”தமிழர் ஆதரவு” - நடுநிலை என்று கலைஞர்/தி.மு.க. எதிர்ப்பு செய்திகளை மட்டுமே தேர்தல் 2009 நேரத்தில் குழுமங்களில்/ வலைப் பூக்களில் மிகுந்து ஒலிக்கும், எழுதும் எமதன்புத் “தமிழர் ஆதரவு” நண்பர்களே!
”யானையும் ஐந்து குருடர்களும்” ”கதை” யைத் தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
கதையை நினைவில் நிறுத்தி, பின் சிந்தியுங்கள்.
யானையின் பெருத்த காலை மட்டும் தடவிக் கொண்டு, கருத்துக்களை அள்ளித் தெளிக்கின்றீர்களே, நியாயமா?
நாம் சகோதரர்கள். நமக்குள் வேறுபாடு இருந்தாலும், சகோதர்கள் அழிப்புக்கு ஆதரவு அளிப்பது தவறு என்பது என் கருத்து.
நிதானியுங்கள்............ ......
உங்களின் சிறு துளியை விழலுக்கு இறைத்து வீணடிக்காதீர்கள்.
சிறு துளி பெறவே போராடும் இனமாக நம்மினம் இன்னும் இருக்கும் போது, விலை மதிப்பற்ற தங்களின் சிறு துளிகள் வீணாவது கண்டு வேதனையடைகிறேன்.
நம் சமூகத்திற்குழைத்த தந்தை பெரியாரையே இன்னும் புரிந்து கொள்ளாத நல் இனம் நம் தமிழினம்.
மறுக்க இயலுமா உங்களால்?
அவரின் சமுக உயர்வுப் பணிகளைப் புறந்தள்ளி, கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் முன் நிறுத்தியதால் நம் இனம் பெற்ற பெரும் இழப்பு இது என்பது என் கருத்து.
இன்று அமெரிக்கா வரை வந்து கூவும் தமிழினம், தன்னைக் கூவும் நிலக்கு உயர்த்திய சமுகப் புரட்சியாளர்களை மறந்தது ஏன்?
கணினியில் தமிழைக் கொண்டு வந்த நாம், கடவுளிடம் இன்னும் சேர்க்கவில்லை.
ஏன்? சிந்தித்துப் பாருங்கள்.
உங்கள் இல்லத்து அரசிகளை மாற்ற முடிந்ததா உங்களால்?
“நாமென்ன செய்தோம் என்று முதலில் சிந்தியுங்கள், மற்றவரென்ன செய்தார் என்பது இரண்டாம் பட்சமே”...........
கூட்டத்தோடு கூட்டமாக ’கூவும்’ நண்பர்களே, தமிழ் / தமிழரென்றால், அவர்களின் நலன் என்றால், கலைஞர் / திமுக தான் இன்று வரை முன்னிலையில் உள்ளது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
அன்பு கூர்ந்து சிந்தியுங்கள்....
குறைகளை மட்டும் நோக்காமல் நிறைகளையும் நோக்குங்களேன்.
குறைகளையும் /நிறைகளையும் பண்புடன் பட்டியலிடுங்களேன்.
பின் நாம் அன்புடன் நோக்கலாம்.
அன்புடன்.
.கவி.
3 comments:
1. "தந்தை பெரியாரையே இன்னும் புரிந்து கொள்ளாத நல் இனம் நம் தமிழினம்"
2. "கலைஞர் / திமுக தான் இன்று வரை முன்னிலையில் உள்ளது "
இந்த இரண்டு உண்மைகளை மறுக்க முடியாது.. தமிழினம் மறக்கவும் கூடாது
***தமிழ் / தமிழரென்றால், அவர்களின் நலன் என்றால், கலைஞர் / திமுக தான் இன்று வரை முன்னிலையில் உள்ளது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?***
அப்படியெல்லாம் நம்பி ஏமாந்த காலமெல்லாம் முடிந்து விட்டது ஐயா!
பதவி, தன் குடும்பம் - மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், கொள்ளுப்பபேத்தி - இவர்களின் நலன் மட்டுமே அந்த ஆளுக்கு இப்போது கவலை.
அதற்கு மேல் இந்த உலகில் அந்தாளுக்கு வேறு ஏதும் முதன்மையானது இல்லை.
மற்ற செய்திகளெல்லாம் நாடகமாடும் ஏமாற்றே!
***உங்கள் இல்லத்து அரசிகளை மாற்ற முடிந்ததா உங்களால்?***
அந்தக்கதையை எல்லாம் கூறி ஏமாற்ற முடியாது!
இன்று தமிழகத்தில், ஈழக் கொடுமையையும், சோனியா கருணாநிதியின் இரண்டகத்தையும் - துரோகத்தையும் - இல்லத்தரசிகள் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கத் தக்க பாடம் புகட்ட காத்திருக்கிறார்கள் என்பதே உண்மை.
அன்புள்ள நண்பர் சவுக்கு,
1. நீங்கள் ஏமாந்தவற்றைப் பட்டியலிடுங்களேன்....
2. எது துரோகம்? எவர் துரோகி/ பல தமிழ்த் துரோகிகள் மத்தியில் வாழ்ந்து கொண்டு. முதலில் நீங்கள் துரோகம் எது என்று தெளிவு படுத்துங்களேன்.
அன்புடன்
.கவி.
Post a Comment