Monday, May 18, 2009

ஃபீனிக்ஸ் நம் திமுக - 18 :: ஈழம்: தேர்தல் 2009 : அலசல் -3

ஃபீனிக்ஸ் நம் திமுக - 18 : தேர்தல் 2009 : அலசல் -3 : ஈழம்


தமிழக மண்ணில் ஈழம் குறித்த அணுகுமுறை சில ஈழத் தமிழ் ஆதரவாளர்களால் இரு முறை பெரும் பிழையாகக் கையாளப் பட்டது.

இரண்டாம் பெரும் பிழை, 2009 ல். திமுகவை, தலைவர் கலைஞரை பழித்துப் பேசியது. ஈழ ஆதரவு என்ற பெயரில் கபட நாடகம் ஆடியது. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் மன உளைச்சல் தந்து கலைஞரை உருக்குலைய நினைத்தது.

பல குழுமங்களிலும், பல பதிவர்களும் தமிழக அரசியல் 2009ல், திமுகவையும், கலைஞரையும் ஈழ எதிரியாகச் சித்தரித்து பொய்யுரைத்தது.

ஒவ்வொரு குழுமங்களிலும், கலைஞரையும், திமுகவையும், திமுகவினரையும் “ஈழ எதிரியாக” சித்தரிப்பது மிகத் தவறான அனுகுமுறை என எழுதி எழுதிக் காய்த்துவிட்ட எம் விரல்கள்.

“அடிவருடி”,”பெட்டி பெற்றவர்” என்ற கேலிப் பேச்சுக்கள்.

“தனி மடலில்” நம்மைத் தாக்கிக் கொள்வதாக குழுமத்தில் செய்தி அளித்து மகிழ்ந்து கொள்வது. இவர்களின் நஞ்சு கலந்த தூஷனைகள் கொஞ்சம் நஞ்சமா?

திமுக ஒழியும் என்றவர் இன்று எங்கோ ஓடி ஒளிந்தனர்.

இவர் எந்த இனம் என்று அடையாளங்காட்டி வளர்த்த எம் கலைஞரை “இனத் துரோகி” என்றனர் இந்த இனமறியோர்.

நெருக்கடி நிலை கண்ட நாம், இந்தச் சிறு நெருக்கடிக்குத் தகர்வோமோ, நிலைத்து நின்று எதிர் கொண்டோம். வாதாடினோம்.

அவரின் பொய்யுரையை சான்றுகளுடன் முறியடித்தோம்.

தமிழ் மக்களுக்கு உண்மையை உணர்த்தி வெற்றியும் பெற்றோம்.

இந்த ஏமாற்றுக் காரர்களின் திடீர் ஆதரவு...

ஏன்

ஈழத் தமிழர் ஆதரவிற்கா ?

இல்லை.

சில மக்களைவை உறுப்பினர் பதவிக்கும் , மத்திய அமைச்சர் பதவிக்குமா?

மனச் சாட்சி உள்ளவர்கள் மனம் சாட்டையடி கொடுக்கும்.

இல்லை, இல்லை எம் தமிழர், மேன்மக்கள், அவர்களுக்கு ’சீட்’டடி கொடுத்துள்ளனர்.

பதவி மோகம் கொண்டவருக்கு பரிசு தந்தனர் எம் தமிழ் மக்கள்.

ஈழத்தை இந்த “சீட்டு” வெறியர்களிடமிருந்தும் காப்பாற்றினர்.

மத்தியில் காங்கிரசால் நிச்சயம் வங்காள தேசம் போன்ற நிலை எடுக்க இயலும்.

அதைச் செய்யாமல் பிழைத்த சில காங்கிரசுத் தலைவர்களுக்கும் மக்கள் தண்டனை அளித்துள்ளனர் என்பதையும் மறக்க இயலாது.

தேர்தலுக்கு முன்னர் காங்கிரசுக்கு நாளைய அறிவுரையாகவும் இதைக் குறிப்பிட்டுள்ளோம். இனியேலும் பிழைக்காமல் நல்ல முடிவு எடுப்பது நலம்.

காங்கிரசில் பதவி பெறும் மத்திய தமிழ் அமைச்சர்கள் நினைவில் கொள்ள வேண்டும். முதலில் நீங்கள் தமிழர்கள், பின்னரே இந்தியர்.

தமிழின உணர்வுக்குப் பங்கம் என்றால் எம் தமிழர் சீறுவர் என்பதற்கும் இந்தத் தேர்தல் முடிகள் சிறந்த சான்றே.

திமுகவின் தமிழர் அன்பு இன்று நேற்றல்ல, பல ஆண்டுகள் சரித்திரம் பெற்றது.

ஏமாற்றுக்காரர்களை நம்பி பிழைத்த ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் மீண்டும் ஒரு முறை ஏமாந்து போனார்கள் என்பது தான் நிஜம்.

தலைவர் கலைஞரின் இந்தச் சொற்கள், பிழைத்த ஈழ உணர்வாளர்களுக்கும் பொருந்தும்.

” மறப்போம்-மன்னிப்போம்.

