Sunday, May 17, 2009

ஃபீனிக்ஸ் நம் திமுக - 17 : தேர்தல் 2009 : அலசல்

ஃபீனிக்ஸ் நம் திமுக - 17 : தேர்தல் 2009 : அலசல் - 2

இருபத்தி இரண்டு தொகுதிகளில் களத்தில் இறங்கிய உதயசூரியனுக்கு 18 (1)இடங்களில் வெற்றிப் பரிசை அளித்தனர் தமிழக மக்கள்.

முதல் முறையாகப் தேர்தல் களத்தில் போட்டியிட்ட தென் மண்டல அமைப்புச் செயலர், மு.க. அழகிரி, தி,மு.க. கூட்டணியிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஏறத்தாழ 1 இலட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக மதுரைத் தொகுதியை திமுக வசமும் கொண்டு வந்துள்ளார்.

சென்ற சட்டப் பேரவைத் தேர்தலிலும் தென் மண்டலத்தில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றதும் அன்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

திமுகவின் தென்மண்டலச் செயலர் என்ற பொறுப்புடன் 10 தொகுதிகளில் ஒன்பதில் திமுக அணி வென்றுள்ளது. (2)


ஈழ மக்கள் விடிவுக்காக மத்திய அரசிடம் தொடர்ந்து போராடி வரும் கலைஞர், ஈழ மக்கள் விடிவிற்காக மத்திய அரசில் பங்கேற்க மாட்டோம் என்று முடிவு எடுக்கும் வாய்ப்புக்கள் உள்ள நிலை.

திமுகவின் அடுத்த தலைமுறை நம்பிக்கை நட்சத்திரத் தலைவர்களில் ஒருவராக செயலர் மு.க. அழகிரி தன் நிலையை மீண்டும் தக்க வைத்துக் கொண்டு விட்டார் என்றால் அது மிகையல்ல.

ஈழத்திற்காக உறுதிமொழிகள் பெற்று, தங்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் நலனுக்காக, திமுக மத்திய அரசில் பங்கு பெறும் எனில், அழகிரி அவர்களே முதல் மத்திய அமைச்சர் பதவிக்கான தேர்வாக அமைவார் என்று கூறுதல் மிகையா?

அன்புடன்
.கவி.
அடிக்குறிப்பு:

1. முசுலீம் லீக் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றது

மக்களவை - உதயசூரியனின் வெற்றி/ போட்டி

I - 1952
II - 1957
III - 1962 => 7 (18)
IV - 1967 => 25 (25)
V - 1971 => 23 (24)
VI - 1977 => 2 (19)
VII - 1980 => 16 (16)
VIII - 1984 => 2 (27)
IX - 1989 => - (31)
X - 1991 => - (21)
XI - 1996 => 17 (17)
XII - 1998 => 6 (18)
XIII - 1999 => 12 (19)
XIV - 2004 => 16 (16)
XV - 2009 => 18 (22)

4 comments:

Anonymous said...

panjapparathesi karunanithi oliga
saniyanda familiye oliga
saathan pinamthini saniyan pudcha raajapaksa koondoda oliga.
saniyanda familiye oliga
koodave soniya moothevi oliga
moththathil srilankan appavithamizhanda vaazhkayai naasamaakina ellorum oliga...........!!!!!!!!!!

.கவி. said...

”அடையாளமற்றவர்” என்ற அடையாளத்துடன் அலையும் சிங்கள் வெறிக் கூட்டமே,

”அடையாளமற்றவர்” அடையாளத்துடன் வீரம் பேசுவபவர் எங்கள் வீரத் தமிழ்ப் பரம்பரையாக இருக்க வாய்ப்பில்லை.

நீங்கள் வேற்றுத் தகப்பன் வித்தே.

உம் தாயிடம் , சென்று உம் அடையாளத்தை அறியுங்கள்.

பின் தமிழன் என்ற அடையாளத்துடன் ‘கதை’யுங்களேன்.

எம் தமிழர் உம் சிங்கள வேடத்தைத்தான் கலைத்து விட்டார்களே.

இனியும் உமக்கு எதற்கு இந்த வேடம்.

எம் ஈழத் தமிழரையும் நாங்கள் காப்போம்.

ஓடிப் போய்விடு வெறியா வேற்றிடத்திற்கு.

எங்கள் தமிழரிடம் இனி உம் பிரித்தாளும் சூழ்ச்சி பலிக்காது.

.கவி.

Anonymous said...

me too came as anonymous. bcos wht happend 2 bharathi raja ? why u take his mother? it wont make proud ur party

.கவி. said...

அடையாளமற்றவரே, வன்முறை என்றால் சட்டப் படி நடவடிக்கை எடுக்கலாமே. அரசியல் காழ்ப்புணர்ச்சி வன்முறை தவறு என்பது திமுகவின் தொண்டர்களுக்குத் தரப் படும் பால பாடம்.

தன்னைப் பாதுகாக்க அல்லாமல், மற்ற வன்முறை கண்டிக்கப் பட வேண்டியவை.

ஒரிருவர் செய்யும் தவறுக்கு ஏன் திமுகவை ஒட்டு மொத்தமாகப் பழிக்கின்றீர்.

சட்டப் படி நிச்சயம் அவர் தண்டிக்கப் படுவார்.

கவலையற்க.

.கவி.

Post a Comment