ஃபீனிக்ஸ் எம் திமுக - 10 : தேர்தல் 2009
தமிழன் என்று தன் இனத்தை அடையாளம் காட்டிய நம் திமுகவை இன்று தமிழின நண்பர்கள் எட்டப்பர்களாக மாறி இழித்துரைக்கின்றனர்.
அந்த நண்பருக்கே அவர் தமிழன் என்று அவர் இனத்தை அடையாளம் காட்டிய திமுகவிற்கு இன்று அக்னிப் பரிட்சை.
இவருக்கு உண்மையை விட உலகம் என்ன நினைக்குமோ என்ற கவலை.
எடுங்கள் உங்கள் தொலைபேசியை.
அழையுங்கள் உங்கள் நண்பர்களை.
சோர்ந்து விடாதீர்கள்.
தமிழின எதிரிகள் தமிழினம் காக்கும் போர்வையில் தமிழனை அழிக்கக் கங்கனம் கட்டி அலைகின்றனர்.
நம் ஒவ்வொரு தொலைபேசியும் நம் இனத்திற்கு ஒரு வாக்காக மாறவேண்டும்.
எழுபத்தைந்து வயதான தமிழன் பெருங்கவிக்கோ, ஓடோடி உழைக்கின்றார்.
ஏன்?
நம் இனம் தழைக்க.
ஏமாந்து விடாதீர்கள்.
நம் தமிழின முயற்சிகள் தொடர நம் திமுக அரசு நமக்குத் தேவை.
தமிழ், தமிழர், தமிழினம் என்றால் திமுக தான் முன்னனி என்ற அறிஞர் /உணர்வாளர்/நம் மக்கள் அறிவர்.
இருப்பினும், நமது திடீர் இன ஆதரவாளர்கள், தங்கள் மனதைக் கலைக்க முயன்றிருப்பார்கள். அது தானே அவரின் அரசியல் வேலை.
இணைத்துள்ள படங்கள் பல செய்திகள் கூறும். நம் திமுகவின், நம் தலைவர் கலைஞரின் சாதனை கூறும் வரலாற்றுச் சின்னங்கள்.
வள்ளுவர் கோட்டம்
கன்னியாகுமரியில் திருவள்ளுவர்
செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனம்
தமிழ் இணையப் பல்கலைக் கழகம்
.
தங்கள் நினைவலைகளை ஓட விடுங்கள்.
தமிழ், தமிழர், தமிழினம் என்றால் திமுக என்ற பேருண்மையை மறைக்க நினைக்கும் தமிழின நண்பர்கள், தன் மன உறுத்த திமுகவிற்கே வாக்களித்திருப்பர்.
அவர் தங்களை குழப்பியிருந்தால் எடுங்கள் தொலைபேசியை, “கதை”ப்பவரிடம் ”கதை”யுங்கள், நீங்கள் அறியாதவர் அல்ல அன்று.
உனக்கு உன் இனத்தை அடையாளம் காட்டியதே எம் திமுக தான் என்ற உண்மையைப் புரியும்படி சொல்லுங்கள்.
வாக்களிக்கும் வேளை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
நம் இனம் மேலும் மேலும் வளர, இன உணர்வு பெருக
வாக்களிப்பீர் நம் திமுகவிற்கே
அன்புடன்
.கவி.
Tuesday, May 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
இத்தாலி துணிகல் சலவையகம்!
மு.க& கம்பெனி
அன்னா(?) அரிவாலயம்
வருகைக்கு நன்றி பதி.
மற்ற நம் தமிழர் செய்த தமிழ் சாதனைகளைக் கூறுங்களேன்...
ஒன்றையாவது கூறுங்களேன் பதி.
நட்புடன்
.கவி.
தமிழ் இனத்தை பூண்டோடு அழித்து வரும் கொடூரன் ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டியவன்.
ராஜபக்சே எதிரி என்றல் அவனுக்கு ஆயுதமும் பயிற்சியும் ,கோடிகலும் வழங்கி மகிழ்த
காங்கிரஸ் துரோகி ..எனவே காங்கிரசை தோற்க்கடிக்க வேண்டியது மானமுள்ள தமிழனின்
தலையாய கடமை . இரா.இரவி .
யாருங்க அது பெருங்கவிக்கோ?
ஒங்க அப்பாரா? அப்பாரேதான்.
அப்பாரும் புள்ளையும் ஆள ஆளு மெச்சிக்குங்க.
காசு குடுத்து விழாவும் விருதும் எடுத்துக்குறதுல சூப்பரு
வருகைக்கு நன்றி அடையாளமற்றவரே.
தங்கள் பதிவுக்கும் நன்றி.
பெருங்கவிக்கோ குறித்து நீங்கள் அறிந்தவற்றை எழுதுங்கள்.
நன்றி கெட்ட தமிழனுக்கு ஏனப்பா உழைக்கிறீர்கள். ஓய்வெடுங்களேன் என்று கூறி நானும் ஓய்ந்து விட்டேன்.
உங்களைப் போன்ற சில நல்ல? நண்பர்களின் கருத்து அவரைச் சோர்வடையச் செய்யலாம்
வாழ்க உங்கள் தமிழ்த்? தொண்டு.
.கவி.
வருகைக்கு நன்றி திரு இரா. இரவி.
தேர்தல் 2009 முடிந்து விட்டது.
ஈழச்சிக்கலைப் பயன்படுத்தி ஓட்டு சேகரித்தவரின் வேடம் கலையும் நேரம் நெருங்கிவிட்டது குறித்து, ஒரு வகையில் மகிழ்ச்சியே.
