Thursday, December 31, 2009
புறத்தைப் புறம் தள்ளுங்கள் புத்தாண்டிற்கு முன்
===========================================
புன்முறுவல் முன் காட்டிப் பின் புறம் பேசுவோரே
புறத்தைப் புறம் தள்ளுங்கள் புத்தாண்டிற்கு முன்
பத்து வயதுப் பாலகன் பண்பறிய நாளாகும் என
இருபது வயது இளஞனின் இறுமாப்பு என
முப்பது வயது முன்றிலோன் முறுக்கு என
நாற்பதில் நாய்க்குணம் என்றோர் நற்பெரியார் எனப்
புன்முறுவல் முன் காட்டிப் பின்
புறம் பேசும் இளையோரை விட்டு
ஐம்பது அகவை ஐயா அகந்தை இருக்காதென
அறுவது அகவை அறிஞர், அறிந்தே செய்வாரென
எழுபது, எண்பது, எனப் பட்டியல் நீண்டதேயன்றி
புன்முறுவல் முன் காட்டிப் பின் புறம் பேசுவோர்
குறையாத குறை காரண் கலியுகமோ?
கலியுகம் எனக்கூறாமல் கற்றோரே, மற்றோரே
கலியுகம் கவினுலமாக, மாற வேண்டுங்களேன்
புன்முறுவல் முன் காட்டிப் பின் புறம் பேசுவோரை,
புறத்தைப் புறம் தள்ளுங்கள் புத்தாண்டிற்கு முன் என.
நட்புடன்
.கவி.
Saturday, October 31, 2009
சென்னையில் உத்தமம் 2009 மாநாடு - கருத்துரை
http://tamilpani.blogspot.com/2009/10/2009.html
Thursday, September 24, 2009
Tamil Genocide:Podcast from a 6th Grader
தமிழ் இனப் படுகொலையை விளக்குகின்றார், எளிமையாக அமெரிக்க மாணவர்களுக்கு இளந்தமிழர்.
நட்புடன்
.கவி.
Sunday, August 9, 2009
திறந்தே விட்டனர் திருவள்ளுவர் சிலை பெங்களூரில்!!!!

திராவிட மண்ணில், ஆரிய வழிமுறைக்குப் பெருந்துணை வேண்டிப் போராடும் பாசகவின் ஆட்சியில் திறந்தே விட்டனர் திருவள்ளுவர் சிலை பெங்களூரில்!!!!
பேராயம் பல முறை ஆட்சி கண்ட மண்ணில் திருவள்ளுவர் சிலை திறக்கப் படவில்லை.
தலைவர் கலைஞர், முதல்வர்கள், தமிழக பாசக தலைவர்கள் பாராட்டுக் குறியவர்கள்.

வளர்க திராவிட ஒற்றுமை.
அன்புடன்
.கவி.
Saturday, August 8, 2009
கொலம்பசு தமிழ்ப் பள்ளி - தமிழ் இணையப் பல்கலைக்கழக முதல் சான்றிதழ் தேர்வுகள்.
கொலம்பசு தமிழ்ப் பள்ளி - தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய முதல் சான்றிதழ் தேர்வுகள் இன்று கொலம்பசு நகரில் நடத்தப் பெற்றது.
ஒரு வருட காலம் கொலம்பஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பள்ளியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் தேர்வு எழுதினர்.
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளின்படி நடத்தப் பெற்ற தேர்வின் தேர்வாளர்களாக மத்திய செம்மொழிக்குழு எண்பேராய உறுப்பினர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கொலம்பசு தமிழ்ச் சங்க நிர்வாகி முகைதீன் தேர்வாளர்களாகவும், கொலம்பசு தமிழ்ச் சங்க நிர்வாகி மணிவண்ணன், ராஜேஸ்வர் தேர்வு இணைப்பாளர்களாகவும்
பணியாற்றியனர்.
தேர்வு எழுதிய மாணவர்களைப் பாராட்டி தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இடைநிலைக்கான குறுந்தகட்டை தமிழ்ப் பள்ளியின் சார்பில் பெருங்கவிக்கோ வழங்கினார்.
கொலம்பசு தமிழ்சங்கத்தின் தமிழ்ப்பள்ளியில் இணைய விருப்பமுள்ள மத்திய ஒகயோ தமிழ் ஆர்வலர்கள் கொலம்பசு தமிழ்ச் சங்க நிர்வாகி மணிவண்ணன், தலைவர் சரவணன் ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

அன்புடன்
.கவி.
Tuesday, July 21, 2009
Eelam Rally @Columbus,OH Speeches 2 - Kavi - Columbus Tamil Sangam
அன்புடன்
.கவி.
Columbus Rally Speeches 1 - MuthuVel Chelliah - President FeTNA
அன்புடன்
.கவி.
Friday, July 17, 2009
Columbus Rally @ July 18th 2 PM: Break The Silence!!! Rally and Vigil in Columbus, Ohio

Columbus Rally @ July 18th 2 PM @ Ohio Statehouse Building Lawn
Break The Silence!!!
Rally and Vigil in Columbus, Ohio
YOU CAN MAKE a difference to a Human race.
Save a RACE from Planned Extinction
Columbus Tamil Sangam
6300 Cheyenne Creek Drive,
Lewis Center, OH 43035
http://www.columbusthamilsangam.org/
info@columbusthamilsangam.org
(614)388-8270
Break The Silence!!!
Rally and Vigil in Columbus, Ohio
Location
Statehouse Building Lawn
(Corner of Broad Street and High Street)
Date
Saturday, July 18, 2009
Time
2:00 - 5:00 PM
Special Guest
Va.Mu.Se. Kavi Arasan- Why the rally and Vigil by Columbus Tamil Sangam
Pandian - Greater Washington Tamil Sangam
Vote of Thanks - S. Kalyan, Treasurer, Columbus Tamil Sangam
Bloodshed in Sri Lanka continues, although the
Over 300, 000 Internally Displaced Peoples (IDP’s) are continuously forced
into internment camps without access to food, medicine and water.
There is a steady
rise in deaths due to starvation, rape and child abduction in these camps.
access to set up monitoring missions.
NGOs have also been denied access to assist in
the relief efforts.
Come to show your support to the voiceless in Sri Lanka!!
YOU can make a difference!!!
YES
YOU CAN MAKE a difference to a Human race.
Save a RACE from Planned Extinction

