2009 தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பல மாற்றங்களை உருவாக்கி உள்ளன.
பல நட்சத்திரங்கள் ஒளி இழந்தன.சில தங்கங்கள் மீண்டும் புடமிடப்பட்டன.
தகிக்க முடியாத தணலில் அழிக்கப்படுவார் என்று சிலர் ஆருடம் கூற, ஒளிரும் பொன்னாக மீண்டும் உயிர்ப்பித்தார்.
இராவணர் தேசத்தில் நம் தமிழ் மக்கள் நலனை எண்ணி எம் சீதை வாடியிருக்க, தமிழக இராமர் அக்கினிப் பரிட்சை வேண்டும் எனக் கூக்குரலிட்டனர்.
எம் தமிழ்ச்சீதையின் தமிழ்க் கற்பில் களங்கம் எனக் கூறிக் களங்கினர் (1).
கூக்குரலிட்ட தமிழக இராமர்கள் முகம் வாட வென்றார் அக்கினிப்பரிட்சை.
எப்பொழுதும் இல்லாத அளவு எள்ளி நகையாடப்பட்ட அரசியல் சித்தர் நம் கலைஞர்.
தள்ளாத வயதில், இளைஞர்களே தாங்க இயலாத முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைக்குப் பின் தன்னுயிர் வருத்தி உழைத்தால் அதற்கு சிலர் இட்ட பெயர் நாடகம்.
முதுமையின் முதிர்வுகள் வருத்த, மருத்துவம் பெற மருத்துவமனை சென்றால், சில மானமற்ற மறவர் மனித மூப்பையும் மதிக்காமல், மிழறிய மனதை வறுக்கும் மதிப்பற்ற மிழற்றுதல்கள்(2).
தமிழ் உணர்வு என்ற பெயரில் தமிழக மண்ணில் நடத்தப் பெற்ற கபட நாடகங்கள்.
தமிழ்மண்ணை நாடக மேடையாக்கி, தமிழர்களை நடிகராக எண்ணி இயக்க எண்ணிய இயக்குநர் சிகரங்கள்....
பல முறை கூறியுள்ளேன், மீண்டும் ஒருமுறை.
அதிமுக ஆதரவு பிரச்சாரம் என்றால், அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டும்.
அதில் தவறு இல்லை.
மக்களாட்சி.
இரு பெரும் கட்சிகள் இருந்தால் தான் ஆளுங்கட்சியும், எதிர்க் கட்சிக்குப் பயந்து நல்லாட்சி கொடுக்கும்.
இரு கட்சிகள் இல்லையெனில், மன்னராட்சி ஆகி விடும், மக்களாட்சி அல்ல.
ஆகவே, மக்களாட்சித் தத்துவத்தில் பெரும் நம்பிக்கை கொண்ட திமுகவினர், எதிர்க் கட்சி அதிமுகவை மக்களாட்சிக் கோட்பாடுகளின் அடிப்படையில் எதிர் கொண்டு பெரு வெற்றி பெற்றனர்.
படுத்துக் கொண்டே வெற்றி பெற்றார் நம் கலைஞர்.
பச்சைத் தமிழன் என்று போற்றப் பட்ட கர்மவீரர் காமராசர் சாதிக்க இயலாததையும் கலைஞர் சாதித்துக் காட்டினார்.
அறுபது வயது அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிய கலைஞரின் மிகப் பெரும் பலம், அவரைச் சுற்றி அவரின் தமிழுணுர்வைப் போற்றும் தமிழ்ப் பெருமக்கள்.
பலமுறை ஆட்சியில் இருந்தும் எனக்கு என்ன பலன் என்று பலனை எதிர்பார்க்காமல் கலைஞருக்கு இன்றும் இணைந்து தூணாக நிற்கும் அன்புத் தமிழர் பலர்.
கலைஞருடன் இவர்கள் சந்தித்த வசைமொழிகள்,
அக்கினிப் பரிட்சைகள், தமிழ்க் கற்புச் சோதனைகள் ஏராளம்.
தமிழுணர்வு எனில் எடுத்தெறி கலைஞரை என உணர்வாளர்களின் உள்ளத்தைக் கசக்கும் மொழிகள், எழுத்தெரிகணைகள்.
