புது வழி கண்ட அயலகத் தமிழர்களே...
அன்பு கூர்ந்து சிந்தியுங்கள், ஒற்றுமையை நீங்கள் வளர்க்க வேண்டும், அயலகத் தமிழரிடமாவது மட்டும்.
தமிழகத் தமிழரிடம் இருக்கும் பிரிவினை, அயலகத் தமிழரிடமும், குறிப்பாக அமெரிக்கத் தமிழரிடம் மிகுந்து காணப் படுவது இனத்தின் அழிவிற்கே வழி வகுக்கும் :(
நீங்கள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத அயலகத்தில் இருந்து கொண்டு இந்திய அரசின் கொள்கைகளை எதிர்க்கின்றீர்கள்/விமர்சிக்கின்றீர். உங்கள் வாழ்க்கைக்கு வளமும், உரிமையும் நீங்கள் வாழும் நாட்டில் உங்கள் அரசால் பாதுகாக்கப் படுகின்றது என்பதை மறவாதீர்கள்.
எங்கள் தமிழர்கள் / தமிழகத் தமிழர்கள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு , செல்வம் குறைந்த நிலையிலும் இந்திய அரசின் கொள்கைகளை எதிர்த்துப் போராடுகின்றனர். ஒரு முறை சிறை சென்றாலே சீரழிந்துவிடும் நிலையில் தான் எங்கள் தமிழ் சமுதாயம் இன்றும் உள்ளது... சிறை சென்றவரின் வரலாற்றை நோக்குங்கள்... இனத்திற்காக சிறை சென்றவர்களை, தமிழகதிலும் சரி, அமெரிக்காவிலும் சரி நீங்கள் கண்டுகொள்ளவில்லையே ஏன்? சிறை சென்று வழக்கைச் சந்திப்பவரின் நிலை என்ன சிந்தித்தீரா. அவரின் ஆதரவிற்கு இயக்கம் உண்டா?...
தமிழகத் தலைவர்களையோ/ தமிழகத் தமிழர்களையோ பழிக்கும் நோக்கைப் புது வழி/ உரிமை கண்ட அயலகத் தமிழர் நிறுத்த/ மாற்ற மறுப்பது, இன ஒற்றுமைக்கு எந்த வழியிலும் உகந்ததல்ல.
வருத்தத்துடன்
.கவி.
”தமிழர்களிடம் ஒற்றுமை இல்லையே...இந்தியத் தமிழர்களாக இருக்கட்டும், ஈழத் தமிழர்களாக இருக்கட்டு்ம், உலகத் தமிழர்களாக இருக்கட்டும், நம்மிடையே ஒற்றுமை இல்லாததே ஈழப் பிரச்சினைக்கு முடிவு ஏற்படாமல் போனதற்கு முக்கிய காரணம்”
Sunday, May 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment