Saturday, April 9, 2011

தமிழகத் தேர்தல் 2011 - ஓர் தொலை நோக்குப் பார்வை

தமிழகத் தேர்தல் 2011 - ஓர் தொலை நோக்குப் பார்வை

தமிழகம் தனது பதினான்காவது சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அடுத்த முதல்வராக இருவர் அறிவித்தும், ஒருவர் அறிவிக்காமலும் போட்டியிடுகின்றனர்.


ஆறாவது முறையாக தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் திட்டத்துடன் கலைஞர்.

அறுபதுகளிலேயே அயர்ச்சியுடன் கூண்டுக்குள்ளிருந்தே மக்களை மட்டுமல்ல, வேட்பாளர்களைக்கூட



தன் அருகில் அண்ட விடாமல் ஆவலுடன் காத்திருக்கும் செல்வி செயலலிதா.

செல்வி செயலலிதாவின் கட்டுக்குள் அதிமுக இல்லை என்பதை மீண்டும் வெளிப்படுத்திய வேட்பாளர் பட்டியல் குழப்பத்தைத் தொடர்ந்து தங்கத் தாம்பாளத்தில் தரப்பட்ட


தலைமைப் பொறுப்பு ஏற்பதைத் தவிர்த்து, ஒரு சில இடங்களுக்காக ஓடோடி அதிமுகவுடன் உறவாடி, அரசியல் முதிர்ச்சி இல்லாத நடவடிக்கைகளால், அதிமுக கூட்டணிக்குச் சங்கடத்தை மீண்டும் மீண்டும் ஏற்படுத்துவதுடன் மட்டுமில்லாமல், அறிவிக்கப் படாத மூன்றாவது போட்டியாளாராக முதல்வராகப் போட்டியிடுகிறாரா என்ற பெரும் சந்தேகத்தை வாக்காளர் மத்தியில் ஏற்படுத்திக் குழப்பும் கேப்டன்.

தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்லும் தகுதி படைத்தவர் யார்?

சிந்தனையாளர்கள் சிந்தித்திருப்பர்.

நிந்தனையாளர்கள் சிலர் சிந்தனையின்றி நிந்திப்பதால் சில சிந்தனைகள், படித்தோர் கவனத்திற்கு.

தனது என்பத்தேழு வயதிலும் தளராமல், வீதி வீதியாக வலம் வரும் பெருந்தலைவர்.

தந்தை பெரியார் தன் தொன்னூறு வயதிலும் தளராமல் வலம் வந்ததை நினைவூட்டும் வகையில், நிதானத்தைத் தவற விடாமல் நீதி வேண்டி வாக்குக் கேட்கும் தெளிவு.

அண்ணல் காந்தி தன் முதுமையைப் பொருட்படுத்தாமல் மக்களுடன் மக்களாகக் கலந்து சங்கமித்த கனிவு.

தன் கனவை நனவாக்க காலமெல்லாம் ஆதிக்க சக்திகளுடன் போராடிய ஆப்ரகாம் லிங்கனின் துணிவு.

இவர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். சில சந்தேகங்கள் இருப்பது இயல்பே. அவற்றையும் சிந்தித்து அகற்றிக் கொள்வதே படித்தோர்/ பண்பாளர் அழகு.

சிந்திப்போம் செயல்படுவோம்.

நட்புடன்
.கவி.

9 comments:

bandhu said...

ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் , தனது குடும்ப நன்மைக்காக (சுமங்கலி கேபிள், சன் டி வி அதிக விளம்பர வருமானம் ) எல்லோருக்கும் தொலைநோக்கில்லாமல் டி வி , தெருவெங்கும் ஆறாக ஓடும் சாராயம் (டாஸ்மாக்), மிக குறுகிய காலத்தில் எல்லா அமைச்சர்களும் சேர்த்திருக்கும் செல்வத்தின் அசுர வளர்ச்சி (நேருவின் செல்வம் இரண்டு கோடியிலிருந்து பதினைந்து கொடியாக உயர்ந்திருக்கிறது, இந்த ஐந்து வருடங்களில். இது போல கிட்ட தட்ட இருபது அமைச்சர்கள்), தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போது கடிதம் எழுதுவதும் பதவிக்காக டெல்லியில் நேரில் சென்று காவடி எடுப்பதும் , ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படும் பொது உலக வரலாற்றில் குறைந்த நேரம் உண்ணாவிரதம் இருப்பதும்..

இதற்கு பிறகும் கருணாநிதிக்கு ஓட்டு போட எந்த முகாந்திரமும் இல்லை!

Thamizhan said...

திறமை, முன்னேற்றம், ஏழைகளிடம் கனிவு,மற்றவர்க்கு மரியாதை,கடின உழைப்பு ஒரு பக்கம்.

அளவுக்கு மீறிய அகந்தை,ஆணவம்,சிந்திக்காமல் செயல் படும் கொடுமை, காலில் விழவைத்து அனுபவிக்கும் வன் மகிழ்ச்சி, கொட நாடும் சிறுதாவூறூமே அலுவலகம் மறு பக்கம்.

எது வேண்டும் சொல் மனமே.

ஊழல் மற்றதெல்லாம் இவர்களை வேறு படுத்தாது.

வலிப்போக்கன் said...

அய்யோன்னு இரக்கப்பட்டு வாக்களித்தால் அய்ந்து
வருட சனி புடுச்சு ஆட்டுமுங்கோ.சிந்திங்கோ, செயல்படுங்கோ

bandhu said...

என்னுடைய பின்னூட்டத்தை வெளியிடவில்லையே, கவி

.கவி. said...

அன்புள்ள பந்து

தங்களின் கருத்துக்கள் இந்த வலைப்பூவை ஒட்டி இல்லையே.

தங்களின் கருத்துக்களை தனிவலைப்பூ அமைத்து தங்களின் வலையில் வெளியிடுவது தங்களுக்குச் சிறப்பு.

நட்புடன்
.கவி.

suvanappiriyan said...

சிந்தனையாளர்கள் சிந்தித்து திரும்பவும் கலைஞரையே ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பர். என்ன...இடங்கள் கொஞ்சம் குறையலாம்.

-/சுடலை மாடன்/- said...

தன்னுடைய குடும்பநலனுக்காக தமிழினத்தையே பலிகொடுத்த கயவர் கருணாநிதியை தன்வாழ்நாள் முழுவதும் தமிழரின் நலனுக்காகப் பாடுபட்ட தந்தை பெரியாருடன் ஒப்பிட்டு தந்தை பெரியாரைச் சிறுமைப்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மற்றபடி நயவஞ்சக பார்ப்பனிய நரிகளின் முன்னுருவமான ஜெயலலிதாவுடனும் இத்தாலிய மாபியாத் தலைவி சோனியாவுடனும் ஒப்பிடுவதற்கு திராவிடக் கயவர் கருணாநிதி முற்றிலும் பொருத்தமானவர், அதை மட்டும் செய்து கொண்டிருங்கள்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

bandhu said...

நான் கருத்து பரிமாற்றம் என நினைத்தேன். என் கருத்தை என் பதிவில் எழுதுவது மட்டுமே முறை என்று நினைக்கவில்லை. இப்போது அதை செய்கிறேன்!

.கவி. said...

அன்புள்ள பந்து

மாற்றுக் கருத்து எழுதுவதற்கும் / குறுக்குச்சால் ஓட்டுவதற்கும் உள்ள வேறுபாடுகள் நீங்கள் அறிவீர்கள் தானே.

அன்பு கூர்ந்து இயன்றவரை பண்புடன் எழுதுங்கள்.

நட்புடன்
.கவி.

Post a Comment