மீண்டு வந்தனர் தமிழ் உணர்வாளர்கள் மீண்டும்.
இந்தத் தேர்தலில் மீண்டும் எழுந்து நின்றது எம் கலைஞரும் எம் தமிழ் உணர்வாளர்களும் என்றால் அது மிகையா?
அன்புடன்
.கவி.
அடிக்குறிப்பு :
1. களங்கினர் => களங்கத்துடன் கலங்கல், பொய்மையான கலக்கம்.
2. மிழற்றல் => மழலைத் தன்மாய் பேசல்
7 comments:
thooooooooooo!
அன்றைக்கும் இன்றைக்கும் நக்கி பிழைப்பவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும் அன்று எம்ஜிஆரை நக்கி பிழைத்தார்கள் இன்று ஜெயலலிதாவை
வருகைக்கு நன்றி அடையாளமற்றவரே.
பிழைத்துப் போகட்டும் விடுங்கள். இவர்களைத் துப்பி உங்கள் எச்சில் மாசு பட்டு விடப் போகின்றது.
.கவி.
சரி, எல்லாம் நன்மைக்காகவே நடக்கிறது. அனால் இலங்கை வாழ் தமிழரின் எதிர்காலம் பற்றி திமுக தர்ப்து என்ன நிலைப்பாடு எடுத்துள்ளது என்று தெரிஉமா? தேர்தலின் இறுதி கட்டத்தில் தலைவர் கூறியது போல இனியும் தனிஈழம் அமைத்துதரப்படுமா? அல்லது இனி அங்கு வாழ யாருமில்லை என்று கைவிடப்படுமா? சொல்லுங்கள் கவியரசரே.
உங்கள் புகைப்படத்தை பார்த்தவுடன் கேட்கதொன்றியது. கோபித்து கொள்ள மாட்டீர்கள் என்பதால் கேட்கிறேன். தலைவர் உங்களை பார்த்து ' உங்கள் நெற்றில் என்ன?' என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவீர்கள் கவி அவர்களே?
வருகைக்கு நன்றி அன்புள்ள கதிர்வீச்சு.
படத்தில் உள்ளவர், நானல்ல.
பெருங்கவிக்கோ வா.மு.சே.
என் உணர்வுப் பசிக்கும், உள்ளப் பசிக்கும் உணவீந்து என்னைக் காப்பவர்.
அற்ற குளத்தில் அறு நீர்ப் பறவைகள் ஆகி வெற்றுக் குளத்தை விட்டு வெற்றிக் குளத்தை நோக்கி ஓடிய பறவைகள் மத்தியில் எம் உணர்வுக் குளம் என்று நீருக்காக மாற்றுக் குளத்தைத் தேடி ஓட மறுத்தவர். மறுப்பவர்.
நம் தலைவர் கலைஞரும் அறிவார்.
இதே கேள்வியை 1970ல் கலைஞருடன் பாடிய கவியரங்கில், நண்பர் மணிமொழி எழுப்ப, பெருங்கவிக்கோ
“கொட்டை போட்டாலும் நான் கலைஞருக்கு என்றும்
பட்டை போடமாட்டோன்” என்று பாடியவர்.
கவியல்லவா, அவர் வாக்குப்படியே, இன்றளவும் கலைஞர் ஆதரவாளராக.
அவரை நகைத்துரைத்த நண்பர் மணிமொழி மாற்றுக் கழகம் சென்றது மற்றொரு தனிக் கதை.
அன்புடன்
.கவி.
அருமை. தவறுக்கு வருந்துகிறேன் கவி அவர்களே. அவருக்கு என் மரியாதைகளும், வந்தனமும்.
என்னுடைய முதல் கேள்விக்கு இன்னும் நீங்கள் பதில் கூறவில்லை. இது எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி. திமுகவின் தீவிர விசுவாசிகளான உங்கள் போன்றோரிடம் என்ன பதில் உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம் கேட்கிறேன்.( அபி அப்பா, லக்கி லுக், உடன் பிறப்பு, போன்றோரிடமும் கேட்க தோன்றிய கேள்வி)
Post a Comment