Thursday, May 7, 2009

ஃபீனிக்ஸ் எம் திமுக - 3 : தேர்தல் 2009

ஃபீனிக்ஸ் எம் திமுக - 3 : தேர்தல் 2009

கருமேகங்கள் சூழ்ந்ததினால், காரிருள் கண்டதனால், காணாமல் போயிற்று உதயசூரியன் எனக் ’கதை’த்தன சில கறுப்பாடுகள்.

தமிழின உணர்வாளர்கள், அறிவார்ந்த எம் தமிழ் மக்கள் அறிவர், உதய சூரியன் என்றும் மறைவதில்லை என்ற பேருண்மையை.


திமுக என்ற பேரியக்கம் தமிழ் / தமிழர் போராட்டங்களில் என்றும் முதலிடத்தில் இருந்தது, இருக்கின்றது, இனிமேலும் இருக்கும் என்பதை உணர்வாளர்கள் அறிவர்..

ஃபீனிக்ஸ் எம் திமுக இரண்டாம் பகுதியில் பின்னூட்டல் அளித்த நண்பர் சாம் எம்மைத் தகாத வார்த்தைகளில் வைதாலும், அவரின் கருத்துக்கள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை.


கலைஞரின் அரசு கலைக்கப் பட்டது விடுதலைப் புலிகளின் சிக்கலினால் தான், ஈழ மக்களுக்காக அல்ல என்பது அவர் வாதம்.


தமிழ் உணர்வாளர்கள் கவனிக்க வேண்டும். நீங்கள் எந்தப் பக்கம் இது தான் உங்கள் நிலைப் பாடா?


எப்படி எல்லாம் திரித்து எழுத/ பேசப் படுகின்றது என்பதை அறிவுள்ள எம் தமிழ் மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்கே இத் தொடர்..


மற்றொரு பின்னூட்டு எழுதிய தோழர் அனாமிகா, கலைஞர், முதல்வராகப் பணிபுரிவதன் எல்லைகளை விளக்கவில்லை எனக் குற்றம் சாட்டுகிறார்.


தமிழகம் இந்திய அரசிற்கு உட்பட்ட ஒரு மாநிலப் பகுதி. பாண்டிச்சேரி முதல்வர், தமிழக முதல்வர், என எல்லா முதல்வர்களுக்கும் இந்திய அரசியல் சட்டப் படி எல்லைகள் நிர்ணயிக்கப் பட்டுள்ளன.அந்த விதிகளின் படி கலைஞர் பணியாற்றி வருகின்றார். தமிழ் இனத்திற்காக விதி முறைகளுக்கு உட்பட்டுப் போராடி வருகிறார். இன்று, நேற்றல்ல, பல ஆண்டுகளாக.

எல்லைகளை மீற வேண்டும் என்பது தான் அனாமிகாவின் கருத்தென்றால், திமுக பல ஆண்டுகளாகக் கோரி வரும் “மாநில சுயாட்சி”க்கல்லவா நாம் போராட வேண்டும்.

தும்பை விட்டு வாலைப் பிடிப்பதில் என்ன பயன்?

பல சமயங்களில் இனத்திற்காக, கலைஞர் முதல்வர் பதவியிலிருந்தும், மரபுகளை மீறியதும், அது பெரும் சிக்கலாக வெடித்ததும், பலர் அறிந்த உண்மை. உண்மை அறியா நண்பர்கள் விளக்கம் கேட்பீர்களானால், பின் வரும் தொடர்களில் அளிக்கவும் நாம் தயார்.

தோழர் அனாமிகாவின் இரண்டாம் குற்றச்சாட்டு, பதவிகளை அடைய மட்டுமே என. பதவிகளைப் பெற்றதனால் பலன் என்ன என்று கேட்கின்றாரா? பலன் பட்டியலிட வேண்டுமெனில் அதையும் செய்வோம்.

அரசியல் கட்சி என்பதன் நோக்கம் அரசாளுவது தானே... அரசில் பங்கு பெறாமல் ஏன் அரசியல் கட்சி. அனாமிகா விளக்கினால் நலம்.

ஈழத்திற்காக கலைஞர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காமாலைக் கண்ணோடே நோக்கினால், பின் தெளிவு கிடைக்க வழியேயில்லையே...

கலைஞரையும் , திமுகவையும் விமர்சனம் செய்யும் முழு உரிமை உங்களுக்கு உண்டு.


கலைஞரை எடை போடும் அதே தராசால், மற்றவரையும் எடை போடுங்களேன். பின் நீங்களே அறிவீர்களே, உண்மை எதுவென்று.

”ஆளை சொல்லு ரூலை (Rule) சொல்றேன்” என்றால் எப்படி தோழர்களே...


சிந்திப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்......

.கவி.

4 comments:

sam said...

i think i already told you you are a son of pitch.

.கவி. Va.Mu.Se. KaviArasan said...

நண்பர் சாம், தங்களுக்காக ஒரு இடுகை இட்டுள்ளேன். தங்களின் தொடர்பு முகவரி என்னவோ?

விளக்கம் அறிய விரும்பினீர்களில் எனில் விளக்கம் அளிக்கலாம்

விதண்டாவாதன் தான் பேசுவீர்கள் எனில் நான் என்ன செய்ய...

மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி.

அன்புடன்
.கவி.

Anonymous said...

I perhaps did not make my point clear.

It was not my argument that Mr.Karunanidhi should work beyond the limitations of being a CM. I only meant that he has not explained that well. I do not think working beyond the limitations will achieve any thing.
It is true that every one is in politics only for power and there is nothing wrong in that. You may agree with me that one would think that, if he can use the powers to get plum ministries, why not use the same powers to end the Genocide in Srilanka. This can only be countered by explaining the limitations of what he can do.
This will be my argument even if Ms.Jayalalitha was in power.
--Anamika

.கவி. Va.Mu.Se. KaviArasan said...

மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி தோழர் அனாமிகா.

ஃபீனிக்ஸ் எம் திமுக - 4 ம் பகுதியில் அலசுவோம், தங்கள் கருத்துக்களை.

அன்புடன்
.கவி.

Post a Comment