Saturday, July 11, 2009
Save a RACE from Planned Extinction : Break The Silence!!! Rally and Vigil in Columbus, Ohio
Save a RACE from Planned Extinction
Columbus Tamil Sangam
6300 Cheyenne Creek Drive,
http://www.columbusthamilsangam.org/
(614)388-8270
Break The Silence!!!
Rally and Vigil in Columbus, Ohio
COME with your family to show your support to “Break the Silence USA Team”,
three students who are walking over 1000 miles from Chicago to Washington
DC to:
Bring awareness among media and US citizens about the plight of Tamils in
Sri Lanka.
Remember Black July Victims and those who perished in this bloody war of
over 30 years!
Statehouse Building Lawn
(Corner of Broad Street and High Street)
Saturday, July 18, 2009
Time
2:00 - 5:00 PM
For more info call:
and professionals!
the war.
into internment camps without access to food, medicine and water.
rise in deaths due to starvation, rape and child abduction in these camps.
government of Sri Lanka has denied international observers, including the UN, the
access to set up monitoring missions.
the relief efforts.
Lanka!!
YOU can make a difference!!!
YES
YOU CAN MAKE a difference to a Human race.
Save a RACE from Planned Extinction
Sunday, July 5, 2009
குனமளவேனும் குணம்.......
பகுத்தறிவென்பார்
பலநூல்கள் படிக்காமல்...
பக்தியென்பார்
பாமரர் அவலம் பார்க்காமல்.....
அறிவாளியென்பார்
அறமேதும் அறியாமல்.....
ஞானியென்பார்
ஞாலத்தை ஞானமயறியாமல்......
போராளியென்பார்
போரிட்ட புண்ணேயில்லாமல்....
தமிழனென்பார்
தமிழில் பேச முயற்சிக்காமல்.....
குணாளனென்பார்
குனமளவேனும் குணமில்லாமல்.....
இவரிடையில்....
பெண் விடுதலையென
பெயரளவில் பேசித் திரியாமல்
செயல் வடிவம் தந்த சீமானென
சின்னச் செய்தியொன்று
சொன்னது சிட்டுக்குருவி.
குனமளவேனும் குணமில்லா
குடிமக்கள் நடுவில்
கோபுரத்தில் குன
வைரமாக மிளிர்கிறாய் நீ.
உன் வாழ்வு ஊரறிய
இளைஞருக்கு எடுத்துக்காட்டாய்
அமையவே இந்தப் பதிவு.
உன்னுடன் எழுவரானோமென
உனை உயர்த்த
நான் அரசகுடியுமல்ல
நீ ஏற்றே ஆகவேண்டிய
நிலையில் இருப்பவனுமல்ல.
எனவே உன் பணிக்கு
என்றேனும் ஒரு ஏணி தேவைப்படின்
உன் செயல்வழி வாழ்விற்கு
என் சிறிய பரிசாக
இந்த இலவச ஏணியில்
ஏறிச் செல் என் தோழா.
அன்புடன்
.கவி.
Saturday, July 4, 2009
தமிழ்க் கணினிப் பயிலரங்கு 2009 - அட்லாண்டா அமெரிக்கா.
பேரவை 2009 நிகழ்வுப் பயிலரங்கு குறித்த அறிமுகக் கூட்டத்தில் முனைவர் சங்கரபாண்டியன், உத்தமம் செயலர்-இயக்குநர் கவிஅரசன், உத்தமம், தமிழ்மணம் மற்றும் மின்நூல்கள் ஆக்கப் பணிகளான மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை குறித்தும் பேரவையில் பங்கு கொண்ட பெருமக்களுக்கு விளக்கினர்.
தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குநர் திரு நக்கீரன் தலைமையில், பேரவை 2009ல் தமிழ் மணம் - உத்தமம் பயிலரங்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்க் கணினிப் பயிற்சியை திரு சௌந்தர், முனைவர் சுந்தரவடிவேல், திரு. வெற்றிப்பாண்டியன் சிறப்பாக நடத்தினர்.
பயிலரங்கில் பங்கு கொண்ட ஆர்வலர்களில் ஒரு பகுதியினர்.
அன்புடன்
.கவி.
தமிழ்க் கணினிப் பயிலரங்கு 2009 - அட்லாண்டா அமெரிக்கா.
பயிலரங்கு
இணைய மாநாடு 2009
அமர்வு 1: உத்தமம் - தமிழ்மணம்
உத்தமம் அறிமுகம்.
செர்மனி 2009 இணைய மாநாடு ஒரு அறிமுகம்
தமிழ்மணம், அறிமுகம்.
அமர்வு 2: கணினியில் தமிழ்
1.தமிழ் எழுத்துருக்கள் – அறிமுகம்
2. உலாவியில் தமிழ்
3. தமிழில் எழுதுவது எப்படி
4. தமிழில் மின்னஞ்சல்
அமர்வு 3: முன்னறிவுப் பயனர்களுக்கு
1. தமிழில் இணையதளம்
2. தமிழில் வலைப் பதிவு
3. வலைப் பதிவு, பதிவர்கள், தமிழ் இணையம்
4. தமிழில் தகவல் தொகுப்பிகள்
5. தமிழ் எழுத்தறிகள்
6. தமிழ் ஒலியறிகள்
7. தமிழில் இயற்கைமொழிச் செயலிகள்
தமிழ் இணைய மாநாடு 2009:
தமிழ் இணைய மாநாடு 2009ன் மையக் கருத்தாக "கணி வழி காண்போம் தமிழ்” அறிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலுமிருந்து தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் பலர் பங்கேற்கவுள்ளார்கள். ஆழ்ந்த விவாதங்களுக்குப் போதுமான நேரம் கிடைக்க வழி செய்யும் வகையில் 100 பேராளர்கள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்க வகை செய்யப்பட்டுள்ளது.
Monday, June 22, 2009
வாசிங்டன் டி.சி. இரயில் விபத்து - இருவர் பலி.
வளர்ந்த நாடு, வளரும் நாடு எதுவாயினும் விபத்துக்கள் தவிர்க்கப் பட முடிவதில்லை.
http://www.cnn.com/2009/US/06/22/washington.subway.crash/index.html
.கவி.
கணினியில் தமிழ் - பயிலரங்கு: அட்லாண்டாவில் அன்னைக்கு அரியணை - 2
அன்புத் தமிழ் ஆர்வலர்களே
பயிலரங்கு அமர்வுகள்
தமிழ் இலக்கிய வரலாறு பல்லூடக நிகழ்வு நடத்தி இலக்கிய விருந்து படைக்க விருக்கும் பேரவை 2009, கணினியில் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆரவலர்களுக்கு தமிழை மிக எளிதாகக் கணினியில் பயன்படுத்தும் வழிகளைப் பயிற்சியளிக்க தனிப் பயிற்சிப் பட்டறை அமைத்துள்ளது.
என்னால் கணினி (Computer) வழி தமிழைத் தர முடியுமா, மின்னஞ்சல் எழுதுவது எப்படி போன்ற வினாக்கள் தங்கள் சிந்தனை ஓட்டத்தில் ஓடி மறைந்தால், இந்தப் பயிலரங்கு தங்களுக்கே.
வட அமெரிக்க உத்தமத்தின்(http://www.infitt.org/) தலைவர், அமெரிக்க நாசா விண்வெளி மையத்தின் பணிபுரியும் திரு. நாக. கணேசன் தலைமையில் இதற்காகவே அமைக்கப்பட்ட குழு , தமிழ்மணத்துடன் இணைந்து தமிழில் கணினியில் எப்படி எளிதாக எழுதுவது, வலைப்பூக்களைத் தமிழ்மணத்தில் சேர்ப்பது எப்படி போன்ற வினாக்களுக்கு விடையளிக்கவும், சில சிறந்த பயிற்சியாளர்களை அடையாளம் கண்டுள்ளது.
இந்தச் சிறந்த பயிற்சியாளர்கள், தங்களுக்குப் பயிற்சி அளிப்பதுடன், தங்களையும் இந்தச் சிறந்த பயிற்சியாளர் குழுவில் இணைக்க வழிவகையும் காண்பர், தங்களுக்கு ஆர்வமிருப்பின்.
பயிலரங்குப் பதிவுக்கு : http://www.infitt.org/fetna2009_signup.php
பேரவைப் பதிவுக்கு : http://www.fetna.org/
அன்புடன்
.கவி.
Wednesday, June 17, 2009
அட்லாண்டாவில் அன்னைக்கு அரியணை
அன்புத் தமிழ் ஆர்வலர்களே
சூலை 3,4 தேதிகளில் அமெரிக்காவில் இருந்தால் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்வு, திரு நாஞ்சில் பீட்டர் ஒருங்கிணைத்து வழங்கும் தமிழ் இலக்கிய வரலாறு பல்லூடக வினாடி வினா நிகழ்வு.
தமி”ழே” அறியாதவர் எல்லாம் தமிழறிஞர் என்றும்,
தமிழ் என்றால் கலையுலகம் சார்ந்தே என்பது போலும் பிதற்றித் திரியும் ‘சுயபுராணத் தமிழர் குழுக்கள்’ நடுவில், பீட்டரின் நிகழ்ச்சி ஒரு புதுமை.
இப்படியாவது உண்மைத் தமிழ் அறிஞர்களை தமிழர் அறியட்டும்.
நிகழ்வில் பங்கேற்க ஆர்வம் கொண்டவர்கள், திரு பீட்டரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
கேட்டு/ கண்டு/ உணர்ந்து மகிழ விரும்புவோர், பேரவையின் இல்லத்தைக் காணுங்கள்.
பேரவை இல்ல முகவரி : www.fetna.org
அன்புடன்
.கவி.
Sunday, June 7, 2009
தமிழ் ஈழம் என்ற மொழி வாரி மாநிலம்
1. தமிழ் ஈழம் என்ற மொழி வாரி மாநிலம் இலங்கை அரசினால் பிரிக்கப் பட வேண்டும்.
2. தமிழ் ஈழம் மாநிலத்தில் , காசுமீரின் 370 போன்று ஒரு சிறப்பு நிலை உருவாக்கப் பட வேண்டும்.
இலங்கை அரசின் முதல் பணி இதுவே ஆகும்.
இன்றைய நிலையில் இது மிகவும் முக்கியம். அவசியம்
சிந்தனையை சிதறவிடாமல் இதை நிறைவேற்ற வேண்டும்.
தோழர்களே கவனம்.
சிந்தனையைச் சிதறவிடாதீர்கள். தமிழர்களின் எதிர்கால நல்வாழ்விற்காக.
நம் பிஞ்சுகளைக் காப்பதே இப்போதைய தலையாய கடமை.
மொட்டுக்களை மலர விடுங்கள் தோழர்களே.
அன்புடன்
.கவி.
Thursday, June 4, 2009
ஈழம்:இந்திய அரசின் கவனத்தை திருப்புவோம்:
இந்தக் கருத்தைத் தான் பலமுறை தேர்தலுக்கு முன்னும்பின்னும் கூறிப் போராடுகிறோம். (1)
நமது தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு எனில் அது வங்கத்தைப் போல் அமையும் அடக்குமுறை தொடர்ந்தால்.
முதலில் அதற்கு தமிழகம் போல் மொழி வாரியாக இலங்கை அரசினால் ஈழம் பிரிக்கப் பட வேண்டும். இலங்கை அரசின் முதல் பணி அதுவே ஆகும். இன்றைய நிலையில் அது மிகவும் முக்கியம். சிந்தனையை சிதறவிடாமல் இதை நிறைவேற்ற வேண்டும்.
ஈழ உணர்வாளர்கள், தமிழ் மக்களைக் காப்பாற்றுங்கள். இந்திய அரசின் கவனத்தைத் திருப்ப முயலுங்கள்.
“மறதியே மனிதனுக்கு உள்ள மாபெரும் வரப் பிரசாதம்”. இந்திய அரசும், ஈழத்தில் பாதிக்கப்பட்ட தமிழரும் பழையன கழித்து நிகழ்கால நிஜங்களை நினைத்து, எதிர் காலத்தை எம் காலமாக மாற்றப் போராடுவோம்.
வேண்டுகோளுடன்
.கவி.
==================================
அடிக்குறிப்பு
(1)இந்திய அரசின் கவனத்தை திருப்புவோம்:
இந்திய அரசின் உதவியில்லாமல் எம்மால் எதுவும் செய்ய முடியாது என்பது தெரியும். எனவே இந்திய அரசாங்கத்தின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்பும் உறுதியான நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து அந்த வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். சிறிது கால அவசகாசம் தேவைப்படுகிறது. இது குறித்த விபரங்களை தற்போது வெளிப்படுத்த முடியாது.
ராணுவ முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் எங்கள் மக்களைக் காப்பாற்றுவதற்கும், ராணுவத்திடம் பிடிபட்ட போராளிகளை அனைத்துலக சட்ட அடிப்படையில் விசாரிக்கவும் வழி வகை செய்ய வேண்டும். இதுதான் எங்கள் முதல் பணி.
பிளவுகளை மறந்து அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு குடையின்கீழ் அரசியல் தீர்வுக்காக நிற்க வேண்டும். அதுதான் எனது விருப்பம். அதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் எடுத்து வருகிறேன் என்றார் பத்மநாதன்.
Monday, June 1, 2009
Tamil Internet Conference 2009 in Koeln, Germany
