தேர்தல் 2009 முடிவுக்கு வரும் நேரம் நெருங்கி விட்டது.
வாரங்கள் நாட்களாகி, நாட்கள் மணிகளாகி, மணிகள் நிமிடங்களாக உள்ளன.
நிமிடங்கள் வினாடிகளாகும் வரை முயற்சியைக் கைவிடாதீர்கள் தோழர்களே
திமுகவிற்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்துங்கள்.
வாக்குச் சீட்டின் வழி புரட்சி உருவாக்க நாம் எடுத்த உறுதிமொழி நம்மை எதிர்ப்போர் வியக்கும் வண்ணம் இருக்கும். நமக்கு இது புதிதல்ல என அறியாதவர்களுக்கு உணர்த்தும் சமயத்தின் சில கடைசி நிமிடங்கள்.
தளராமல் தங்கள் வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடருங்கள்.
திமுகவிற்கு வாக்களித்த எம் தமிழினப் பெருமக்களுக்கு நன்றி!!!
திடீர் இன ஆதரவாளரின் செவி மடுத்து, அவருக்காக திமுகவை எதிர்த்து ஓட்டளித்து இருந்தீரெனில், தவறாமல் அடுத்த தேர்தலில் சிந்தித்து வாக்களியுங்கள்.
சிலரின் சாயங்கள் அடுத்த தேர்தலுக்குள் வெளுத்து விடலாம் தானே.
மடற்குழுவில் தன் அதிகாரத்தை வைத்து மடலை நண்பர்களுக்கு அனுப்பாமல், இடையில் மடக்கி விட்ட மட்டுநர்களும், வலைப் பக்கங்களில் திமுக எதிர்ப்பு குறித்த செய்தியை மட்டும் முதன்மையாகப் போட்டு,
மக்களிடம் திமுகவின் புகழை மங்க வைத்து விட்டதாக நினைத்து மகிழ்ந்த பூனைகள் அடுத்த முறையாவது திருந்தட்டும்.
தன்னை உருவாக்கிய தந்தை திமுகவை எதிரி என எள்ளி நகையாடும் இன உணர்வாளர் மாற வேண்டும்.
தன்னை உருவாக்கிய தந்தை திமுகவை எதிரி என எள்ளி நகையாடும் இன உணர்வாளர் மாற வேண்டும்.
தொடர்ந்து ஃபீனிக்ஸ் எம் திமுக படித்து வந்த நண்பர்களுக்கும்/ ஒத்த கருத்து இல்லாத உயர் நண்பர்களுக்கும் என் நன்றி.
வாழ்க தமிழ்!
வெல்க தமிழர்!!
வளர்க தமிழினம்!!!
அன்புடன்
.கவி.
2 comments:
மேல் உள்ள படத்தில் இருப்பது உங்கள் தந்தையா?..
உங்கள் தந்தைக்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம்?.. இதுவரை இந்த தொடர் படித்தவர்களுக்கு இபொழுது தெரியும் நீங்கள் ஏன் திமுகவிற்கு ஒட்டு கேட்டீர்கள் என்று..
உங்கள் தந்தைக்கு திமுக செய்ததற்கு நன்றி கடனாக அவர்களுக்கு ஒட்டு சேகரித்து முடித்துவிட்டீர்களா?..
உங்களை போன்ற சுயலாபம் பார்த்து ஒட்டு கேட்க்கும் ஒட்டுண்ணிகள் இருப்பதால் தான் ஜனநாயகம் சந்தி சிரிக்கிறது... இந்த பொழப்புக்கு,,,
அன்புள்ள திரு குலமங்கலம் பாக்யா.
வருகைக்கு நன்றி!!!
ஆம் பெருங்கவிக்கோ என் தந்தை. வா.மு.சே. என்று என் பெயருடன் மறக்காமல் இணைத்தற்கு அதுவும் காரணம்.
தமிழன் நிலை இன்றும் இந்த அளவே.
திமுக என் தந்தைக்கு என்ன செய்துள்ளது என்று அன்பு கூர்ந்து பட்டியலிடுங்களேன்.
மகனான எனக்கே தெரியாமல் தங்களுக்குத் தெரிந்தது வியப்பே.
அன்புடன்
.கவி.
Post a Comment