உறவுக்கு கை கொடுப்போம்;

உரிமைக்கு குரல் கொடுப்போம்”

”தூற்றல்- துணிந்து பொய்யுரைத்தல் போன்ற நிலைகள்- தரமற்ற விமர்சனங்கள்- தேர்தல் நேரமெனில் இவை தவிர்க்க முடியாதவை சிலருக்கு- சில தலைவர்களுக்கு- சில ஏடுகளுக்கு!

அவற்றையெல்லாம் மறந்து விடுவோம்!

மறப்போம்-மன்னிப்போம் என்ற மாபெரும் தலைவனின் வழி வந்தவர்கள் நாம் என்பதை மட்டும் என்றும் மறவாமல் இருப்போம்.”

ஆம் தோழர்களே மறப்போம் துணிந்து பொய்யுரைத்தவர்களை.

தமிழகம், இந்திய அரசை மீண்டும் மீண்டும் வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு என்றும் கலைஞர் மீண்டும் தெரிவித்துள்ளார் என்பதை நோக்க நண்பர்களே.

இதோ “நாளை ஈழம்” என்று பொய்யுரைக்க மாட்டோம்.

விடுதலைப் போராட்டங்கள் உடன் வெற்றி பெறுவதுமில்லை, அதன் நிழல் என்றும் அழிவதுமில்லை.

நியூட்டனின் இரண்டாம் தத்துவத்தின் படி, அது மாற்று வடிவத்தில் இயங்கிக் கொண்டே இருக்கும். தேவைப் படும் காலத்தில் மீண்டும் உருப் பெறும், தேவைப் படின் வேறு வடிவில், இது தான் விடுதலைத் தத்துவம்.

தன் மக்களைக் காக்கத் தவறும் எந்த நாடும், பிரிவினை-விடுதலைப் போராட்டத்தை எதிர் கொண்டே ஆக வேண்டும், இது இயற்கை நியதி.

இந்தத் தேர்தல் அரசியல் சுயலாபத்திற்காக திடீர் ஈழ ஆதரவாக மாறியவர்களையும், பதவிக்காக ஈழ ஆதரவு நிலை எடுத்தவர்களையும் மீண்டும் இனங்காட்டி ஒதுக்கினர் தமிழர் என்றால் மிகையல்ல.

என்றும் போல் எம் கலைஞர், ஈழ ஆதரவுப் போராட்ட நிலைகளில் ஈடுபடுவார் என்று தெளிவான முடிவையும், தன் நிலைப்பாட்டையும் மீண்டும் நிலைப் படுத்தியுள்ளார் என்றால் அது மிகையா?

அன்புடன்

.கவி.

14 comments:

Anonymous said...

you posted this on a wrong day. you have to grow up

Anonymous said...

தி.மு.க. தேர்தலில் வென்றது தனது மொள்ளமாரித் தனத்தினால் தான் என்று ஊர் முழுக்கத் தெரியும். ஒவ்வொரு தொகுதிக்கும் அவர்கள் கொடுத்த பணத்தையெல்லாம் கூட்டிப் பார்த்தால், தலையே சுற்றிவிடும். மதுரையில் அவர்கள் கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டாலே, நம் நாட்டில் ஒரு நெடுஞ்சாலையே போட்டிருக்கலாம். இதையெல்லாம் பொய் என்று கூறுங்கள் பார்ப்போம்? (மனசாட்சி உள்ளவர் என்றால்). ஆமாம், நீங்கள் தான் தி.மு.க. ஆயிற்றே. பின்பு ஏது மனது, சாட்சியெல்லாம்?...

.கவி. said...

”அடையாளமற்ற” நண்பர்கள் அடையாளத்துடன் பேசினால் நலம்.

சிண்டு பிடிக்கும் “நரேஷ் குப்தா” நண்டு பிடிக்கச் சென்றிருந்தாரா?

.கவி.

.கவி. said...

அடையாளமற்ற (1) நண்பரே,

அன்புக்கு நன்றி, வளர முயல்கிறேன், வீட்டின் நிலையை உயர்த்த வேண்டுமே என்று தான் யோசனை

ஏன் இது தவறான நாள் என்றும் விளக்குங்களேன்.

.கவி.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

"அதைச் செய்யாமல் பிழைத்த சில காங்கிரசுத் தலைவர்களுக்கும் மக்கள் தண்டனை அளித்துள்ளனர் என்பதையும் மறக்க இயலாது.

தேர்தலுக்கு முன்னர் காங்கிரசுக்கு நாளைய அறிவுரையாகவும் இதைக் குறிப்பிட்டுள்ளோம். இனியேலும் பிழைக்காமல் நல்ல முடிவு எடுப்பது நலம்.

காங்கிரசில் பதவி பெறும் மத்திய தமிழ் அமைச்சர்கள் நினைவில் கொள்ள வேண்டும். முதலில் நீங்கள் தமிழர்கள், பின்னரே இந்தியர்.

தமிழின உணர்வுக்குப் பங்கம் என்றால் எம் தமிழர் சீறுவர் என்பதற்கும் இந்தத் தேர்தல் முடிகள் சிறந்த சான்றே."