The Executive Committee of INFITT is pleased to announce that
the next Tamil Internet Conference TIC 2009 will be held in
Europe, in the city of Koeln, Germany during October 23-25, 2009.
TIC 2009 will have the same format as the last TIC 2004 held
in Singapore. It will be a technical conference devoted
to discussing recent advances and challenges in Tamil
Computing and Tamil Internet in general. To permit max.
interaction, participation will be limited to 100 persons.
We invite Tamil IT professionals worldwide to participate
in this conference - only one of its kind devoted exclusively
for Tamil. Tamil Internet Conferences of INFITT has been
held earlier in Chennai (1999,2003)Singapore (2000, 2004), Kuala Lumpur,
Malaysia (2001), San Francisco, California (2002) and
in Singapore (2004). TIC 2009 will be the first
conference to be held in Europe.
The TIC 2009 is being organized in close collaboration
with the Institute of Indology and Tamil Studies (IITS)
of the University of Koeln who will serve as the local host.
IITS, headed by Prof. Ulrike Niklas is one of the major
Tamil Studies and Research Center of Europe. A Tamil
teacher, researcher of IITS well known to Tamil community
is Dr. Thomas Malten, who led a pioneering effort two
decades back to bring Tamil literature in electronic form.
IITS of UKoeln also has the unique distinction as the only Tamil
Studies Center outside Tamilnadu to have more than 50,000
Tamil books. So we are delighted to have the next TIC at this
key Institution devoted to Tamil Research in Europe.
Pleast take note of the date and venue for the conference.
A formal call for papers with more details will be published soon.
For more details :
Dr. K. Kalyanasundaram
Chair, INFITT
Va.Mu.Se. Kaviarasan
Executive Driector, INFITT
T.N.C. VenkataRangan
Vice-Chair, INFITT
Sunday, May 31, 2009
தமிழக அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு
இதனால், அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ. 5,155.79 கோடி தொடர் செலவினம் ஏற்படும்.
இந்த உயர்வு, ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அடுத்த மாதம் உயர்வுடன் சம்பளம் பெறலாம். படிகள் இரட்டிப்பு ஆக்கப்பட்டுள்ளன.
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 40 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்.
மத்திய அரசின் ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகளை, தமிழகத்தில் அமல்படுத்த அலுவலர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது பரிந்துரைகளை முதல்வர் கருணாநிதியிடம் கடந்த 27-ம் தேதி அளித்தது.
குழுவின் பரிந்துரைகளை ஏற்று, அதற்கான உத்தரவுகளை தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்துள்ளது. நிதித் துறை செயலாளர் ஞானதேசிகன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்... அனைத்து அரசு அலுவலர்களுக்கும் இப்போது பெற்று வரும் ஊதிய விகிதத்துக்கு இணையான திருத்திய ஊதிய விகிதம் வழங்கப்படும்.
இப்போதுள்ள ஊதிய விகித முறைக்கு ஏற்ப ஊதியத் தொகுப்புக்கான தர ஊதியம் வழங்கப்படும்.
பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் மூலம் இப்போது நடைமுறையில் உள்ள ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 13,500 ஊதிய விகித முறையில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் ஒரே ஊதிய விகிதம் மற்றும் தர ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமைச்சுப் பணி கண்காணிப்பாளர்கள்... உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப, அமைச்சுப் பணி கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர்கள் இப்போது பெற்று வரும் ஊதிய விகிதத்தை விட ஒரு நிலை மேம்படுத்தி புதிய ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த 2007 டிசம்பர் 12 முதல், ரூ. 7,000 - 225 - ரூ. 11,500 என நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு இணையாக திருத்திய ஊதிய விகித முறையில், ரூ. 9,300 - 34,800 என்ற ஊதிய விகிதம் மற்றும் தர ஊதியமாக ரூ. 4,800 நிர்ணயிக்கப்படும்.
அமைச்சுப் பணி கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ள மேம்படுத்தப்பட்ட திருத்திய ஊதிய விகிதம், அதுபோன்ற இதர பணிகளில் உள்ள அலுவலக கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் இந்தப் பணியிடங்களில் பரிமாற்றம் செய்யத் தகுந்த பிற வகைப் பணியிடங்களான துணை வட்டாட்சியர், உதவி வணிகவரி அலுவலர் மற்றும் சார் பதிவாளர் போன்ற பணியிடங்களுக்கும் நீட்டிக்கப்படும்.
அமைச்சுப்பணி கண்காணிப்பாளர்களுக்கு மேம்படுத்தபட்ட ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதன் பதவி உயர்வு பணியிடங்களின் ஊதிய விகிதத்தினை கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 12 முதல் ரூ. 7,500 - 250 - ரூ.12,000 என நிர்ணயம் செய்யப்பட்டது.
தற்போது திருத்திய ஊதிய விகித முறையில் ரூ. 9,300 - 34,800 என்ற விகிதத்திலும், தர ஊதியமாக ரூ. 4,900-ம் வழங்கப்படும்.
படிகள் இரட்டிப்பு... மத்திய அரசு அலுவலர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ள வழிமுறைகளே மாநில அரசு அலுவலர்களுக்கும் கடைப்பிடிக்கப்படும்.
ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக, தற்போது நடைமுறையில் உள்ள நிலையே தொடரும். மேலும், திருத்திய ஊதிய விகித முறையில் ஆண்டு ஊதிய உயர்வு மத்திய அரசில் உள்ளவாறு, அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் மூன்று சதவீதம் சேர்த்து வழங்கப்படும்.
மாநில அரசு அலுவலர்கள் தற்போது பெற்றுவரும் சிறப்பு ஊதியம் திருத்திய ஊதிய விகித முறையில் அதே அளவில் தொடர்ந்து வழங்கப்படும். படிகள் இரட்டிப்பாக்கப்படும்.
அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தினப்படி இரட்டிப்பாக்கப்படும். வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி உள்பட அனைத்து படிகளும் இரட்டிப்பாகும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேந்தர் இடுகைகள்: வள்ளுவத்தில் வேந்தர் - 2
எது நாடு என்று கருதப் படும்?
புலம் பெயர்ந்தோரையும் வரவேற்றுக் காக்கும் பகுதியே நாடு எனப்படும்.
வந்தாரையும் வாழவையுங்கள் எனும் வள்ளுவம், வாழும் மக்களைக் காக்கத் தவறும் நாடு நாடே அல்ல எனபதனையும் மறை பொருளாக உணர்த்துகின்றது.
மாற்றோரால், வேந்தனுக்கு சில நேரங்களில் ஏற்படும் நிதிச் சுமையையும் ஏற்று, வேந்தனுக்கு உதவிடும் நாடே நல்ல நாடு, அவர்களே நாட்டின் நற்குடிமக்கள் என்பது வள்ளுவர் வாக்கு.
"பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்(கு)
இறைஒருங்கு நேர்வது நாடு”
புலம் பெயர்ந்தோரும் புதுவரவாக வரும்போது அவரையும் ஏற்று, அரசனுக்குரிய ஆட்சி நடைபெற உதவும் வரிப்பொருள்களை ஒழுங்காகச் செலுத்தும் மக்களை உடையதே நாடு.
-(பெருங்கவிக்கோ செந்தமிழ் உரை)
அடிக்குறிப்பு
பொறை -> நிலம்
வேந்தர் இடுகைகள்: வள்ளுவத்தில் வேந்தர் - 1
நாட்டின் வேந்தன், வீட்டின் வேந்தன், படையின் வேந்தன், தொழிலின் வேந்தன் என்று எந்த வேந்தனாயிருந்தாலும் வள்ளுவத்தில் அவர்களுக்கும் அறம் உள்ளது.
வேந்தன் காலம் அறிந்து செயல் பட வேண்டும். காலம் அறிந்து பகைவரை வெல்ல வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு
“பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது” (49-1)
பகலில் கண் தெரியாத கோட்டானைக் காக்கை வென்றுவிடும். அதுபோலப் பகைவரை வெல்ல எண்ணும் வேந்தர்கள் காலம் அறிந்து கருதியதை முடிக்க வேண்டும்.
-(பெருங்கவிக்கோ செந்தமிழ் உரை)
அடிக்குறிப்பு
கூகை - கோட்டான் (பெரிய ஆந்தை)
இகல்- இரவு
பொழுது - காலம்.
Saturday, May 30, 2009
நல்லற இடுகைகள்: வள்ளுவத்தில் நல்லறம் - 2
பொய், பொய்யர், பொய்மை.
தான் வாழப் பொய்.
தன் வழி பற்றும் பொய்யர்களைக் காக்கப் பொய்.
தன் வாழ்வை மட்டும் வளப்படுத்த, பொய்மை என்று அறிந்தும் மனம் கசங்கமால், பேசும், எழுதும், பொய்யர், புறம் பேசுவோர்.
புறங்கூறும் இந்தப் பொய்மை நல்லறமல்ல என்று அறிந்தும் பொய்யர்களாக வாழ்வது வீண் என்பது வள்ளுவர் வாக்கு.
”புறம்கூறிப் பொய்த்(து)உயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்”
வாழ்வுக்காகப் பிறரைப் பற்றி இழிவாகத் தூற்றிப் பொய்யான வாழ்வு வாழ்வதை விட, உண்மைக்காக செத்து மடிவது அறத்தின் பாற்படும். (19-3)
-(பெருங்கவிக்கோ செந்தமிழ் உரை)
அடிக்குறிப்பு
1. புறம்கூறல் => பிறரை இழிவாகப் பேசல் (அவர் அறியாமல்),
நல்லற இடுகைகள்: வள்ளுவத்தில் நல்லறம் - 1
அற நூல்கள் அறிவுறுத்துவது, தவறு செய்யாதே என.
அறிந்தே சிலர் செய்யும் தவறுகளை நாம் கண்டிருப்போம். மீண்டும் மீண்டும் செய்வதையும் கண்டோம்.
நம் வாழ்விலாகட்டும், நடந்து முடிந்து தேர்தலில் ஆகட்டும், மாபெரும் தவறு இழைத்தவர்கள், இனியேனும் தவறு இழைக்க லாகாது.
பின்னர் வருத்தப்பட நேரிடும் தவறைச் செய்யாதீர்கள், தவறித் தவறு நேரின், மீண்டும் தவறாதீர்கள் என்பது வள்ளுவர் வாக்கு.
”எற்(று)என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று” (66-5)
” தான் செய்தது மாபெரும் தவறு” என்று எண்ணும் தவறினை ஒருவன் ஒருபோதும் செய்வதாகாது. செய்யநேரினும், அதுபோன்ற தவறுகளை மென்மேலும் செய்வதையாவது நிறுத்த வேண்டும்
-(பெருங்கவிக்கோ செந்தமிழ் உரை)
அடிக்குறிப்பு
1. எற்று -> கடந்த காலத்தை எண்ணி வருந்துதல்
2. இரங்குவ -> மனம் வருந்தல்
3. மற்றன்ன -> மீண்டும்
இல்லற இடுகைகள்: வள்ளுவத்தில் இல்லறம் - 2
