Monday, May 11, 2009

ஃபீனிக்ஸ் எம் திமுக - 7 : தேர்தல் 2009

ஃபீனிக்ஸ் எம் திமுக - 7 : தேர்தல் 2009

வாக்குப் பதிவு நேரம் நெருங்கிவிட்டது.

தேர்தல் 2009 முடிந்தவுடன், ஈழத்தைத் தங்கத் தட்டில் இலங்கை, தமிழர்களுக்கு வழங்கி விடும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை.

போராட்டங்கள் வெற்றி பெற தமிழர் நிலை உணர்ந்த, தமிழருக்கு ஆதரவாக செயல் படும் கட்சிகளுக்கே தொடர்ந்து வாக்களிக்க வேண்டும்.

ஒவ்வொரு வேட்பாளர்/ கட்சியின் நிலையறிந்து வாக்களிக்க வேண்டும்.

சத்தமில்லாத இந்த நேரத்தில் சிந்தியுங்கள் தமிழகத்தில் வாக்குரிமை உள்ள தமிழர்களே.

திமுக என்ற பெரும் இயக்கம் ஒரு பக்கம்.

நேரத்திற்கேற்ப நிறம் மாறும் கூட்டம் ஒரு பக்கம்.

தமிழ் / தமிழுணர்வு வளர சிந்தித்து வாக்களியுங்கள்.

தேர்தல் 2009 துடன் தமிழர் சிக்கல் முடிவுக்கு வந்து விடும் என்று பிழையான வாதத்தை அடிப்படையாகக் கொள்ளாதீர்கள்.

நாம் போராட வேண்டிய காலங்களை எதிர் கொள்ள தமிழகத்தில் தமிழர்க்கு ஆதரவான நிலைப் பாடுள்ள அரசு தமிழகத்தில் அவசியம்.

கழைக்கூத்தாடிகள் காசுக்காக நடிப்பர். தேர்தல் 2009 நாடகம் முடிந்ததும், வேறு வேடம் தரிக்கப் போய்விடுவர். அவரைக் குறை கூறலும் ஆகாது. அது தான் அவர் வாழ்க்கை.

இந்தத் திடீர் ஆதரவாளர்களின் உண்மை நிலை அறிந்து வாக்களியுங்கள்.

தேர்தல் 2009ல், ஃபீனிக்ஸ் எம் திமுகவிற்கு வாக்களித்து தமிழ் / தமிழர் மேலும் உயர வழி வகுப்பீர் என்ற நம்பிக்கையுடன்

.கவி.

7 comments:

Unknown said...

YOU SON OF PITCH.

.கவி. said...

மீண்டும் வருகை புரிந்தமைக்கு நன்றி சாம்.

நீங்கள் சிங்கப்பூரினா அல்லது ஜப்பான் தேசத்தவரா?

இந்த நேரத்தில் நீங்கள் தமிழகத்தில் இல்லை என்பது தெளிவு. வாக்குரிமை இல்லாத நீங்கள் ..................

.கவி.

Anonymous said...

//
திமுக என்ற பெரும் இயக்கம் ஒரு பக்கம்.

நேரத்திற்கேற்ப நிறம் மாறும் கூட்டம் ஒரு பக்கம்.
//
Adaindhal Dravida Nadu.. illayel sudugadu.
changed its color to
Maanilathil Suyatchi. Madhiyil Koottatchi..

Rubaikku moonu padi Arisi
changed its color to
Oru Rubaikku oru padi Arisi .. immediately after coming to power

im endral siraivasam. Yen endral vanavasam about misa
changed color to
Neruvin magale varuga.. nilayana aatchi tharuga..

kaavi pandarangal katchi.. BJP..
changed color to
'partners in crime' for 4 years and 11 months
changed color to
kaavi katchi again after end of the term..

changed colors twice in the last year alone during the relation with Sun Tv..

Actually, DMK is master in changing colors. ADMK tries to mimic them..

.கவி. said...

வருகைக்கு நன்றி அடையாளமற்றவரே.

”மாற்றம் ஒன்றே மாறாதது” என்ற பெரும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவன் நான்.

மாற்றங்கள் எம் மக்களுக்கு நன்மை தரும் என்றால் அம் மாற்றங்களை வரவேற்பதில் முதல் வரிசையில் நிச்சய்ம நீங்கள் எம்மைக் காணலாம்.

எம் மக்களை ஏமாற்றும் வேடதாரிகள் மாற்றம் என்ற போர்வையில் ஏமாற்றுவதை இன்னுமா நீங்கள் அறியவில்லை அடையாளமற்ற நண்பரே.

.கவி.

Anonymous said...

கலக்கல்

Anonymous said...

ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி

.கவி. said...

வருகைக்கு நன்றி தோழர்களே.

அம்மாவின் ஆதரவும், இனத்திற்குத் தேவைதான், ஆனால் அது நிலையானதா?

கலைஞரே பழிக்கும் இவர்களின் தவறுகளின் பின்னனி என்ன?

அன்புடன்
.கவி.

Post a Comment