இல்லற இடுகைகள்: வள்ளுவத்தில் இல்லறம் - 2
அமெரிக்காவிலிருந்து ஆண்டநாயகபுரம் வரை, மனித இனத்திற்கென்று ஒரு பண்பு உண்டு, கண்டவரிடமெல்லாம் காதல் மொழி கூறுவது காமமேயன்றி காதலாகாது. கண்டவரிடமெலாம் காமுறுவது, மனித இனத்தின் பண்பும் ஆகாது.
நோய் உருவாக முக்கிய காரணியே, நோய் தீரும் மருந்தாக அறிந்த மகத்துவம்.
எல்லாப் பிணிக்கும் பிற மருந்துண்டு, காதல் நோய் தவிர.
காதல் நோயை, நோய் தந்தவனோ அல்லது தந்தவளோ தான் தீர்க்க முடியும்.
மாற்றோர் தீர்க்க இயலா என்றார் வள்ளுவர்.
நீங்களும் அனுபவப் பட்டிருப்பீர்கள் தானே! :)
’காதல் கொண்டவரைக் கண்டு அணைத்தால் தான் காதல் நோய் தீரும்’ என்பது வள்ளுவர் வாக்கு.
”பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து” - (111-2)
உடலுக்குற்ற நோய்க்குப் பல்வேறு மருந்துகள் உள்ளன.
ஆனால் இவளால் ஏற்பட்ட இக்காதல் நோய்க்கு இவளே மருந்து ஆனாள்!
-(பெருங்கவிக்கோ செந்தமிழ் உரை)
அடிக்குறிப்பு
1. பிணி - நோய்
2. அணியிழை -> அணிகலன் அணிந்திருப்பவர்.
3. பிறமன் => மற்றவை
சிந்தனைக்கு :
அணிகலன்களை ஆண், பெண் என் இரு பாலாரும் அணிந்திருந்தனர் குறள் காலத்தில், எனவே தலைவன் தலைவி பால் கொண்ட காதல் குறித்து மட்டும் என்பதல்லாமல். தலைவி தலைவன் மேல் கொண்டகாதல் நோய்க்கு மருந்து நோய் தந்த தலைவனும் எனவும் கொளல் வேண்டும்
Saturday, May 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//உடலுக்குற்ற நோய்க்குப் பல்வேறு மருந்துகள் உள்ளன.
ஆனால் இவளால் ஏற்பட்ட இக்காதல் நோய்க்கு இவளே மருந்து ஆனாள்!
//
வள்ளுவர் சொல்ற படி இருந்துட்டா வேற எதுவுமே வேணாமே!! அவுரு சொல்லாதது எதுனா யோசிச்சா அது Marketing மட்டும் தான்னு நினைக்கிறேன்.
நேரம் இருந்தா நம்ம பக்கத்துக்கும் வந்துட்டுப் போங்க..
www.senthilinpakkangal.blogspot.com
Post a Comment