அமெரிக்காவிலிருந்து ஆண்டநாயகபுரம் வரை, மனித இனத்திற்கென்று ஒரு பண்பு உண்டு, கண்டவரிடமெல்லாம் காதல் மொழி கூறுவது காமமேயன்றி காதலாகாது. கண்டவரிடமெலாம் காமுறுவது, மனித இனத்தின் பண்பும் ஆகாது.
நோய் உருவாக முக்கிய காரணியே, நோய் தீரும் மருந்தாக அறிந்த மகத்துவம்.
எல்லாப் பிணிக்கும் பிற மருந்துண்டு, காதல் நோய் தவிர.
காதல் நோயை, நோய் தந்தவனோ அல்லது தந்தவளோ தான் தீர்க்க முடியும்.
மாற்றோர் தீர்க்க இயலா என்றார் வள்ளுவர்.
நீங்களும் அனுபவப் பட்டிருப்பீர்கள் தானே! :)
’காதல் கொண்டவரைக் கண்டு அணைத்தால் தான் காதல் நோய் தீரும்’ என்பது வள்ளுவர் வாக்கு.
”பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து” - (111-2)
உடலுக்குற்ற நோய்க்குப் பல்வேறு மருந்துகள் உள்ளன.
ஆனால் இவளால் ஏற்பட்ட இக்காதல் நோய்க்கு இவளே மருந்து ஆனாள்!
-(பெருங்கவிக்கோ செந்தமிழ் உரை)
அடிக்குறிப்பு
1. பிணி - நோய்
2. அணியிழை -> அணிகலன் அணிந்திருப்பவர்.
3. பிறமன் => மற்றவை
சிந்தனைக்கு :
அணிகலன்களை ஆண், பெண் என் இரு பாலாரும் அணிந்திருந்தனர் குறள் காலத்தில், எனவே தலைவன் தலைவி பால் கொண்ட காதல் குறித்து மட்டும் என்பதல்லாமல். தலைவி தலைவன் மேல் கொண்டகாதல் நோய்க்கு மருந்து நோய் தந்த தலைவனும் எனவும் கொளல் வேண்டும்
Friday, May 29, 2009
அடுத்த தலைமுறை அரசியல் அறிவீர்!!!
வாழ்த்துரைகள் வந்திருக்கும். (1)
பொறாமை, பொல்லாப்பு, புறங்கூறல்,புலம்பல், பூசி மொழுகல் இடுகைகள் இந்நேரம் வந்து முடிந்திருக்கும்.
நிதானமற்றவர் நிந்தனைகளை நீக்கி, நாமினி நிதானாமாக நமது அடுத்த தலைமுறை அரசியல் பற்றிப் பேசலாம், சிந்திக்கலாம்.
இதோ, இதோ என்று, காத்திருந்த கண்கள் பலமுறை பூத்துப் போக, கருணையின் புதல்வர் மு.க. ஸ்டாலின், முதல்வர் முகவின் கடமைகளுக்குத் துணையாக கடைசியாக தமிழகத்தின் துணை முதல்வராக நியமிக்கப் பட்டார்.
நண்பர்கள் கவனிக்க வேண்டும்.
இந்த அறிவிப்பைக் கலைஞர் என்றோ வெளியிட்டிருக்க முடியும்.
இருப்பினும் காலம் கனியட்டும் என்று காத்திருந்தே வெளியிட்டார் கலைஞர்.
தளபதியும் தன் பங்குக்கு மீண்டும் மீண்டும் புடம் போடப்பட்ட பொன்னாக மிளிர்ந்தார்.
அரசியல் எதிரிகளை நட்பாகவும் எதிர்கொள்ள முடியும். அந்தச் சக்தி எனக்கு உண்டு என்று என்றோ நிருபித்தவர் தளபதி.
தமிழக நலன்களுக்காக எதிர்க்கட்சியில் இருந்த போதும், அந்நாள் முதல்வரை முகம் கோணாமல், முதல் கண்டு, தனி மனித அரசியலை விட தமிழக மக்கள் நலம் பெரிதென நம் மக்கள் நலம் காத்தவர்.
ஆட்சி என்ற ஆடையில்லாமல் பாமரராகவும் பண்போடு வாழ்ந்து காட்டிய பண்புத் தளபதி.
’அண்ணன்’ ஆரோக்கியமாக இருக்கும் போது, திண்ணையை நோட்டமிட்டவர் மத்தியில், அண்ணனுக்கும் பொறுப்பு, பின்னரே எனக்கு என்ற பரத குணம்.
தலைவரின் உடல் நிலை மிகவும் குன்றிய நிலையில், தமிழகத்தை வழி நடத்த இளையதலைமுறைத் தலைவர்கள் உருவாகி வழி நடத்த வேண்டிய கட்டாயம்.
நாட்டின் நலன் கருதி தளபதி தாங்க வேண்டிய தர்ம சங்கடம்.
பிதற்றாளர் பிதற்றல் கண்டிருப்பீர்கள்.
அவர் பிதற்றலால் நம் இனத்திற்கென்ன பயன்?
பயனில்லா பிதற்றல்களை நீக்கிப் பயனுள்ள கருத்துக்களை தளபதிக்கு அளிப்போம்.
தமிழ்-தமிழர்-தமிழினம் என்ற போர்வையில் நாடகம் ஆடியவரை நாடு ஒதுக்கி விட்டது.
ஆனால், கவனம் தேவை.
நியூட்டனின் இரண்டாம் தத்துவம் நினைவில் உள்ளதா, மாற்றுருவில் அந்தச் சக்திகள் தாக்க நேரம் கணித்துக் கொணடே இருக்கும்.
தலைவர் கலைஞர் போல் தமிழ்-தமிழின உணர்வு அடுத்த தலைமுறையில் இல்லை என்ற குற்றச்சாட்டு மிகுந்தே ஒலிக்கும் இனி. தளபதி அறியாதவர் அல்ல.
பல ஆண்டுகளாக கலைஞரின் நிழலில் வளர்ந்தவர்.
ஐம்பது ஆண்டு காலம் தமிழருக்கென்றே உழைத்த கலைஞரையே, தரம் குறைந்த சொற்கள் கூறித் தாக்கியவர்கள், தளபதிக்கு மலர்ப்பாதை அமைத்துத் தருவார்கள் எனக் கூற இயலாது.
எதிர்பார்க்கும் அளவிற்கு நாம் அரசியல் பாலகர்களும் அல்ல.
தளபதி தமிழ்-தமிழர்-தமிழினம் என்றால் கலைஞருக்குச் சளைத்தவரல்ல என்று நிருபிக்க வேண்டிய பெரும் கடமை துணை முதல்வருக்கு உண்டு.
கலைஞரை விஞ்சுவாரா இளைய தளபதி?
விஞ்சுவார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
தமிழ்ப் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
அன்புடன்
.கவி.
அடிக்குறிப்பு:
1. தினமணி தலையங்கம்
எப்போதோ நடந்தேறியிருக்க வேண்டிய ஒன்று காலதாமதமாக இப்போதாவது நடந்திருக்கிறதே என்கிற வகையில் மகிழ்ச்சி. மு.க. ஸ்டாலினுக்குப் பதவியும் அங்கீகாரமும் ஆரம்பம் முதலே தாமதமாகத்தான் கிடைத்து வருகிறது. 1989-ல் 13 ஆண்டு அரசியல் வனவாசத்திற்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தபோது மு.க. ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டிருந்தால் யாரும் குற்றம் கண்டிருக்க மாட்டார்கள். ஏனோ, முதல்வர் கருணாநிதி அவரை அமைச்சராக்கவில்லை. இன்றைய அமைச்சரவையில், க. அன்பழகன் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தவிர ஏனைய மூத்த அமைச்சர்களான ஆர்க்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி. மணி, பொன்முடி மற்றும் கே.என். நேரு ஆகியோர் முதன்முதலில் அமைச்சர்களானது அப்போதுதான்.
1996-ல் ஆட்சிக்கு வந்தபோது மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்த்தால் மீண்டும் ஏமாற்றம். சென்னை நகர மேயராக்கப்பட்டார். அவர் நிர்வாக அனுபவம் பெற வேண்டும் என்று தந்தையும் முதல்வருமான கருணாநிதி எதிர்பார்த்ததில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியலில் அனுபவமே இல்லாத பலரை அமைச்சர்களாக்குவதில் தயக்கம் காட்டாதவர் தனது மகனிடம் மட்டும் ஏன் தயக்கம் காட்டினார் என்பது புதிர்.
ஏனைய பல திமுக தலைவர்களைவிட, கட்சிப் பொறுப்பையோ ஆட்சிப் பொறுப்பையோ ஏற்கும் தகுதியும் அனுபவமும் மு.க. ஸ்டாலினுக்கு நிச்சயமாக உண்டு. அவரது அரசியல் வாழ்க்கை 70-களில் தொடங்கிவிட்டது. திமுக தலைவர் கருணாநிதியின் மகன் என்பதைவிட அடிமட்டத்திலிருந்து தன்னை உயர்த்திக் கொண்டவர் என்பதுதான் மு.க. ஸ்டாலினின் உண்மையான பலம்.
கட்சிக்குப் பிரசார நாடகங்கள் போடுவது, கட்சியின் போராட்டங்களில் பங்கு பெறுவது, இளைஞர் அணியை வலுவான அமைப்பாக மாற்றி இன்றைய தலைவர்கள் பலரை உருவாக்கியது என்று கட்சிக்கு அவரது பங்களிப்பு கொஞ்சநஞ்சமல்ல. அடிமட்டத் தொண்டராகத் தொடங்கிய அவரது அரசியல் வாழ்க்கை இளைஞரணி, சட்டப்பேரவை உறுப்பினர், சென்னை மாநகர மேயர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், அமைச்சர் என்று தொடர்ந்து இப்போது துணை முதல்வர் பதவியில் அவரை அமரச் செய்திருக்கிறது.
கட்சியைப் பொருத்தவரை அவர் தன்னை ஒரு சக்தியாகத் தொண்டர்கள் மத்தியில் வளர்த்துக் கொண்டிருப்பது உண்மைதான் என்றாலும், இதுவரை அவரால் தனது தனித்தன்மையைக் காட்ட முடியாமல் இருப்பது ஏன் என்பதுதான் பலருக்கும் புரியாத புதிர். ஏனைய அமைச்சர்கள் எல்லோரும் பத்திரிகையாளர்களிடம் சகஜமாகப் பேசுவதும், பேட்டியளிப்பதுமாக இருக்கும்போது மு.க.ஸ்டாலின் மட்டும் ஒதுங்கியே இருப்பது ஏன் என்று ஆச்சரியப்படாதவர்கள் இல்லை.
அதற்கு ஒரு முக்கியமான காரணம், அவர் கருணாநிதி என்கிற ஆலமரத்தின் நிழலில் இருப்பதுதான் என்று கருத வழியுண்டு. நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், மதியழகன் போன்ற ஜாம்பவான்கள்கூட கருணாநிதி என்கிற சூரிய வெளிச்சத்தின் முன்னால் பிரகாசிக்க முடியாதபோது இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்ட மு.க. ஸ்டாலினால் மட்டும் அது எப்படிச் சாத்தியம்?
மேலும், மு.க. ஸ்டாலினுக்குத் தந்தை கருணாநிதியிடம் இருக்கும் பயம் கலந்த மரியாதையால்கூட தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பாமல் இருக்கலாம். தனிமனித நாகரிகத்தைக் கடைப்பிடிப்பதில் மற்றவர்களிடமிருந்து எப்போதுமே வேறுபடுபவர் அவர். சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட சம்பவத்தின்போது எம்.எல்.ஏ.வான அவர் கடைப்பிடித்த நிதானம் அதற்கு ஓர் உதாரணம். தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது என்று மு.க. ஸ்டாலின் நினைப்பதுகூட காரணமாக இருக்கலாம்.
மேயராகவும் சரி, உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் சரி மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகளில் யாரும் பழுது காண முடியாது. தகுதியும் திறமையும் வாய்ந்த அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து, தனது துறையின் செயல்பாடுகளில் குற்றம் காண முடியாதபடி நிர்வகிப்பதில் அவர் யாருக்கும் சளைத்தவரல்ல. அதேநேரத்தில், மிகப்பெரிய சாதனை என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருடைய நிர்வாகத் திறமை பளிச்சிடவும் இல்லை.
முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் முதுகுத்தண்டு அறுவைச்சிகிச்சைக்குச் சென்றபோதே ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதுதான் நமது கருத்து. இந்தத் தள்ளாத வயதில் வீல் சேரில் முதல்வர் அங்குமிங்கும் பயணிப்பதும், தன்னை வருத்திக்கொண்டு நாளும் கிழமையும் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிப்பதும் பிரச்னைகளை எதிர்கொள்வதும் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இந்தப் பொறுப்புகளைத் துணை முதல்வரான மு.க. ஸ்டாலின் இனிமேல் ஏற்றுச் செயல்படுவார் என்று நம்பலாம்.
இதுநாள் வரை முதல்வர் கருணாநிதியின் நிழலாக இருந்தவர் இனிமேல் தனது தனித்தன்மையைக் காட்ட வேண்டிய நேரம் கைகூடியிருக்கிறது. சுறுசுறுப்புடனும் அரசியல் சாதுர்யத்துடனும் தனது பொறுப்புகளை அவர் கையாளும் விதத்தில்தான் அவருடைய வருங்காலமும், திமுகவின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.
தமிழக சரித்திரத்தில் முதன்முறையாக ஒரு துணை முதல்வர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்தவகையில் மு.க. ஸ்டாலின் ஒரு முதல்வர்கூட. "தினமணி'யின் வாழ்த்துகள்.
Thursday, May 28, 2009
அமைச்சர் அழகிரிக்கு ஒரு தமிழ் வேண்டுகோள்
சங்கம் வளர்த்துத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் மைந்தர் இன்று மத்திய அமைச்சராக.

