ஒரு மதம் பல்கிப் பெருக வேண்டுமெனில் அந்த மதம் உதித்த மொழியை/இனத்தைத் தியாகம் செய்ய வேண்டும்.
பீகாரில் உதித்த பௌத்தம் சீனா, சப்பான் வரை பரவியது,
மொழி என்ற சுமை இல்லாததனால் என்பதே என் கருத்து.
ஆன்மிகத்தையும் ஆரியத்தையும் இணைப்பது ஆன்மிகவாதிகளை அந்நியப்படுத்தும்.
பல முறை குறிப்பிட்டேன், மீண்டும் குறிப்பிடுகிறேன்.
ஆண்டாள், அப்பர், மாணிக்கவாசகர், என அன்பர் கூட்டம் ஆன்மிகத்தை எந்த அந்நிய மொழியின் உதவியில்லாமல் வளர்த்திருக்கும் போது, நாம் மட்டும் ஏன் அதை மறுக்க வேண்டும்.
தமிழில் சரியான பயிற்சி இல்லை அதனால் பிறமொழி எழுத்துக்கள் எனக்குத் தேவை என்பதற்கும், மொழியால் இயலாது என்று கூறுவதற்கும் வேறுபாடு உண்டு தானே...
மொழிப் பயிற்சி இல்லை என சொல்வது என்ன தடையாக இருக்க முடியம்
நான் இந்தி தேசத்தில் வாழும் அளவு இந்தி கற்றுள்ளேன், அதனால் நான் இந்திப் பண்டிதன் ஆக முடியாது தானே, இந்திப் பண்டிதன் ஆக நான் இந்தியில் மேல் பயிற்சி கொள்ளாமல் இந்தியால் முடியாது என்று சொல்வது சரியாகுமா? ‘ழ’ , ‘ற’ தேவநகரியில் இல்லை என்பதற்காக தமிழ் எழுத்தையா தேவநகரியிலேயோ, ஆங்கிலத்திலேயோ சேர்த்தோம், இல்லையே.
ஆக தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்குச் சென்றால், அந்த மொழிக்கேற்ப மாற்றி எழுதலாம், ஆனால் பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு வரும்போது அந்த மொழியின் எழுத்துக்கள் சிதையாமல் தமிழில் எழுத வேண்டும் என்பது ஏற்கக்கூடிய வாதமா இல்லையே...
அன்புடன்
.கவி.
Tuesday, March 10, 2009
மொழியும் ஆன்மிகமும்
Labels:
Tamil,
Tamil Religion,
Tamil Society,
ஆரியம்,
ஆன்மிகம்,
கிரந்தம்,
சமுகம்,
பகுத்தறிவு,
மொழி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment