ஈழம் -> நாளை.
தன் மக்களைக் காக்கத் தவறும் எந்த நாடும், பிரிவினை-விடுதலைப் போராட்டத்தை எதிர் கொண்டே ஆக வேண்டும், இது இயற்கை நியதி.
மனித நேயத்தைக் கொன்ற எந்த அரசும் நிலைத்ததாக வரலாறும் இல்லை.
தோல்விகளால் துவளாதே தோழா.
நாளைய நாள் நிச்சயம் நம் நாளே.
விடுதலைப் போராட்டங்கள் உடன் வெற்றி பெறுவதுமில்லை, அதன் நிழல் என்றும் அழிவதுமில்லை.
மனதைத் தளரவிடாதீர்கள் தோழர்களே.
நம் விவேகமே இனி நம்மைக் காக்கும்.
நியூட்டனின் இரண்டாம் தத்துவத்தின் படி, அது மாற்று வடிவத்தில் இயங்கிக் கொண்டே இருக்கும். தேவைப் படும் காலத்தில் மீண்டும் உருப் பெறும், தேவைப் படின் வேறு வடிவில், இது தான் விடுதலைத் தத்துவம்.
போராட்டத்தில் பாதிக்கப் பட்ட நம் மக்களைக் காப்போம் தோழர்களே.
இருப்பவர்களைக் காக்க வேண்டும் தோழர்களே.
கனன்று கொண்டிருக்கும் எரிமலை பெருமழையால் தணிந்திருக்கலாம்.
எரிமலையில் தகிக்கும் அனல் தணிந்து விட்டது என்பது எதிரிகள் அறியாத பிதற்றல்.
காத்திருங்கள் நல்ல காலத்திற்கு.
பாலைவனம், சோலை வனம் ஆவது உங்கள் கையிலே.
பொறுத்திரு, கருத்துடனிரு, பின் விழித்தெழு தோழா
இறுதி வெற்றி நம் தமிழர்க்கே
.கவி.
Monday, May 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
எப்படிங்க?
காலிஞர் கவித எளுதி காப்பாத்த போராரா?
நீயி ஒரு அர லூசுய்யா
அனாமத்து, அவனை விடுங்கள்,கவி. இப்போதைக்கு நம்பிக்கை ஒன்றே துணை. மீண்டும் வருவான், அந்த மாவீரன்.
அன்புள்ள அடையாளமற்றவரே
வருகைக்கு நன்றி.
சகோதரர் சச்சரவை சமயோசிதமாகப் பயன்படுத்தப் பார்த்த குழுவில் ஒருவராகத் தான் நீர் நிச்சயம் இருப்பீர்.
எங்கள் தமிழர் இணைவது கண்டு நீங்கள் பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் சரி தான்.
.கவி.
மீண்டும் வருகை புரிந்தமைக்கு நன்றி கதிர் வீச்சு
கலைஞர் தமிழகத்தின் மிகப் பெரும் தூண்.
மாவீரர ஈழத்தின் ஆணிவேர்.
இந்த இரு கண்களில் எந்தக் கண்ணில் நீர் வடிந்தாலும் நமது மனம் சுறுங்கும்.
இரத்தம் வடிந்தால், இறைமை / இயற்கைக்கே அடுக்காது. இராமரும் / புத்தருமே மன்னிக்க மாட்டார்கள்.
.கவி.
Post a Comment