மத்தியில் தமிழ் மொழியும் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற நிலை நிச்சயம் அடைந்து விடுவோம்.
தங்கள் பார்வைக்கு வரும் ஒவ்வொரு கோப்பிற்கும் தமிழ் மொழி மொழிபெயர்ப்பு அவசியம் என்று உத்தரவு போடுங்கள்.
கோடானா கோடித் தமிழர்களின் தமிழ் கணினியில் ஏறும், ஆனால் ‘இந்தி’ ய அரசில் ஏறாது.
என்ன முறை இது.
பல்லாயிரம் கோடி பட்ஜெட் போடும் ’இந்தி’ய அரசு ஒரு தமிழ்-ஆங்கிலம்-இந்தி மொழிபெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும் ஒவ்வொரு துறைக்கும்.
செம்மொழித் தமிழ் தங்கள் அமைச்சகத்தில் சீர் உயர் பெறட்டும்.
தங்களால் தகர்க்கப்படட்டும் இந்தத் தறுதலைகளின் தமிழ் எதிர் வாதம்.
அன்புடன்
.கவி.
தினமணி தலையங்கம்:
(தினமணி தகவலுக்கு நன்றி : திரு. வெற்றிப்பாண்டியன் - திருத்தங்கல், இருப்பு : வாசிங்டன்.டிசி.)
சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, நெல்லை, சேலம் என்று ஏனைய நகரங்கள் எல்லாம் மத்திய அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இப்போது முதல்முறையாக மதுரைக்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார்.
முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் செயல்பாடுகளிலும் அவர் கையாளும் அரசியல் வழிமுறைகளிலும் நம்மில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். மத்திய அமைச்சரவையில் அவர் இடம்பெற்ற விதத்தில் கூட நம்மில் பலர் முகம் சுளித்தது உண்மையிலும் உண்மை. ஆனால் அதைவிட நிதர்சனமான உண்மை மு.க.அழகிரி மத்திய அமைச்சர் என்பது!
முதல்வர் கருணாநிதியின் மகன், திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்கிற தகுதிகள் எல்லாம் பின்னால் தள்ளப்பட்டு இப்போது தமிழகத்தின் சார்பில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக மத்திய அமைச்சரவையில் ஒரு பொறுப்புள்ள பதவி வகிக்கும் மாண்புமிகு அமைச்சராக மு.க.அழகிரி மாறியிருப்பது அவரிடம் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்ப்பதில் தவறு காணமுடியாது.
அழகிரிக்கு ஆங்கிலம் பேசத் தெரியுமா? கோப்புகளைப் பார்க்கத் தெரியுமா? நாடாளுமன்றத்தில் அவ்வப்போது எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியுமா? பல மேதைகளும் அரசியல் ஜாம்பவான்களும் அமர்ந்த இடத்தில் போய் அமரும் தகுதி இருக்கிறதா? இப்படி எத்தனை எத்தனையோ விமர்சனங்கள் திமுகவின் எதிர் முகாம்களில் இருந்தும் ஊடகங்களிலும் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த விமர்சனங்களுக்கு அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.
1952 முதல் இதுவரை அமைந்த 15 மக்களவைகளின் உறுப்பினர்களாக இருந்த பலரைப் பற்றி மேலே எழுப்பப்பட்ட கேள்விகள் இப்போதும் எழுப்பப்படலாம் என்பதுதான் உண்மை. ஆங்கிலம் தெரிந்திருப்பதும் விவாதங்களில் பங்கேற்று உரையாற்றும் திறமை உள்ளவர்களும் மட்டுமே மக்களவை உறுப்பினர்களாக ஆகவேண்டும் என்று சட்டமும் இல்லை. அப்படிப்பட்ட தகுதி இல்லாதவர்கள் அனைவருமே செயல்படாத உறுப்பினர்களாக இருந்துவிடவும் இல்லை.
வைகைக் கரையில் தன்னைச் சுற்றி சிறியதொரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு அரசியல் நடத்தத்தான் அழகிரிக்குத் தெரியும் என்று விமர்சனம் செய்பவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். யமுனைக் கரையில் தேசிய அரசியல் நீரோட்டத்தில் சங்கமிக்கும்போது ஆர்ப்பாட்ட, அடாவடி அரசியலால் தங்களை அடையாளம் காட்டிக் கொண்ட பலரும் அரசியல் முதிர்ச்சியும் நாகரிகமும் பெற்றவர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள் என்பதுதான் சரித்திரம் நமக்கு உணர்த்தியிருக்கும் உண்மை.
திமுகவின் பொருளாளரும் முதல்வர் கருணாநிதியின் இளைய மகனும் மாநில உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்குக் கிடைக்காத வாய்ப்பு மத்திய அமைச்சராகி இருக்கும் மு.க.அழகிரிக்கு கிடைத்திருக்கிறது. முன்பு சென்னை மாநகர மேயராகவும் இப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் செயல்படும் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய சாதனை என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவுமே செய்துவிட முடியவில்லை. அதற்குக் காரணம் கருணாநிதி என்கிற ஆலமரத்தின் கீழே வேறு எதுவும் தழைத்துவிட முடியாது என்பதுதான்.
ஆனால் மத்திய அமைச்சரான மு.க.அழகிரிக்கு அப்படிப்பட்ட நிர்பந்தங்கள் எதுவும் இல்லை. மாநில அரசு போலில்லாமல் மத்திய அரசில் அமைச்சர்கள் தங்களது தனித்துவத்தை நிலைநாட்டிக் கொள்ளும் சுதந்திரமும் அவகாசமும் முழுமையாகத் தரப்படுகிறது. எடுத்த காரியத்தை முடிக்கும் திறமை உடையவர் என்று அவரது ஆதரவாளர்களால் வர்ணிக்கப்படும் மு.க.அழகிரி, மத்திய அமைச்சராக நல்ல பல திட்டங்களை நிறைவேற்ற முற்படுவாரேயானால் அவரை நாடு போற்றும்.
எழுபதுகளின் ஆரம்பத்தில் மத்திய உணவுத்துறையின் அப்போதைய அமைச்சர் சி.சுப்பிரமணியத்தின் தொலைநோக்குப் பார்வையில் உருவானதுதான் "பசுமைப்புரட்சி' திட்டம். அதன் விளைவாக இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது. உணவு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியத்தின் பங்களிப்பு இப்போதும் பேசப்படுகிறது, பாராட்டப்படுகிறது. அதுபோல அமைச்சர் மு.க.அழகிரி இந்திய சரித்திரத்தில் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டால் அது ஒன்றும் இயலாத விஷயமல்ல.
தேவிலாலும் லாலுபிரசாத் யாதவும் முலாயம்சிங் யாதவும் அமைச்சர்களாகச் செயல்பட்டு முத்திரை பதிக்க முடிந்ததென்றால், முதல்வர் கருணாநிதியின் மகனால் முடியாத விஷயமாக அது இருக்க முடியாது. அரசியலையும் நிர்வாகத்தையும் சுவாசித்து வளர்ந்த அழகிரி, நேர்மையும் திறமையும் உள்ள நிர்வாகிகளைத் தேடுகிறார் என்கிற செய்தி வியப்பளிக்கவில்லை. தனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு வித்தியாசமான அழகிரி, யமுனைக் கரையில் உருவாகக் கூடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இனிமேல் அழகிரி பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை. அதிகாரம் என்பதுகூட அவர் பார்க்காததோ, அனுபவிக்காததோ அல்ல. ஆனால், புகழ் என்பதும் சாதனை என்பதும் தகுதி என்பதும் அவர் தேடிக்கொள்ள வேண்டிய விஷயங்கள். அதற்கான வாய்ப்பை மத்திய அமைச்சர் பதவி அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. "செயல் வீரர்' அதை நன்கு பயன்படுத்துவார் என்று நம்புவோமாக
Wednesday, May 27, 2009
ஃபீனிக்ஸ் நம் திமுக - 25 : தேர்தல் 2009 : அலசல் - 10:அமைத்தோம் மத்தியில் மீண்டும் ஆட்சி
பலர் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றி வெற்றி பெற்ற நமது திமுக, பலரின் எதிர்பார்ப்புக்களை மீண்டும் ஏமாற்றி, இந்திய ஆட்சியில் மீண்டும் பங்கு பெற்ற நன்னாள்.
இந்நாள் தமிழர்களுக்கான நன்னாள்.
தி.மு.க. அமைச்சர்கள், தமிழ்-தமிழர்-தமிழினம் மேம்பட மீண்டும் உழைப்பர்.
அரசியல் மாற்றுக்கருத்து பெற்றவர்கள், பல வேடம் போட்டு நாடகம் ஆடுவர். அது அவர் பிழைப்பு. வைபவர்களும் வையகத்தில் தேவைதான், அது மிகுந்து தமிழர் நலம் கெடும் போது, ”அவதார புருஷர்” அவதரிப்பர். மாற்றம் நிகழ்த்துவர்.
தமிழ் - தமிழர் - தமிழின உணர்வாளர், இந்த அரசால் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கேட்டுப் பெறுங்கள்.
தி.மு.க:

