Monday, May 25, 2009

கிரந்தம் தவிர் - 1

கிரந்தம் தவிர் - 1

தமிழ் - தமிழர்- தமிழினம் எனப் பெரும் உரையாற்றும்/எழுதும் சில நண்பர்கள்/தோழர்கள்,
கிரந்தம் தவிர்க்க முயல்வோம் என்றமைக்காக பலமுறை நண்பர்களால் நிந்திக்கப் பட்டுள்ளேன்.

இருப்பினும் மாறுதல்கள் தேவையெனில், நிந்தனைகளை, சிந்தனையை விட்டகற்றாவிடின் சிந்தனை வெற்றி பெறாது...

குறிப்பாக ஈழத் தமிழரிடரும், சமயக் கருத்துக்களைக் கூற விழையும் நண்பர்களிடமும் கிரந்தப் பயன்பாடு மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது.

இது கிரந்தம் தவிர்க்க எண்ணும் நண்பர்களுக்காக சில சொற்கள் தமிழ் எழுத்துக்களில்:

ஸ்ரீ => திரு / அருள் (அருள் பெற்றவரை விளிக்கும் போது)

ஸ்ரீரங்கநாதர் => அருள்மிகு அரங்கநாதர்

ஸ்ரீமான் => அருள்மான்

ஸ்ரீமதி => அருள்மதி

ஸ்ரீசக்கரம் => அருள்சக்கரம்

ஸ்ரீலங்கா => சிறிலங்கா

ஸ்ரீகாந்த் => சிறிகாந்த்

ஸ்ரீதர் => சிறிதர்

அன்புடன்
.கவி.

6 comments:

Anonymous said...

even better is to make Sree part of the Tamil, Alphabet.

what prevents us from adding letters which are deficient in Tamil such as Sha, Ksha as part of Tamil Letters?

மாறுதல்கள் தேவை..

--Anamika

.கவி. said...

வருகைக்கு நன்றி அனாமிகா.

உலக மொழிகளில் உள்ள எல்லா எழுத்துக்களையும் உள்ளடக்கி ஒருங்குறி (Unicode). தமிழ் எழுத்துக்களில் இணைக்க வேண்டிய தேவை ஏன் என்பது தான். தமிழைத் தமிழ் எழுத்துகளில் எழுதுவது நல்ல செயல் தானே.

ஆங்கிலத்தில் உள்ள ‘z' க்கு தமிழில் என்ன எழுத்துரு.பிற மொழி எழுத்துக்களை எழுதுவதற்கு எழுத்துக்கள் தேடுவதை விட அச்சொல்லை தமிழ் எழுத்துக்களில் மாற்றுவதில் தவறில்லை தானே

ஒரு மொழி, அதன் எழுத்துருத் தனித்தன்மையை இழக்க வேண்டுமென்பது சரியான வாதமா?

அன்புடன்
.கவி.

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

.கவி. said...

வருகைக்கு நன்றி தமிழர்ஸ்.வணி நண்பர்களே.

தங்கள் பட்டறையையும் இணைத்து விடுகிறேன்.

அன்புடன்
.கவி.

தமிழ் said...

நன்றி தங்களின் இடுகைக்கு நண்பரே

.கவி. said...

வருகைக்கு நன்றி திகழ்மிளிர்.

கிரந்தம் தவிர்ப்பு ஒரு இயக்கமாக உருவாகும் நாள் வெகு விரைவில்.

அன்புடன்
.கவி.

Post a Comment