சரியாக சொன்னீர்கள் கவி, திமுகவும் இந்த நிலைபாட்டில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வரும் சட்டமன்ற தேர்தலில் முடிவுகள் இதே போல இருக்காது.
என் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது. நன்றி.

Anonymous said...

ungalai paarthu kannner vitu azuvatahai thavira vera ondrum yenaku thonalai.

kadavuL Ungalaiyum mannikattum throkathiRku thunai Ponatharrku.

Anonymous said...

\\\\\
சிண்டு பிடிக்கும் “நரேஷ் குப்தா” நண்டு பிடிக்கச் சென்றிருந்தாரா?
/////

பரிட்சையில் காப்பி அடித்து தேர்ச்சி பெற்றுவிட்டு, டீச்சர் கண்டுபிடிக்கவில்லை என்று சொல்வது, இயலாமையின் வெளிப்பாடு

Anonymous said...

for how long u will just send telegarms and support? didnt u see, kalanar said lies like cheasefire in SL.
plz dont speak as DMK and speak like Tamil

Anonymous said...

\\\\
plz dont speak as DMK and speak like Tamil
////
For "கவி. Va.Mu.Se. KaviArasan": you need not talk like Tamil. Atleast, talk like a human.

.கவி. said...

அடையாளமற்ற நண்பரே,

கலைஞர் என்ன செய்ய வேண்டும், எழுதுங்களேன்.

இதைச் செய்ய வேண்டும் என்று கூறினால், அதை எப்படி செயல் படுத்தலாம் என்று சிந்திக்கலாமே..

.கவி.

.கவி. said...

அன்புள்ள அடையாளமற்றவரே

நீங்கள் தமிழகத் தமிழராக இருந்தால்....

”துரோகத்திற்குத் துணை”. உண்மை ஏனய்யா ”துரோகத்திற்குத் துணை” போகின்றீர் என்று தான் கேட்கின்றேன்.

எம் ஈழ மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப் பட்டுக் கொண்டிருக்கும்போது, உங்களுக்கு ஈழச்சிக்கலை வைத்து சில ‘சீட்’டுகள், சில அமைச்சர் பதவிகளுக்காக ”துரோகத்திற்குத் துணை” போகின்றீர்?

ஏன் நண்பரே?

நீங்கள் ஈழத் தமிழராக இருந்தால்.

தமிழக அரசியலில் தமிழீழ ஆதரவாளர்கள் ”துரோகத்திற்குத் துணை” போனது மிகப் பெரும் தவறு.

பெரும்பான்மை ஈழத் தமிழர், தமிழக அரசியலை அறியாமல் சூழ்ச்சிக்குள் சிக்கிக் கொள்கின்றனர்.

ஈழ மக்கள் கொல்லப் படும் போது, ஏன் நீங்கள் தமிழக அரசியல் சிக்கலை மேலும் சிக்கலாக்குகின்றீர்.

இதனால் எப்படித் தீர்வு உண்டாகும்.

இயன்றால் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். தெளிவாக சிந்தித்து முடிவெடுக்க
வேண்டும், இல்லையெனில் இழப்பு இனத்திற்கே.

இயன்றால் எனது ஈழம்- நாளை பதிவையும் படியுங்கள்.

நண்பர் யார் - எதிரி யார் என்று இனங்கான இயலா இனத்தை என்னெ வென்று சொல்ல.

உங்களோடு இணைந்து நானும் வருந்துகின்றேன்.

வருத்தத்துடன்
.கவி.

.கவி. said...

அன்புள்ள அடையாளமற்றவரே

மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சி, இரு மத்திய அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

இன்னும் நீங்கள் பரிட்சை-காப்பி என்று பம்மாத்துக் காட்டுகின்றீர்கள்.

ஏன் இரு மத்திய அமைச்சர்கள் தோற்றார்கள், காரணம் கூறுங்களேன், அதற்கும் ஏதாவது காரணம் வைத்திருப்பீர்களே...

.கவி.

.கவி. said...

மனிதனாகச் சிந்திக்கச் சொல்லும் நண்பர்களுக்கு,

மனிதாபிமானம் இருப்பதால் தான் நாங்கள் இந்திய அரசை இன்றும் வேண்டிக் கொண்டிருக்கிறோம்.

நீர் யார் என்று அடையாளப் படுத்துங்கள், பின் நான் மனித நேயம் மிக்கவனா? அல்லது நீரா என்று பார்ப்போம்.

ஈழச் சிக்கலை வைத்து அரசியல் பிழைக்காதீர்கள் நண்பகளே, மனிதாபிமானம் உங்களை மன்னிக்காது.

.கவி.

.கவி. said...

குறை கூறி பின்னூட்டு எழுதும் நண்பர்கள் கவனத்திற்கு..................

கலைஞர் என்ன செய்ய வேண்டும் என்று எழுதுங்கள்.

எப்படிச் செய்வது என்று ஆராய்வோம்

.கவி.

Post a Comment