மு.க. அழகிரி

தயாநிதி மாறன்

அ. ராஜா
பேராயம்:

ப. சிதம்பரம் - உள்துறை
பேராய அமைச்சர்கள் தேர்தல் 2009 முடிவுகளை நினைவில் கொள்க, தமிழ்-தமிழர்-தமிழினம் எனில் தமிழர் கேலி பேசப்படுவதைத் தமிழக மக்கள் இரசிப்பதில்லை. தமிழ்-தமிழர்-தமிழினம் என்ற நிலை வரின் தமிழ்-தமிழர்-தமிழினம் என்ற நிலையே தங்களின் முதல் நிலையாக இருக்க வேண்டும். இது மக்கள் விருப்பம். மகேசன் விருப்பம் என நான் கூறவும் வேண்டுமா?

ஜி.கே. வாசன்

பழநிமாணிக்கம்

ஜெகத்ரட்சகன்

நெப்போலியன்

காந்தி செல்வன்

நாராயணசாமி
தமிழக முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பவை-இருப்பவர்கள் தமிழ் - தமிழர் - தமிழின உணர்வாளரே அல்ல என்றால் அது மிகையல்ல.
தமிழ-தமிழர்-தமிழின முன்னேற்றத்திற்குத தடையாக இருப்பவர்களுக்குத் தொடர்ந்து தடா போடுங்கள் தமிழர்களே என்று வேண்டினால் அது மிகையா?
அன்புடன்
.கவி.
ஈழம் - அரசின் எதிர் யார்?
http://www.nytimes.com/2009/05/27/opinion/27wed3.html
”இலங்கை அரசின் எதிரி யார் என ஏன் அரசால் எதிரியையும் , பாமர மக்களையும் இனங்கான இயலவில்லை”
“தமிழகம் போன்ற ஒரு மொழி அடிப்படை மாநில அரசை உடன் உருவாக்கி வளர்ச்சிப் பணிகளுக்கு உதவ வேண்டும்.”
அன்புடன்
.கவி.
Tuesday, May 26, 2009
இல்லற இடுகைகள்: வள்ளுவத்தில் இல்லறம் - 1
நல்லறம் இல்லறம். இல்லறம் செழிக்க வள்ளுவரின் வாக்கு...
அறிவிலும், ஆற்றலிலும் சிறந்த ஆண்மகனை, ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வையே, கவிழ்த்து விடும். நிமிர்ந்து நோக்கினாள் என்னாவான்?
பாவம் ஆண் மக்கள் :)
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வள்ளுவன் சித்தரிப்பதையும் காணுங்கள்.
நிமிர்ந்த பெண்ணாக வள்ளுவர் விளக்குவதையும் நோக்குங்கள்.
“நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதர் தாக்(கு)அணங்கு
தாணைக் கொண்டன்னது உடைத்து” (109-1082)
நெஞ்சுக்கினியவள் பார்வையால் நோக்க, யானும் பார்க்க பார்த்த என்பார்வைக்கு அவள் எதிர்நோக்கு நோக்க அந்நோக்கு, ஏதோ படைகளையெல்லாம் ஒருங்கே நடைநடத்தி வந்து தாக்கியது போலல்லவோ
-(பெருங்கவிக்கோ செந்தமிழ் உரை)
அடிக்குறிப்பு
1. தாணை => படை
2. அணங்கு -> பெண்
3. நோக்குதல் => பார்த்தல்
Monday, May 25, 2009
கிரந்தம் தவிர் - 1
தமிழ் - தமிழர்- தமிழினம் எனப் பெரும் உரையாற்றும்/எழுதும் சில நண்பர்கள்/தோழர்கள்,
கிரந்தம் தவிர்க்க முயல்வோம் என்றமைக்காக பலமுறை நண்பர்களால் நிந்திக்கப் பட்டுள்ளேன்.
இருப்பினும் மாறுதல்கள் தேவையெனில், நிந்தனைகளை, சிந்தனையை விட்டகற்றாவிடின் சிந்தனை வெற்றி பெறாது...
குறிப்பாக ஈழத் தமிழரிடரும், சமயக் கருத்துக்களைக் கூற விழையும் நண்பர்களிடமும் கிரந்தப் பயன்பாடு மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது.
இது கிரந்தம் தவிர்க்க எண்ணும் நண்பர்களுக்காக சில சொற்கள் தமிழ் எழுத்துக்களில்:
ஸ்ரீ => திரு / அருள் (அருள் பெற்றவரை விளிக்கும் போது)
ஸ்ரீரங்கநாதர் => அருள்மிகு அரங்கநாதர்
ஸ்ரீமான் => அருள்மான்
ஸ்ரீமதி => அருள்மதி
ஸ்ரீசக்கரம் => அருள்சக்கரம்
ஸ்ரீலங்கா => சிறிலங்கா
ஸ்ரீகாந்த் => சிறிகாந்த்
ஸ்ரீதர் => சிறிதர்
அன்புடன்
.கவி.
தரமிழந்த தமிழ் இணையம்: தேர்தல் 2009 : அலசல் - 9 ஃபீனிக்ஸ் நம் திமுக - 24:
பண்பற்ற பதிவுகள், பின்னூட்டல்கள்.
தரமற்ற தமிழ்ப் பதிவுகள்.
இவை தான் தேர்தல் 2009ல் தமிழ் இணையத்தின் நிலை.
பல குழுமங்கள், பதிவுகள் எல்லாவற்றிலும் இதே இழிவு நிலை.
ஒரு சில தமிழ் உணர்வுத் தமிழர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் தவறவில்லை என்ற சிறு ஆறுதல்.
http://kavise.blogspot.com/2009/05/1.html?showComment=1242285780000#c487385520026199653
“தமிழ் -> தமிழர் => தமிழினம் =>> பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் - 1 பதிவில் மே 14 அன்று”
”மறைமலை உன்னைப் பற்றி நிறையச் சொன்னார்.உலக அரங்கில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் மொழிக்காகவும் இனத்துக்காகவும் நிறையச் சிந்தித்து எழுதுவதும்,கலைஞர் அவர்களின் பணியினை உலகறியச் செய்வதும் உச்சிமேற்கொண்டு பாராட்டப்பட வேண்டிய பணி என மறைமலை தெரிவித்தார்.நான் மிகமகிழ்வு எய்தினேன்.”
http://kavise.blogspot.com/2009/05/15-2009.html?showComment=1242490980000#c5405329958377508175
" என் அன்பான வாழ்த்துக்கள் கவி. தமிழுலகம் குழுமத்திலும் இங்கே தமிழ்மணத்திலும், பண்புடன் குழுமத்திலும் நான் பட்ட கஷ்டம் இந்த 50 நாட்களில் சொல்லி மாளாது. எந்த பதிவை பார்த்தாலும் கலைஞரை ஒருமையில் திட்டியும் குட்டியும் எத்தனை எத்தனை பதிவுகள். என்னால் தாங்க முடியாம திமுக ஆரதவு பதிவு போட ஆரம்பித்தேன்.”
”உங்க பீனிக்ஸ் தொடர் வர ஆரம்பித்தது. செம ரீச் ஆச்சு!”
“அதுபோல உடன்பிறப்பு, லக்கி, சாலிசம்பர், எல்லோருக்கும் என் வாழ்த்துக்களும் நன்றியும்!”
அபி அப்பாவின் கருத்துரை
http://kavise.blogspot.com/2009/05/18-2009-3.html?showComment=1242640380000#c2688675310290944482
திரு. கதிர்வீச்சு தமிழ் உணர்வு குறித்து
”தமிழின உணர்வுக்குப் பங்கம் என்றால் எம் தமிழர் சீறுவர் என்பதற்கும் இந்தத் தேர்தல் முடிகள் சிறந்த சான்றே." நமது கருத்துக்கு
“சரியாகச் சொன்னீர்கள் கவி, திமுகவும் இந்த நிலைபாட்டில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வரும் சட்டமன்ற தேர்தலில் முடிவுகள் இதே போல இருக்காது.என் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது. நன்றி.”
http://kavise.blogspot.com/2009/05/18-2009-3.html?showComment=1242640380000#c2688675310290944482
பல நண்பர்கள் , பல குழுமங்களில் தரமிழந்து கலைஞரை விமர்சித்த நிலையிலும் நிமிர்ந்து நின்று. ” இன நலம் கெட்டால் அங்கு சென்று போராடிய” எம் அன்பர்களுக்கு எமது நன்றி...
அரசியல் என்றால் அது போகட்டும் என்று விட்டு விடலாம்.
தமிழ் உணர்வு என்ற போர்வையில்.
மெத்தப் படித்த தமிழின இணையப் பயனர்கள்(1), சிந்தனையை அடகு வைத்து தன் நிலையில் மிகவும் கீழே சென்று தரம் குறைந்தார் என்றால் அது மிகையல்ல.
தேர்தல் 2009 முடிந்து , அரசமைப்பும் கடைசிக் கட்டத்தில் வந்துவிட்ட நிலையில், இனியேனினும் இது போன்று நம் இனத் தலைவர்களை இழிவாகப் பேசாதீர்கள் / எழுதாதீர்கள் என்று வேண்டினால் அது மிகையா?
அன்புடன்
.கவி.
அடிக்குறிப்பு
1. பயனர் => User
Friday, May 22, 2009
மக்களாட்சியா? மன்னராட்சியா? : ஃபீனிக்ஸ் நம் திமுக - 23: தேர்தல் 2009 : அலசல் - 8
அரசியல் களத்தில் உறவினர்களின் பங்கேற்பு உலகளவில் தவிர்க்க இயலாததாகியுள்ளது..
வேறு தகுதியானவர் இல்லையா? ஏன் தம் உறவினர்க்கே

நியாயமா, நேர்மையா என்று வாதிடுவது இந்த இடுகையின் நோக்கமல்ல.
யார் தவறு என்பதை விட, என்ன நிஜம் என்பதை உணர்த்துவதே இடுகையின் நோக்கம்.
திமுகவை மட்டும் குறை காணும் சில நண்பர்களின் பார்வைக்கு இந்த இடுகை.
அமெரிக்கா :
ஜார்ஜ் டபிள்யூ. புஷ் (43 வது தலைவர்-மகன்) ஜார்ஜ் புஷ் (41-தந்தை)
பெஞ்சமின் ஃகாரிசன்(23 - பேரன்) வில்லியம் ஃக்ன்றி ஃகாரிசன்(9-தாத்தா)
ஜான் குயின்சி ஆடம்ஸ் (6-பேரன்) ஜான ஆடம்ஸ்( 2 - தாத்தா)
ஃபிராங்கிளின் டெலினோ ரூஸ்வெல்ட், தியோடர் ரூஸ்வெல்ட் பங்காளிகள்
ஃபிராங்கிளின் டெலினோ ரூஸ்வெல்ட் 11 குடியரசுத் தலைவருக்கு உறவு.
ஜேம்ஸ் மேடிசன்(4), ஃஜச்சா

இது தவிர
ஹில்லாரி கிளிங்டன், பில் கிளிங்டன் என ..
இந்தியாவில்
மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி,சஞ்சய் காந்தி, ராசிவ் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா, ராகுல், மேனகா, வருண், பிரியங்கா பிள்ளைகள் வரை .....
ராமதாஸ், அன்பு மணி
எம்.ஜி.ஆர், ஜானகி ராமச்சந்திரன்.
(ஜெயலலிதா)சசிகலா, தினகரன் ,நடராசன், இளவரசி.... என.....
இந்திய அரசியலில் வாரிகள் பற்றி வெளிவந்த கட்டுரை கீழே (1)
வாரிசு அரசியல் உலகம் முழுவதும் இருக்கின்றது என்றால் மிகையல்ல.
தகுதியுள்ள வாரிசுகள் அரசியலில் மக்கள் மதிப்புடன் வருவது தவறாகாது என்றால் அது மிகையா?
அன்புடன்
.கவி.
1. பத்திரிக்கைச் செய்தி (தேர்தல் 2009 ல் வெளிவந்தது):

