Saturday, May 9, 2009

ஃபீனிக்ஸ் எம் திமுக - 5 : தேர்தல் 2009

ஃபீனிக்ஸ் எம் திமுக - 5 : தேர்தல் 2009

தமிழர், பஞ்சாபியர், வங்காளிகள் என்று மூன்று இனங்கள் பெரிதும் பாதிக்கப் பட்ட இனங்களாயின. இருபதாம் நூற்றாண்டின் பின் பகுதியில் பிரிக்கப்பட்ட இந்த இனங்கள், ஒடுக்கப் பட்ட இடங்களில் போராட்டத்தில் குதித்தன.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் தென் தமிழர் கொண்ட ஈழப் பகுதிகள் இலங்கையின் ஒரு பகுதியாக இன்றைய தமிழ்நாட்டுப் பகுதிகள் இந்தியாவின் ஒரு பகுதியாகவும், பஞ்சாபியர் மேற்கு பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இந்தியாவின் ஒரு பகுதியாகவும், கிழக்கு வங்காளம் ஒன்றுபட்ட பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியாக மேற்கு வங்காளம் இந்தியாவின் ஒரு பகுதியாகவும் பிரிக்கப் பட்டன.


வரலாற்று நோக்கில் நண்பர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். பிரித்தாளும் சூழ்ச்சிக்கு முதலில் ஆட்படுத்தப் பட்டது தமிழினம்....

இந்தப் பிரிவினைகளால் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரிதும் பாதிக்கப் பட்ட கட்சி பேராயக் கட்சி மட்டுமே...

I. திசம்பர் 16, 1971, பேராயக் கட்சியின் உதவியுடன் வங்க தேசம் உருவானது.

1971லிருந்து இன்று வரை வங்கத்தில் கவனிக்கப் படவேண்டியவை இரண்டு

1. 1977 ல் வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் இன்று வரை, வங்கத்தில் ஆட்சி பீடத்தில்.

2. இந்தியாவின் ஒரு பகுதியாக இன்றும் மேற்கு வங்கம்.

குறிப்பிடக் காரணம், வங்காளியர் நன்றியுடன் பேராயக் கட்சிக்கு வாக்கும் அளிக்கவில்லை, வங்கம் என்று ஒரு நாடு உருவானாலும், மேற்கு வங்கம் தனி நாடு பெற்று இந்தியாவிலிருந்து பிரிந்து விடவும் இல்லை.

இன்றளவும் பேராயம் தவிர்த்த ஒரு மாற்றுக் கட்சியினால் தான் வங்கம் ஆளப் பெற்று வருகின்றது.

வங்கம் தனி நாடு பெற்றதனால், பேராயக் கட்சி பெற்ற ஆதாயம் என்ன?

II. பஞ்சாப் புரட்சி : காலிஸ்தான் என்ற தனிநாடு கேட்டு 1970ல் தொடங்கப் பட்ட புரட்சி, 1984 பேராயக் கட்சியின் தலைமை அமைச்சரை சுட்டுக் கொன்றதுடன், முடிவு பெற்றது. இன்று இந்தக் கொள்கை மக்கள் மனதில் இருந்தும் பெரும்பாலும் அழிக்கப் பட்டும் விட்டது.

மாநிலக் கட்சியான அகாலி தளம் இன்றும் பஞ்சாபில் ஆட்சியில் உள்ளது.

செருப்பு வீசிய நிகழ்வுகள் கூட தில்லிக் கலவரத்தை தண்டிக்க கோரியே தவிர, தனி நாடு கோரிக்கைகாக அல்ல.

இங்கும் பேராயக் கட்சி பெற்ற ஆதாயம் என்ன? இழப்பே மிஞ்சியது பேராயத்திற்கு.

III. தமிழர் புரட்சி :

இருபதாம் நூற்றாண்டில், இந்தியத் துணைக் கண்டத்தில் நடக்கும் மூன்றாவது பெரும் புரட்சி தமிழர் புரட்சி.

மற்ற இரண்டு புரட்சிகளுக்கும் மூத்ததாயினும், நம் தமிழர் புரட்சி முக்கியத்துவம் பெறவே நாம் பெரும் போராட்டங்கள் நடத்த வேண்டியிருந்தது.

இந்தப் புரட்சியிலும் பாதிக்கப் பட்டது பேராயக் கட்சி....

அன்றைய இந்திய இளைஞர்களின் கனவு நாயகன், நவீன இந்தியாவின் சிற்பி, நம் தமிழரால் தமிழ் மண்ணில் அழிக்கப் பட்டார்.

“அடையாளமற்ற (Anonymous) நண்பர்" ஃபீனிக்ஸ் எம் திமுக - 4 : தேர்தல் 2009 எழுதுகிறார் “you are a very big fool.dont you realize the same dmk is supporting the congress partys bloodpath”

“நீ ஒரு அடி முட்டாள், பேராயக் கட்சியின் இரத்த வெறிக்கு உடன் போகும்” என்று சுடுகின்றார் சொற்களால், “அடையாளமற்ற (Anonymous) நண்பர்".

இன்னா சொல் இட்டாலும் இன் முகத்தோடே ஏற்போம்...

அவருக்கும் , அவர் போல் இன்னா சொல் கூறித் திரியும் நண்பர்களுக்கு சிந்திக்க சில மணி நேரம் அளித்து, பின் ஆறாம் பகுதியில் அவர்களுக்கு விளக்க முயல்வோம்.

இந்தியத் துணைக் கண்டத்தில் நடந்த அனைத்துப் பிரிவினைப் புரட்சிகளிலும் பாதிக்கப்பட்ட கட்சி பேராயக் கட்சி மட்டுமே என்ற உட்கருத்தை நண்பர்கள் சிந்திக்க வேண்டும்.

சிந்திப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன், அடுத்த பகுதியில் தங்களுடன் உரையாடும் வரை

.கவி.

No comments:

Post a Comment