அன்புடன்
.கவி.
//நன்றி கெட்ட தமிழனுக்கு ஏனப்பா உழைக்கிறீர்கள். ஓய்வெடுங்களேன் என்று கூறி நானும் ஓய்ந்து விட்டேன்.
//
உங்களுக்கும் உங்கள் தலைவனுக்கு பெரிய வித்தியாசம் இல்லை! ஓட்டு போட்டால் வாழ்த்துவார், ஓட்டு போடாவிட்டால் உங்களை மாதிரியா நன்றி கெட்ட தமிழன், முட்டாள் என்பார்.. நல்லா இருக்கு உங்க கூத்து!!! இரண்டையும் ஒருபோல எடுக்க பழகாதவன் தலைவனா??
யாருக்கு ஓட்டளிப்பது என்ற அறிவு உங்களைத்தவிர யாருக்குமே இல்லை என்று நீங்கள் நினைப்பதாகத்தான் உங்கள் கட்டுரை இருக்கிறது. திமுக அனுதாபிகளிடையே சுற்றுக்கு விடவேண்டிய இந்தக் கட்டுரையை "இலக்கிய வட்டத்தில்" நீங்கள் உலாவவிட்டதைத் தவிர்த்திருக்கலாம். நன்றி.
ஜான், வாசிங்டன் DC
வருகைக்கு நன்றி நா. ஜெயசங்கர்.
வாழ்த்துப் பதிவுகளை மட்டும் பதியச் செய்யும் வழி இருப்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.
இருப்பினும் வசையயும் பதிப்பிக்கக் காரணம் சில தமிழரின் நிலை/எண்ணங்களை உலகறியச் செய்யவே.
திருக்குறள் படித்திருப்பீர்கள் தானே.
“குணம் நாடிக் குற்றமும் நாடி”.
குற்றத்தை மட்டும் நாடும் சிறுமைத் தனம் நம் மண்ணில் மிகுந்து இருப்பது...
அன்புடன்
.கவி.
வருகைக்கு நன்றி திரு ஜான்.
இலக்கிய வட்டத்தில் இந்த மடலை உலாவ விட்டதற்கு, உங்கள் வாழ்த்தும் வசவும் குழுமத்தின் மட்டுநருக்கே :)
இலக்கிய வட்டத்தில் தமிழ் ஆரவமுள்ளவர் உள்ளனர்.
நீங்களாவது மற்ற நம் தமிழர் தலைவர் செய்த சாதனைகளை கூறுங்களேன். அறியும் ஆசை அவ்வளவே..
இலக்கிய வட்ட அன்பர்கள் தமிழாய்ந்தவர்கள், அவர் அறிந்திருக்கலாம் என்றே இம்மடலை உலவ விட்டேன்.
நட்புடன்
.கவி.
இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடு.
இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை மூடு.
இலங்கைக்கு வழங்கிய ஆயுதம் முழுவதையும் திரும்பப் பெறு.
இலங்கைக்கு வழங்கிய கோடி பணத்தை திருப்ப பெறு.
இலங்கை மீது பொருளாதார தடை விதி .
ஐநா மன்றத்தில் இருந்து இலங்கையை நீக்கு .
உலக குற்றவாளியாக ராஜபக்சேயை அறிவித்து உடன் கைது செய்ய வேண்டும் .
இரா .இரவி
puthiya arasu seiya vendiyathu
அன்புள்ள இரா.இரவி.
இன்று நேற்றல்ல தமிழ் நாட்டில் எனக்குத் தெரிந்தே முப்பது ஆண்டுகளாக இதே கோரிக்கைகளுடன் போராடி வருகிறோம்.
மீண்டும் மீண்டும் நாம் போராடுவோம்.
புதிய நண்பர்களும் எம் போராட்டத்தில் எங்களுடன் இணைவது எங்களுக்கு மகிழ்ச்சியே.
அன்புடன்
.கவி.
சான்றில்லாமல், தவறான தகவல்கள் தரும் பதிவில் எனக்கு நம்பிக்கை இல்லை.
இந்தப் பதிவை “இலக்கிய வட்டம்” ம்டற்குழுவிற்கும். அனுப்பியுள்ளேன். கீழேயுள்ள முன்னுரையோடு.
===============================================
கடந்த நாற்பதாண்டுகளாக,
எம்.ஜி.ஆர். உருவாக்கிய தமிழ்பல்கலைக் கழகம்,
அறிஞர் அண்ணா காலத்தில் முயற்சிகள் தொடங்கி கலைஞர் ஆட்சியில் உருவான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
மற்றும் பதிவில் சொன்ன கலைஞர் உருவாக்கிய தமிழ் நிறுவனங்கள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.
தமிழறிந்த இந்தக் குழு தவறெனில் பின்னூட்டு அளிக்கும் என்றெண்ணியே இங்கும் அனுப்பினேன்.
இப்போதும் இந்த வினாவிற்கு விடையறிந்தவர் கூறுங்களேன்.
இந்த ஆறு நிறுவனங்கள் தவிர தமிழர் தலைவர்கள் உருவாக்கிய பிற அரசு நிறுவனங்கள் இருந்தால் எழுதுங்களேன்
===============================================
பலமுறை மத்திய - மாநில அரசில் பங்கு பெற்ற தமிழர் தலைவர் எவரேனும் பிற அரசுத் தமிழ் நிறுவனங்கள் தொடங்கியிருப்பாரெனில், அன்பு கூர்ந்து தெரிவிக்க வேண்டுகிறேன்
நட்புடன்
.கவி.
Post a Comment