மகாராஷ்டிரா: நாட்டிலேயே குடும்ப அரசியல் அதிகம் கொடி கட்டி பறப்பது மகாராஷ்டிராவில் தான். சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே கட்சியின் நிர்வாக தலைவராக உள்ளார். பால் தாக்கரேயின் உறவினரான ராஜ் தாக்கரே மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவராக உள் ளார். பால் தாக்கரேயின் உறவுப் பெண் ஷாலினி, மகாராஷ் டிரா நவநிர்மாண் சேனா சார்பில் மும்பை வட கிழக்கு தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ளார். காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் சகோதரர் திலீப், மகாராஷ்டிர மாநில அமைச்சராக உள்ளார். தேஷ்முக்கின் மகன் அமித், லோக்சபா தேர்தலில் லடூர் தொகுதியில் போட்டியிடுவதில் ஆர்வமாக உள்ளார். மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா மகன் மிலிந்த் தியோரா தெற்கு மும்பை தொகுதி எம்.பி.,யாக உள்ளார். முதல்வர் அசோக் சவானின் சகோதரர் பாஸ்கர ராவ் கட்கோன்கர், நந்தேப் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,யும் நடிகருமான மறைந்த சுனில் தத்தின் மகள் பிரியா தத், தற்போது எம்.பி.,யாக உள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். தற்போது லோக்சபா தேர்தலில் அவர் களம் இறக்கப்பட்டுள்ளார். சரத் பவாரின் உறவினரான அஜித், மாநில அமைச்சராக உள்ளார். பா.ஜ.,வை பொறுத்தவரை பிரமோத் மகாஜனின் மறைவுக்கு பின் கட்சியில் சேர்ந்த அவரது மகன் ராகுல் மகாஜன் போதை வழக்கில் சிக்கி செல்லாக் காசாகி விட் டார். அதற்கு பின் பிரமோத்தின் மகள் பூனம் அரசியல் களத்தில் குதித்தார். கட்சியின் மாநில இளைஞர் அணியில் அவருக்கு முக்கிய பொறுப்பு தரப்பட்டுள்ளது.
ஆந்திரா: ஆந்திராவிலும் குடும்ப அரசியலுக்கு பஞ்சம் இல்லை. காங்கிரசை பொறுத்தவரை முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், தொழில் அதிபருமான ஜகன் மோகன் ரெட்டி முதல் முறையாக கடப்பா லோக்பா தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் மகள் புரந்தரேஸ்வரி விசாகப்பட்டினம் லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது கணவர் வெங்கடேஸ்வர ராவ் பரச்சூர் சட்டசபை தொகுதியின் வேட்பாளர். மத்திய அமைச்சர் பனபகா லட்சுமி பாபத்லா லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது கணவர் கிருஷ்ணய்யா கூடூர் சட்டசபை தொகுதியில் களம் இறங்குகிறார். குறிப்பாக, தற்போது மாநில அமைச்சர்களாக உள்ள பலர் தங்களது வாரிசுகளுக்கு சீட் கேட்டு காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை தொடர்ந்து அணுகி வருகின்றனர். ஆந்திராவை பொறுத்தவரை காங்கிரசிலும் சரி, தெலுங்கு தேசம் கட் சியிலும் சரி, மறைந்த என்.டி.ஆரின் குடும்பம் தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தெலுங்கு தேசம் கட்சிக்காக தற்போது என்.டி.ஆரின் வாரிசுகள் பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர்., ஆகியோர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
மத்திய பிரதேசம்: இந்த மாநிலத்தில் மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங் வாரிசுகள் அரசியல் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். செல்வாக்கு மிக்க காங்கிரஸ் தலைவரான அர்ஜுன் சிங்கிற்கு தற்போது வயதாகி விட்டது. இதனால், வாரிசுகளை ஆளாக்கி விட வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போதைய தேர்தலில் சத்னா தொகுதியில் தனது மகள் பீனாவையும், சித்தி தொகுதியில் மகன் அஜயா சிங்கையும் களம் இறக்கி விட வேண்டும் என்ற முடிவுடன் உள்ளார். காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவின் மகன் ஒமர் அப்துல்லா முதல்வராக உள்ளார். காஷ்மீரில் புகழ் பெற்ற மற்றொரு அரசியல் குடும்பமும் உள்ளது. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகமது சயீதின் குடும்பம் தான் அது. சயீதின் மகள் மெக பூபா முன்னாள் முதல்வர். தற்போது எம்.எல்.ஏ., வாக உள்ளார்.
பீகார்: இங்கு, ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் குடும்பத்துக்கு அரசியலில் முக்கிய இடம் உண்டு. இவரது மனைவி ரப்ரி தேவி பீகாரின் முன்னாள் முதல்வர். ரப்ரியின் சகோதரர் சாது யாதவ், லோக்சபா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளார்.
பஞ்சாப்: இந்த மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் கட்சியான சிரோமணி அகாலி தள தலைவரும், மாநில முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங் ஆகியோரின் குடும்பங்கள் தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பிரகாஷ் சிங் பாதலின் மகன் சுக்பீர் சிங் மாநிலத்தின் துணை முதல்வராக உள்ளார். பாதலின் மருமகள் ஹர்சிம்ரத் சிங் கவுரும் லோக்சபா தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ளார். காங்கிரசை பொறுத்தவரை அமரீந்தர் மனைவி பிரினீத் கவுர், மகன் ரணீந்தர் சிங் ஆகியோர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
சட்டீஸ்கர்: இந்த மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் செல்வாக்குமிக்க அரசியல்வாதியாக இருந்தார். தற்போது உடல் நலக்குறைவு காரணமாக அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. இதனால், கட்சியின் பொறுப்புகள் அனைத்தும் அவரது மகன் துர்கா சோரன் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. கட்சியின் பொதுச் செயலர் அவர் தான். காங்கிரஸ் தரப்பில் அஜித் ஜோகி தான் மக்கள் செல் வாக்கு உள்ள தலைவர். இவரது மனைவி ரேணு, தற்போது கோட்டா சட்டசபை உறுப்பினராக உள்ளார். லோக்சபா தேர்தலில் பிலாஸ்பூர் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.
கேரளா: இங்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமான கருணாகரனின் குடும்பம் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. கருணாகரனின் மகன் முரளிதரன், மகள் பத்மஜா ஆகியோர் தீவிர அரசியலில் உள்ளனர்.
கர்நாடகா: இங்கு முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் குடும்பத்திற்கு முக்கிய வேலையே அரசியல் தான். முன்னாள் முதல்வரும், தேவ கவுடாவின் மகனுமான குமாரசாமிக்கு மாநில அரசியல் போரடித்து விட்டது. இதனால்,லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் தொகுதியில் களம் இறங்கியுள்ளார். இவரது மனைவி அனிதா ஏற்கனவே எம்.எல்.ஏ.,வாக உள்ளார். தேவகவுடாவின் மற்றொரு மகனான ரேவன்னா மதச் சார்பற்ற ஜனதா தள கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளார்.
தமிழகம்: தி.மு.க., தலைவரும், முதல்வருமான கருணாநிதியின் மகன் ஸ்டாலின் மாநில அமைச்சராக உள்ளார். முதல்வரின் மகள் கனிமொழி ராஜ்ய சபா எம்.பி.,யாக உள்ளார். முதல்வரின் மற்றொரு மகன்

உத்தரபிரதேசம்: இந்தியாவுக்கு அதிகமான பிரதமர்களை உருவாக்கி கொடுத்தது உ.பி., மாநிலம் தான். தற்போது, இங்கு ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அமேதியில் அவரது மகன் ராகுலும் களத்தில் நிற்கின்றனர். சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மெயின்புரி லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது மகன் அகிலேஷ் யாதவ் பொரோசாபாத் தொகுதி வேட் பாளர். முலாயமின் உறவினர் தர்மேந்திரா யாதவ் புடாவோன் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார். ராஷ்டிரிய லோக்தள கட்சி தலைவர் அஜித் சிங் பாக்பட் தொகுதியிலும், அவரது மகன் ஜெயந்த் சவுத்ரி மதுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். பா.ஜ.,வை பொறுத்தவரை மறைந்த சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா, அவோன்லா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது மகன் வருண் பிலிபிட் தொகுதியில் களம் இறங்கியுள்ளார்.
பசப்பும் பச்சோந்திகள்: ஃபீனிக்ஸ் நம் திமுக - 22: தேர்தல் 2009 : அலசல் -7
Wednesday, May 20, 2009
மாவீரரும் - நேதாஜியும்
மாவீரரும் - நேதாஜியும்

மாவீரர் ஒரு வீரர் அடையும் உச்சியின் எல்லையை அடைந்துவிட்டார் என்றும், இல்லை என்றும் பலவாறு கருத்துக்கள் வெளியிடப்படும் நிலையில்....
மாவீரர்கள் என்றும் மக்கள் மனதில் இருந்து மறைவதுமில்லை. அழிக்கப் படுவதுமில்லை என்ற உணர்வுடன்,
மாவீரர் என்றும் நம்முடன் இருப்பார், நேதாஜி போல். பணியைத் தொடருங்கள். வெற்றி நமதே.....
”நேதாஜி குறித்து முந்தையப் பதிவுகளிலிருந்து”
1939ல் காந்தியடிகளின் வேட்பாளர் பட்டாபி சீத்தாராமையாவை தோற்கடித்து பேராயக் கட்சியின் தலைவரான நேதாஜி, ஒத்துழையாமையின் காரணமாக தலைவர் பதவியில் விலகி, தனிக் கட்சி கண்டார்.
இரண்டாம் உலகப் போரில் சப்பான், செர்மனியுடன் இணைந்து ஆங்கில ஆட்சிக்கு எதிராக போர்க்குழு அமைத்து இந்தியாவை படையெடுத்து வந்தார். இதன் நிகழ்வாக ஆங்கிலேய அரசின் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப் பட்ட நேதாஜியை, விடுதலை இந்தியா ஆங்கிலேய அரசிடம் ஒப்ப

கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திரஜித் குப்தா அவர்கள் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்த போதும் கூட, இது குறித்து அரசின் சார்பில் தெளிவான விளக்கம் வெளியிட்டதாகவும் தெரியவில்லை....
இந்திய விடுதலைக்குப் போராடிய ஒரு மாபெரும் இந்தியத் தலைவருக்கு சுதந்திர இந்தியாவில் நேர்ந்த நிலை இது.
அதனால் நேதாஜியின் பங்கு மக்களால் மறக்கப் பட்டதா?
இல்லையே...
தங்கள் நினைவிற்கு எடுத்த வரக் காரணம்,
விடுதலைக்குப் போராடும் வழி எவ்வழியாயினும், மக்கள் மறப்பதில்லை. அதன் தலைவர்கள் மக்கள் நெஞ்சில் என்றும் நீங்கா இடம் பிடிப்பர்.
========
அன்புடன்
.கவி.
அழிவு ஆட்ட அர்த்தநாரிகள்: ஃபீனிக்ஸ் நம் திமுக - 21: தேர்தல் 2009 : அலசல் -6
இந்த அர்த்தநாரித் தமிழரின் ஒரு கண்ணைக் குத்திக் கிழித்து இரத்தம் வடிவது கண்டு மற்ற கண் கண்ணீர் வடித்துத் துடித்த போது
இரு கைகளில் ஒன்று தமிழகத் தமிழர். மற்றொன்று ஈழத் தமிழர் என்பதை விளக்கவும் வேண்டுமா?
ஈழச் சிக்கலில் கவனத்தை விடுத்து, தமிழக அரசியலில் நாட்டம் கொண்டு, கவனத்தைத் தமிழக அரசியல் பக்கம் திருப்பியதனால் தான் நான்காம் ஈழ விடுதலைப் போர் இழப்பில் முடிந்தது என்றால் அது மிகையா?
துயருடன்
Tuesday, May 19, 2009
ஃபீனிக்ஸ் நம் திமுக - 20 :நதி நீர் : தேர்தல் 2009 : அலசல் -5
தேசியத்தை முதலில் நிறுத்தும் நண்பர்கள், நதி நீர்ப் பங்கீட்டில் நாம் இன்றளவும் ஏமாற்றப் படுவதை ஒரு நிமிடம் சிந்திப்பார்களா?


