Tuesday, May 5, 2009

ஃபீனிக்ஸ் எம் திமுக : தேர்தல் 2009

தேர்தல் 2009: பலமுறை உயிர்த்தெழுந்த ஃபீனிக்ஸ் எம் திமுக

தமிழரைக் காக்கின்றேன்,தமிழரைக் காக்கின்றேன் என்று சில பதிவர்கள் தமிழரை அழிப்பதை முதலாய்க் கொண்ட வேடிக்கைப் பதிவுகளை படித்திருப்பீர்கள் தானே?

ஒரு பார்வையில் பார்த்தால், இவர்கள் தமிழகக் கருணாக்கள். எம் தமிழரை எம் தமிழ் மண்ணில் அழிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு போராடும் இந்தியச் சிங்களவர் என்றால் அது மிகையாகுமா?

1+__=0, என்றால் பூர்த்தி செய்வதற்கு முதிர்ந்த அரசியல் ஞானம் தேவையில்லயே :)

துக்ளக், நமது எம்.ஜி.ஆர். வரிசையில் இப்பதிவர்களுக்கு நிச்சயம் இடம் உண்டு.


நேற்று வரை நாங்கள் தீவிர தி.மு.க ஆதரவாளர் என்று அடிக்குறிப்பு வேறு. இன்று திடீரென்று எப்படி ஞானம் பெற்றனர் என்பதும் அவருக்கே வெளிச்சம்.

அன்னை இந்திராவின் நெருக்கடி நிலை நீக்கி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 13 வனவாசத்தைக் கடந்து, புலிகள் ஆதரவு என்று முத்திரை குத்தி, ஆட்சியைக் கலைத்து , ஜெயின் கமிஷன் இடர் களைந்து.., எனப் பல தடைகளைத் தாண்டி வளர்ந்த இயக்கம் தி.மு.க.

வசைபாடும் பதிவர்களின் முறையற்ற வசவுகள், நடுநிலையாளர் பலரை நிச்சயம் சிந்திக்க வைக்கும்.

மன்னிக்க வேண்டுகிறேன் பதிவர்களே.


தாங்கள் பகல் கனவு காண்கின்றீர்கள்.

தமிழகத்தில் தி.,மு.க. நிலைக்கும்.

எத்தனையோ முறை மீண்டும் உயிர் பெற்ற ஃபீனிக்ஸ் தி.மு.க.

.உங்கள் ஆர்வப் படியே உம்மவர் ஆட்சி உங்களுக்கு வேண்டுமெனில் அது உங்கள் விருப்பம்.


அன்பு கூர்ந்து தமிழரைக் காக்க தமிழன் அழிய வேண்டும் என்று தம்பட்டம் அடிக்காதீர்கள். அது முறையல்ல.

உம்மவர் யார் என்பதைத் தெளிவுபடுத்தும் பொறுப்பையும் உங்களுக்கே அளிக்கின்றேன் :)

உங்களின் நியாயமான தமிழின ஆதரவு முழக்கங்கள் எமக்கும் ஏற்றதே.

ஆனால் திமுகவை அழிக்கத் துடிப்பது ஏன் என்பது...............

எம்முறை இழந்தாலும் மீண்டும் உயிர் பெறும் எம் தமிழர் ஆட்சி.

மீண்டும் கூறுகிறேன்.... பலமுறை உயிர்த்தெழுந்த ஃபீனிக்ஸ் எம் திமுக, இம்முறையும் உயிர்த்தெழும்.



.கவி.

7 comments:

Unknown said...

அய்யோ பாவம் தி மு க தோழர்

.kavi. said...

வருகைக்கு நன்றி எவரோ ஒருவரே.

யார் பாவப்பட்டவர்கள் என்பதை அறிந்தும் அறியாதது போல் இருப்பதேனோ?

.கவி.

Anonymous said...

Nobody need to destroy DMK, MK's family is enough to do that!

.கவி. said...

நண்பரே “அடையாளமற்றவர்”் கருத்துக்கு என்ன மறுப்பு சொல்ல, அன்பு கூர்ந்து அடையாளத்துடன் கருத்துக்களை அளியுங்களேன்.

.கவி.

அபி அப்பா said...

கவி இது ஒரு நச் பதிவு! சூப்பர்!

Anonymous said...

Step back a sec and read/listen what most others saying...They are not saying DMK need to be destroyed, they want DMK to be defeated in this election. It is to make DMK learn the lesson that the organization can't fond with Congress and stab on Elam tamils and deceive TN tamils on Elem issue...PERIOD!. There is two things...
1) Congress need to be destroyed or degraded to level like BJP in TN.
2) DMK need to be taught a lesson for melding with Congress and ignoring people's expectation on Elem issue.

If i'm not mistaken, above is the most common voice in opposing DMK.

.கவி. said...

வருகைக்கு நன்றி அபி அப்பா...

அன்புள்ள அடையாளமற்றவரே. தங்களின் வினாக்களுக்கு விடை இரண்டாம் பகுதியில்

.கவி.

Post a Comment