தமிழகத் தேர்தல் 2011 - தனித் தராசு ஏன்?
தமிழகத்தின் கல்வியறிவு சதவிதம் ஏறுமுகத்தில் உள்ளது என்பது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஓர் சிறப்பம்சம்.
இருப்பினும் சில தொகுதிகளை தனித் தொகுதிகளாக அறிவிக்க வேண்டிய அவலத்தில் தான் நாம் இன்றும் உள்ளோம்.
இந்த நிலை மாற வேண்டும்.
தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
தவறு செய்ததை உறுதிப்படுத்தாமல் தண்டித்தவர் தன்னையே தண்டித்துக் கொள்ளும் தன்மையுடையோர் வாழ்ந்தது நம்மண்.
தவறு செய்திருந்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும்.
பதினைந்து வருடங்களாக நடந்து வரும் சில வழக்குகளின் குற்றவாளிகளே தண்டிக்கப் படாமல் வாய்தா வாங்கிக் கொண்டிருப்பதும் நாம் அறிந்ததே.
சமுதாய அவலங்களை மாற்றி, ஒரு ஜெகஜீவன்ராம் போல் உருவாகி வந்த தமிழக தலித் அமைச்சர், இன்று மேல் சமூகங்களின் பலிகடாவாக்கப்பட்டுள்ளோரோ என்ற சிந்தனையில் உண்மையை மறுப்பதற்கில்லை.
சாதிக்கு ஒரு நீதி சொல்லும் வழியில் வந்தவர் நடத்தும் சில பத்திரிக்கைகள் பல ஆண்டுகளாக தீர்ப்பு சொல்லப்படாமல் இழுத்தடிக்கப்படும் செல்வி செயலலிதாவிற்கு ஒரு நீதியும், தட்டுத் தடுமாறி முன்னேறிய தலித் அமைச்சருக்கு ஒரு நீதி என தன் “சாதிக்கு ஒரு நீதி” என்ற தத்துவத்தை வெளிச்சம் போட்டு விளக்குவதை கல்வியறிவு பெற்ற நண்பர்கள் நிச்சயம் சிந்திப்பீர்கள்.
தனித் தராசு ஏன்?
தனித் தொகுதி, தனி தம்ளர் , தனிக் குடியிருப்பு என்ற அவலங்களைப் போல், தனித் தராசு ஏன்?
மீண்டும் தவறு செய்பவரை ஆதரிப்பது நமது நோக்கமல்ல.
ஆனால் தனி நீதி அளவுகோல் வேண்டாமே. நீதி என்பது அனைவருக்கும் பொதுவானதே. குற்றம் சாட்டப்பட்டவுடன் ஒருவர் குற்றவாளி போல சித்தரிப்பதும், அதுவும் குற்றம் சாற்றப்பட்ட மற்றவருக்கு ஆதரவாக சித்தரிக்கப்படுவது......
ஒரே தராசில் வைத்து எடை போடுங்கள் செய்தித் தோழர்களே.
குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு பல வருடங்களாக நீதியை இழுத்தடிக்கும் தலைவர்கள் ஒரு பக்கம், குற்றம் சாட்டப்பட்டவுடனேயே மத்திய சிறையில் அடைக்கப்பட்டு வாட்டப்படும் நிலை மறு பக்கம்.
ஏன் தமிழர், அதிலும் தலித் தமிழர் என்பதனால் இந்தத் தனி நீதியா...
சிந்திப்பீர். செயல்படுவீர்....
சூழ்ச்சிக்கு இரையாகாதீர்கள். தவறு செய்தால் தண்டிக்கப் படுவார். நீதி நின்று வெல்லும்.
நமது இனம் பெற்ற வெற்றியை நிலைப்படுத்த சிந்தித்து வாக்களிப்பீர்.
நட்புடன்
.கவி.
Sunday, April 10, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment