”சேதுவை மீட்ட சுந்தர சோழர்”
1861 ஆண்டே சிந்திக்கப் பட்ட சேதுக் கடல் வழித் திட்டம், 145 ஆண்டுகளுக்குப் பின் தலைவர் கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியால் 2005 ஆண்டு செயல் உருவம் பெற்று, களப் பணிகள் தொடங்கப் பெற்றன.
ஆதம் பாலம், ராம் சேது என்று பலவாறாகக் குறிப்பிடப் பட்ட இந்தப் பகுதியில் உருவாக்கப் படும் சேதுக் கால்வாய் திட்டம், கப்பல்கள் இலங்கையைச் சுற்றி வராமல் தூத்துக்குடி துறைமுகத்தை அடைய வழி செய்கின்றது.
இந்தியாவின் கிழக்கு-மேற்குத் துறைமுகங்களுக்கான பயண நேரத்தையும் குறைக்கின்றது.
சேதுக் கால்வாய் தென் பகுதி மக்களுக்கு மிகப் பெரிய வரப் பிரசாதமாகக் கருதப் படுகின்றனது.
தெற்கைத் தேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள கலைஞர் தனிக் கவனத்தால் மத்திய அரசின் வழி இந்தத் திட்டம் செயல் படத் தொடங்கியது.
பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே, சில மதவாத சக்திகளினால், மதத்தின் பேரால் பெரும் தடைகள் உருவாயின.
எதிர்க் கட்சியான அதிமுக சேதுக் கடல் வழி மீண்டும் நிறுத்தப் படும் என்று கூறி தென் மக்களின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போட முயன்றார்.
அண்ணன் வைகோ பிரச்சாரத்தில் சேது இடம் பெற்றதாகவும் தெரியவில்லை.
பாசக வேட்பாளராகப் இராமநாதபுரத்தில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் வென்றால் திட்டம் படுத்து விடும்.
இந்திய அளவில் பாசக பெரும்பான்மை பெற்றாலும், பாசக தனது மதவாத ஓட்டு வங்கிக்காக பலி கொடுக்கப் படும் முதல் திட்டம் சேதுவாகத் தான் இருந்திருக்கும்.
இப்படிப் பல வகையில் மிரட்டப் பட்டது தென் மக்களின் உயிர் நாடியான சேதுக் கடல்வழித் திட்டம்..
தென் தமிழகத்தில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற வைத்ததின் மூலம், இது எங்கள் உயிர்நாடி என்று எதிர்ப்பாளர்களுக்கு உணர்த்தினர் எங்கள் தென் தமிழக மக்கள் என்றால் அது மிகையல்ல.
இந்திய அளவிலும் பாசகவைப் பின் தள்ளி, சேது வழியை ஆதரித்த காங்கிரசை தேர்ந்தெடுத்ததன் மூலம் மதத்தின் பேரில் வளர்ச்சித் திட்டங்களை முடக்க நினைப்பவர்களை முட்டாளாக்கினர் எம் மக்கள் என்றால் அது மிகையா?
அன்புடன்
.கவி.
4 comments:
you are a bleddy fucker.
ellaam sari,pothu Makkalukku paakka TV,
thann makkalukku katta channel?
Alagiri ippa muuththa amaichar? Kanimozhi,
thayanidhi amaichar?
sththaa kavithai, udanpirappukku malaiyena nandri kuvippaar, thann pirappukku koodigalai
kuvippaar.
அடயாளமற்றவர்(1). அதிலும் தரமற்றவர்.
மிகத் தரமற்ற, அடையாளமற்றவர். ஒன்று நீங்கள் ஏறி வந்த ஏணியை உதவும் பண்பற்ற குழுவாக, இல்லை வெற்றி ஒன்றே நோக்கமாகக் கொண்டும் வெற்றி நோக்கும் வெற்றியர் குழுவா?
தரமற்ற உங்கள் பின்னூட்டை, விலக்கு முன் நண்பர்கள் பார்வைக்கு.
எம் எதிர்க்கட்சி எனில் உமது நிலை / வருத்தம் ஏற்கக் கூடியதே.
மற்ற குழுவில் ஒருவர் எனில், கலைஞர் உங்களுக்கும் சேர்த்தே தான் “மறப்போம் மன்னிப்போம்” என்றார்.
அன்புடன்
.கவி.
வருகைக்கு நன்றி திரு. ஹாரிஸ்பென்.
வாரிசு அரசியல் இந்திய அரசியல் பிரச்சினை. இது திமுகவிலும் உள்ளது, மறுக்கவில்லை.
வாரிசு அரசியலுக்கும், சேது வழிக்கும் என்ன சம்பந்தம். ஏன் இந்தப் பதிவில் என்பது புரியவில்லை.
நலத் திட்டங்கள் யார் கொண்டு வந்தாலும் நமது நாட்டிற்குத் தானே நன்மை.
ஹாரிஸ்பர்கிலும் இருகின்றீர்கள், அமெரிக்க அரசியல் அறிந்திருப்பீர்கள், நியாயப் படுத்தவில்லை, தகுதி தான் முக்கியமே தவிர , வாரிசா இல்லையா என்பதல்ல,
ஜார்ஜ் புஷ் => அமெரிக்க அதிபர் (1988-1992)
ஜார்ஜ் டயில்யூ புஷ் => அமெரிக்க அதிபர் (2000-2008)
ஜெப் புஷ் => புளோரிடா கவர்னர்
தங்கள் சிந்தனைக்கு.
அன்புடன்
.கவி.
Post a Comment