Monday, May 18, 2009
ஃபீனிக்ஸ் நம் திமுக - 19 :சேதுக் கடல் வழி : தேர்தல் 2009 : அலசல் -4


இப்படிப் பல வகையில் மிரட்டப் பட்டது தென் மக்களின் உயிர் நாடியான சேதுக் கடல்வழித் திட்டம்..
தென் தமிழகத்தில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற வைத்ததின் மூலம், இது எங்கள் உயிர்நாடி என்று எதிர்ப்பாளர்களுக்கு உணர்த்தினர் எங்கள் தென் தமிழக மக்கள் என்றால் அது மிகையல்ல.
இந்திய அளவிலும் பாசகவைப் பின் தள்ளி, சேது வழியை ஆதரித்த காங்கிரசை தேர்ந்தெடுத்ததன் மூலம் மதத்தின் பேரில் வளர்ச்சித் திட்டங்களை முடக்க நினைப்பவர்களை முட்டாளாக்கினர் எம் மக்கள் என்றால் அது மிகையா?
அன்புடன்
ஈழம் -> நாளை
தன் மக்களைக் காக்கத் தவறும் எந்த நாடும், பிரிவினை-விடுதலைப் போராட்டத்தை எதிர் கொண்டே ஆக வேண்டும், இது இயற்கை நியதி.
மனித நேயத்தைக் கொன்ற எந்த அரசும் நிலைத்ததாக வரலாறும் இல்லை.
தோல்விகளால் துவளாதே தோழா.
நாளைய நாள் நிச்சயம் நம் நாளே.
விடுதலைப் போராட்டங்கள் உடன் வெற்றி பெறுவதுமில்லை, அதன் நிழல் என்றும் அழிவதுமில்லை.
மனதைத் தளரவிடாதீர்கள் தோழர்களே.
நம் விவேகமே இனி நம்மைக் காக்கும்.
நியூட்டனின் இரண்டாம் தத்துவத்தின் படி, அது மாற்று வடிவத்தில் இயங்கிக் கொண்டே இருக்கும். தேவைப் படும் காலத்தில் மீண்டும் உருப் பெறும், தேவைப் படின் வேறு வடிவில், இது தான் விடுதலைத் தத்துவம்.
போராட்டத்தில் பாதிக்கப் பட்ட நம் மக்களைக் காப்போம் தோழர்களே.
இருப்பவர்களைக் காக்க வேண்டும் தோழர்களே.
கனன்று கொண்டிருக்கும் எரிமலை பெருமழையால் தணிந்திருக்கலாம்.
எரிமலையில் தகிக்கும் அனல் தணிந்து விட்டது என்பது எதிரிகள் அறியாத பிதற்றல்.
காத்திருங்கள் நல்ல காலத்திற்கு.
பாலைவனம், சோலை வனம் ஆவது உங்கள் கையிலே.
பொறுத்திரு, கருத்துடனிரு, பின் விழித்தெழு தோழா
இறுதி வெற்றி நம் தமிழர்க்கே
.கவி.
ஃபீனிக்ஸ் நம் திமுக - 18 :: ஈழம்: தேர்தல் 2009 : அலசல் -3
தமிழக மண்ணில் ஈழம் குறித்த அணுகுமுறை சில ஈழத் தமிழ் ஆதரவாளர்களால் இரு முறை பெரும் பிழையாகக் கையாளப் பட்டது.
இரண்டாம் பெரும் பிழை, 2009 ல். திமுகவை, தலைவர் கலைஞரை பழித்துப் பேசியது. ஈழ ஆதரவு என்ற பெயரில் கபட நாடகம் ஆடியது. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் மன உளைச்சல் தந்து கலைஞரை உருக்குலைய நினைத்தது.
பல குழுமங்களிலும், பல பதிவர்களும் தமிழக அரசியல் 2009ல், திமுகவையும், கலைஞரையும் ஈழ எதிரியாகச் சித்தரித்து பொய்யுரைத்தது.
ஒவ்வொரு குழுமங்களிலும், கலைஞரையும், திமுகவையும், திமுகவினரையும் “ஈழ எதிரியாக” சித்தரிப்பது மிகத் தவறான அனுகுமுறை என எழுதி எழுதிக் காய்த்துவிட்ட எம் விரல்கள்.
“அடிவருடி”,”பெட்டி பெற்றவர்” என்ற கேலிப் பேச்சுக்கள்.
“தனி மடலில்” நம்மைத் தாக்கிக் கொள்வதாக குழுமத்தில் செய்தி அளித்து மகிழ்ந்து கொள்வது. இவர்களின் நஞ்சு கலந்த தூஷனைகள் கொஞ்சம் நஞ்சமா?
திமுக ஒழியும் என்றவர் இன்று எங்கோ ஓடி ஒளிந்தனர்.
இவர் எந்த இனம் என்று அடையாளங்காட்டி வளர்த்த எம் கலைஞரை “இனத் துரோகி” என்றனர் இந்த இனமறியோர்.
நெருக்கடி நிலை கண்ட நாம், இந்தச் சிறு நெருக்கடிக்குத் தகர்வோமோ, நிலைத்து நின்று எதிர் கொண்டோம். வாதாடினோம்.
அவரின் பொய்யுரையை சான்றுகளுடன் முறியடித்தோம்.
தமிழ் மக்களுக்கு உண்மையை உணர்த்தி வெற்றியும் பெற்றோம்.
இந்த ஏமாற்றுக் காரர்களின் திடீர் ஆதரவு...
ஏன்ஈழத் தமிழர் ஆதரவிற்கா ?
இல்லை.
சில மக்களைவை உறுப்பினர் பதவிக்கும் , மத்திய அமைச்சர் பதவிக்குமா?
மனச் சாட்சி உள்ளவர்கள் மனம் சாட்டையடி கொடுக்கும்.
இல்லை, இல்லை எம் தமிழர், மேன்மக்கள், அவர்களுக்கு ’சீட்’டடி கொடுத்துள்ளனர்.
பதவி மோகம் கொண்டவருக்கு பரிசு தந்தனர் எம் தமிழ் மக்கள்.
ஈழத்தை இந்த “சீட்டு” வெறியர்களிடமிருந்தும் காப்பாற்றினர்.
மத்தியில் காங்கிரசால் நிச்சயம் வங்காள தேசம் போன்ற நிலை எடுக்க இயலும்.
அதைச் செய்யாமல் பிழைத்த சில காங்கிரசுத் தலைவர்களுக்கும் மக்கள் தண்டனை அளித்துள்ளனர் என்பதையும் மறக்க இயலாது.
தேர்தலுக்கு முன்னர் காங்கிரசுக்கு நாளைய அறிவுரையாகவும் இதைக் குறிப்பிட்டுள்ளோம். இனியேலும் பிழைக்காமல் நல்ல முடிவு எடுப்பது நலம்.
காங்கிரசில் பதவி பெறும் மத்திய தமிழ் அமைச்சர்கள் நினைவில் கொள்ள வேண்டும். முதலில் நீங்கள் தமிழர்கள், பின்னரே இந்தியர்.
தமிழின உணர்வுக்குப் பங்கம் என்றால் எம் தமிழர் சீறுவர் என்பதற்கும் இந்தத் தேர்தல் முடிகள் சிறந்த சான்றே.
திமுகவின் தமிழர் அன்பு இன்று நேற்றல்ல, பல ஆண்டுகள் சரித்திரம் பெற்றது.
ஏமாற்றுக்காரர்களை நம்பி பிழைத்த ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் மீண்டும் ஒரு முறை ஏமாந்து போனார்கள் என்பது தான் நிஜம்.
தலைவர் கலைஞரின் இந்தச் சொற்கள், பிழைத்த ஈழ உணர்வாளர்களுக்கும் பொருந்தும்.
” மறப்போம்-மன்னிப்போம்.
உறவுக்கு கை கொடுப்போம்;
உரிமைக்கு குரல் கொடுப்போம்”
”தூற்றல்- துணிந்து பொய்யுரைத்தல் போன்ற நிலைகள்- தரமற்ற விமர்சனங்கள்- தேர்தல் நேரமெனில் இவை தவிர்க்க முடியாதவை சிலருக்கு- சில தலைவர்களுக்கு- சில ஏடுகளுக்கு!
அவற்றையெல்லாம் மறந்து விடுவோம்!
மறப்போம்-மன்னிப்போம் என்ற மாபெரும் தலைவனின் வழி வந்தவர்கள் நாம் என்பதை மட்டும் என்றும் மறவாமல் இருப்போம்.”
ஆம் தோழர்களே மறப்போம் துணிந்து பொய்யுரைத்தவர்களை.
தமிழகம், இந்திய அரசை மீண்டும் மீண்டும் வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு என்றும் கலைஞர் மீண்டும் தெரிவித்துள்ளார் என்பதை நோக்க நண்பர்களே.
இதோ “நாளை ஈழம்” என்று பொய்யுரைக்க மாட்டோம்.
விடுதலைப் போராட்டங்கள் உடன் வெற்றி பெறுவதுமில்லை, அதன் நிழல் என்றும் அழிவதுமில்லை.
நியூட்டனின் இரண்டாம் தத்துவத்தின் படி, அது மாற்று வடிவத்தில் இயங்கிக் கொண்டே இருக்கும். தேவைப் படும் காலத்தில் மீண்டும் உருப் பெறும், தேவைப் படின் வேறு வடிவில், இது தான் விடுதலைத் தத்துவம்.
தன் மக்களைக் காக்கத் தவறும் எந்த நாடும், பிரிவினை-விடுதலைப் போராட்டத்தை எதிர் கொண்டே ஆக வேண்டும், இது இயற்கை நியதி.
இந்தத் தேர்தல் அரசியல் சுயலாபத்திற்காக திடீர் ஈழ ஆதரவாக மாறியவர்களையும், பதவிக்காக ஈழ ஆதரவு நிலை எடுத்தவர்களையும் மீண்டும் இனங்காட்டி ஒதுக்கினர் தமிழர் என்றால் மிகையல்ல.
என்றும் போல் எம் கலைஞர், ஈழ ஆதரவுப் போராட்ட நிலைகளில் ஈடுபடுவார் என்று தெளிவான முடிவையும், தன் நிலைப்பாட்டையும் மீண்டும் நிலைப் படுத்தியுள்ளார் என்றால் அது மிகையா?
அன்புடன்
.கவி.