பெரும் சந்தேகத்தை வாக்காளர் மத்தியில் ஏற்படுத்திக் குழப்பும் கேப்டன்.

தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்லும் தகுதி படைத்தவர் யார்?

சிந்தனையாளர்கள் சிந்தித்திருப்பர்.

நிந்தனையாளர்கள் சிலர் சிந்தனையின்றி நிந்திப்பதால் சில சிந்தனைகள், படித்தோர் கவனத்திற்கு.

தனது என்பத்தேழு வயதிலும் தளராமல், வீதி வீதியாக வலம் வரும் பெருந்தலைவர்.

தந்தை பெரியார் தன் தொன்னூறு வயதிலும் தளராமல் வலம் வந்ததை நினைவூட்டும் வகையில், நிதானத்தைத் தவற விடாமல் நீதி வேண்டி வாக்குக் கேட்கும் தெளிவு.

அண்ணல் காந்தி தன் முதுமையைப் பொருட்படுத்தாமல் மக்களுடன் மக்களாகக் கலந்து சங்கமித்த கனிவு.

தன் கனவை நனவாக்க காலமெல்லாம் ஆதிக்க சக்திகளுடன் போராடிய ஆப்ரகாம் லிங்கனின் துணிவு.

இவர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். சில சந்தேகங்கள் இருப்பது இயல்பே. அவற்றையும் சிந்தித்து அகற்றிக் கொள்வதே படித்தோர்/ பண்பாளர் அழகு.

சிந்திப்போம் செயல்படுவோம்.

நட்புடன்
.கவி.