Friday, May 8, 2009

ஃபீனிக்ஸ் எம் திமுக - 4 : தேர்தல் 2009

ஃபீனிக்ஸ் எம் திமுக - 4 : தேர்தல் 2009

”ஆளை சொல்லு ரூலை (Rule) சொல்றேன்” என்ற தொடர் வேடிக்கை போல் தோன்றினாலும், மிக விபரீதமான காழ்ப்புணர்ச்சி இதன் பின்னால் தலை விரித்தாடுவது உன்னிப்பாகக் கவனிப்பவருக்குத் தென்படும்.

தமிழ் மொழி செம்மொழி என்று அறிவிக்கப்பட ஒரு போராட்டம், திரைப் படங்களுக்குத் தமிழில் பெயர் சூட்ட ஒரு சலுகை, அகரமுதலி தொகுக்க, தமிழ் இணையப் பல்கலைக் கழகம், தொடர் வண்டியில் தமிழ், உந்து வண்டி பதிவுகளில் தமிழ், நீதி மன்ற மொழியாகத் தமிழ் என நம் நாட்டில் தமிழ் வளர தழைத்தோங்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும் நமது காமாலைக் கண்ணர்கள், ஆளைப் பார்த்துத் தானே ரூலைப் போடுவார்கள்.

அவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

எது செய்யினும் இருளையே முதலில் நோக்குவார்....

சற்றே நிதானித்து சிந்தித்துப் பார்த்தோமானால் பெரும்பாலும் திமுக அரசில் தான் தமிழ் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கும்.

பக்தியில் எங்கே தமிழ் என உங்களின் குரல் எங்களுக்கும் கேட்கிறது. கவலையற்க, இன்றில்லாவிடினும், நாளை இதனையும் நம்மால் செய்ய இயலும்.

நம் தமிழ் மீண்டும் அரியணை ஏறும்.

ஏற்றும் பொறுப்பும் தங்களுக்கே.

எல்லோரும் அறிந்த எளிதான ஒன்று.

தமிழ்ப் படங்களுக்குத் தமிழில் பெயரிட வேண்டுமென்று சலுகை அளித்தவுடன் தான், திரைப்படப் பெயர்களிலாவது தமிழ் இன்று.

இனத்தைக் காக்கப் புறப்பட்டுள்ள திரைத் தோழர்கள், இதிலும் சற்றே கவனம் செலுத்த வேண்டும்.

மொழி அழிக்கப் பட்டால், பின்னர் இனம் இருக்காது.

அந்த மொழியைக் காக்க முன் நிற்பது எம் திமுக.

எந்தக் கட்சியினராவது மறுக்க இயலுமா...

தமிழுக்கென்று ஒரு தனி அமைச்சகம் உருவாக்கிய பெருமையும் எம் திமுகவைத் தானே சாரும்.

ஃபீனிக்ஸ் எம் திமுக - 4 : தேர்தல் 2009, தொடரில் நான்காம் பகுதியில் தமிழைத் தொடுவதின் நோக்கம், தாங்கள் தங்கள் வாக்கை தமிழ் / தமிழருக்கென அளித்தீர்களெனில், இந்த நோக்கிலும் சிந்தித்துப் பாருங்கள் என வேண்டிக் கொள்ளவே.

திமுகவின் தமிழ்ச் சாதனைகளை முழுமையாக தர வேண்டுமெனில் அது பல முனைவர் பட்ட ஆய்வு வேலை.

தங்களினின் சிந்தனை அலைகளை தொட்டு எழுப்புவது மட்டுமே இப் பதிவின் நோக்கம்.

திமுக ,கலைஞர் என்றால் சிலர் ஏன் தன் பார்வையை மாற்றி விடுகின்றார் என்பது புரியாத புதிர்.

எம் தமிழ் மக்களே, இந்தப் புரியாதவருக்கும் விளக்கும் ஞானம் பெற்றவர் நீங்கள் என்பதை நாமறிவோம்.

விளக்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன்....

.கவி.

4 comments:

Anonymous said...

you are a very big fool.
dont you realize the same dmk is supporting the congress partys bloodpath

.கவி. said...

வருகைக்கு “அடையாளமற்றவரே (Anonymous)" ஃபீனிக்ஸ் எம் திமுக - 5 : தேர்தல் 2009 தங்களுக்கான விழிப்புணர்வுக் குறிப்பு.

அன்புடன்
.கவி.

Anonymous said...

கருணாநிதி செத்தா.....பீனிக்ஸ் அல்ல..திமுக பீதான்....கருணாநிதி கட்சியின் தலைவர் யாரு?
ராசாத்தி மகளா? தயாளு மூத்த மகனா?இல்லை தயாளு இளைய மகனா?இல்லை ஆ.ராசாவா(இது யாரு)?

.கவி. said...

”அடையாளமற்ற வீரரே”, அடையாளமில்லா உங்களுக்கேன் வீண் கவலை.

திமுகவின் அடுத்த நிலைக்குப் பலர் தயார், நிச்சயம் அதில் ஒருவராக நீங்கள் இருக்க இயலா, அடையாளத்தை முதலில் அறிவியுங்கள் அடையாளமற்ற நண்பரே....

.கவி.

Post a Comment