Wednesday, May 6, 2009

ஃபீனிக்ஸ் எம் திமுக - 2 : தேர்தல் 2009

ஃபீனிக்ஸ் எம் திமுக - 2 : தேர்தல் 2009

“அடையாளமற்றவர் (Anonymous)" என்ற போர்வையில் நண்பர் எழுதுகிறார் பாடம் புகட்ட வேண்டும் என்று... ஃபீனிக்ஸ் எம் திமுக - 1 : தேர்தல் 2009 பின்னூட்டலில். அந்த நண்பர் யார் என அறியோம். இருப்பினும் அவரின் சில வினாக்களுக்கு விடையளிக்கவே வேண்டும், எனவே இத் தொடர். தொடரும் இத் தொடர் தமிழ் உணர்வாளர் உணரும் வரை.......


அடையாளமற்றவர் (Anonymous) கருத்து 1: ”they want DMK to be defeated in this election”.

யார் இந்த அவர்கள்?

நசுக்கப் பட்ட தமிழரா?

அல்லது தமிழ் மண்ணில் நசுக்கப்பட்ட தமிழ் உணர்வுகளை படிப்படியாக போராடி மீண்டும் எழுச்சி உண்டாக்கிய ஒரு சிலரில் ஒருவரா.

அவரில் நீங்கள் ஒருவர் எனில், உங்களுக்கு உரிமை உண்டு, உங்களை அடையாளப் படுத்திக் கொண்டு பின் கேள்விகளை எழுப்புங்கள்.

அந்த சிலரில் நீங்கள் ஒருவர் இல்லையெனில், தங்களின் நிலையை விளக்குவீரா?

திமுக/தமிழர் வெற்றி பெற தெருத் தெருவாகப் போராடினீர்களா?

அந்தச் சிலரில் நீங்கள் ஒருவரெனில், உங்களுக்கு விளக்கம் அளிக்க நாங்கள் தயார்...

நிறமறிந்து நிறம் மாறும் பச்சோந்திக் கூட்டத்தில் நீங்கள் ஒருவரெனில், பச்சோந்திகள் அறியார் தமிழர் பண்பாடு என்ன வென்று. பயன்பாடு ஒன்றே அறிந்த பச்சோந்திகளுக்கும் விளக்கம் அளிக்க முடியும் தேவையெனில்.....

அடையாளமற்றவர் (Anonymuos) கருத்து 2: ”ignoring people's expectation on Elem issue.”

எந்த மக்களின் உணர்வைத் திமுக மதிக்கவில்லை?

எண்பத்தைந்து வயது முதியவர், முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைக்குப் பிறகும், தன்னை வருத்திக் கொள்கிறார்.

அதற்கு இந்தச் சிலர் நாடகம் என நகைக்கின்றனர். உம்மை வளர்த்த உம் பெற்றோரிடம் இப்படித்தான் நடந்துகொள்வீரோ?

நீங்கள் மக்களல்ல, மாக்கள், முதலில் நீங்கள் மனிதாபிமானத்தை அறிந்து கொள்ளுங்கள்.....

ஈழத்திற்காக ஆட்சியையே இழந்த ஒரே தமிழகக் கட்சி தி.மு.க.!!!!!!

ஆட்சியைக் கலைக்கக் கையொப்பமிட்ட மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் சுயசரிதையைப் படியுங்கள் சான்று வேண்டுமெனில்...


அடையாளமற்றவர் (Anonymus) கருத்து 3: “deceive TN tamils on Elem issue”

ஏமாற்றுவது யார்?

நீங்களா? அல்லது தமிழ் உணர்வாளர்களா?

தேர்தலுக்காக ஈழ ஆதரவுப் போர்வை. எம்மைப் பொருத்தவரை எவர் ஈழத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் நாங்கள் வரவேற்போம். அது பா.ஜ.க வானாலும், காங்கிரசானாலும்.

அவரவர் அரசியல் பிழைப்புக்கு தேவையாகலாம் திடீர் ஈழ ஆதரவும் எதிர்ப்பும். திமுகவிற்கு அல்ல.

தங்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு திமுகவைப் பழிக்க வேண்டும் எனில் பழித்து விட்டுப் போங்கள்...

தமிழ் உணர்வாளர் என்ற வேடம் ஏன்?...

அன்புடன்
.கவி.

4 comments:

அப்பாவி தமிழன் said...

ஒட்டு போட்டாச்சு பணம் சம்பாதிக்கறது பற்றி ஒரு பதிவு போட்டு இருக்கேன் வந்து பாருங்க http://technotamil.blogspot.com/2009/05/blog-post_06.html

.கவி. Va.Mu.Se. KaviArasan said...

அப்பாவித் தமிழரே.

ஓட்டுப் போட்டுவிட்டீரெனில், நீங்கள் தமிழக வாசியாக இருக்க வாய்ப்பில்லை :)

தங்கள் பதிவையும் படித்தேன். உங்களுக்காக விளம்பரத்தையும் சுட்டினேன். என்னால் இயன்றது தங்களின் வருகைக்காக :)

.கவி.

sam said...

first you know one thing dmk goverment dissolve for ltte problem not for tamil elam people.ok i think you are a bleddy bleddy fucker.

Anonymous said...

I think Mr. Karunanidhi is not clearly explaining the boundaries under which he can work as a CM. It is unfortunate that he chose to use his powers in getting the plum ministries in the central government and this has become the eye-sore as he is not able to wield the same powers now.
--Anamika

Post a Comment