”ஒருமைப்பட்ட இந்தியா”.
”நாம் அனைவரும் இந்தியர்.”
”தேசியமே மூச்சு”.
“நாம் முதலில் இந்தியர்”
தேசியத்தை முதலில் நிறுத்தும் நண்பர்கள், நதி நீர்ப் பங்கீட்டில் நாம் இன்றளவும் ஏமாற்றப் படுவதை ஒரு நிமிடம் சிந்திப்பார்களா?
தேசியக் கட்சிகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறு முகம் காட்டுகின்றன.
பாசக ஆளும் கர்நாடகத்துடன், ஒகனேக்கல் என்ற புதுச் சிக்கல், வெள்ளி விழா கானும் காவிரி சிக்கலுடன் புதிதாக.
பாசக வின் நிலை என்ன?
கம்யூனிஸ்ட் ஆளும், காங்கிரசு அரசில் பங்கு பெற ஆர்வம் கொள்ளும் அண்டை மாநிலமான கேரளாவுடன் பெரியார் சிக்கல்.
தமிழக கம்யூனிஸ்டுகளின் நிலை என்ன?
இந்தத் தேர்தலில் ஏன் கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகளில் தமிழர்கள் இந்தக் கேள்வியை எழுப்பினார்களா?
காங்கிரசு ஆளும் தெலுங்கர் தேசத்துடன் பாலாறு சிக்கல். எனக்குத் தெரிந்து பாலாறில் மணற்றைத் தான் பெரும்பாலும் பார்த்துள்ளேன். பெருமழை காலங்களிலாவது தண்ணீர் பாயும் பாலாற்றுக்கும் சிக்கல்.
காங்கிரசின் நிலை என்ன?
ஏன் நதிகள் இன்றுவரை தேசிய மயமாக்கப் படவில்லை.
கல்வியை, மாநிலத் தொகுப்பிலிருந்து, பொதுத் தொகுப்பிற்கு மாற்றி
இந்தியைப் புகுத்த நிணைக்கும் மத்திய அரசுகள், நதிநீர் இணைப்பை ஏன் இன்னும் நடைமுறைப் படுத்த வில்லை?
இந்தியாவின் சண்டை நாடான அண்டை நாடு பாகிஸ்தானுடன் நதிநீர் சிக்கல் இல்லை.
அண்டை நாடான வங்க தேசத்துடன் நதிநீர் சிக்கல் இல்லை.
ஆனால் நமது நாட்டின் ஒரு பகுதியான தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுக்கும் அண்டை மாநிலங்கள், அண்டை நாடுகளை விட மோசமான அனுகுமுறை.
ஏன்?
எங்கே தவறு நிகழ்கின்றது?
தேசியக் கட்சிகளான பாசக, கம்யூனிஸ்ட், காங்கிரசு மூவருக்கும் அரசியல் செல்வாக்கும், தேவையும் உள்ள மாநிலங்கள்.
ஏன் இவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழக நதிநீர் சிக்கலை இன்னும் தீர்க்கவில்லை.
திமுக தமிழக நதிகளான காவிரி-கொரையார்-பாம்பாறு- வைகை- குண்டாறு, தாமிரபரணி-கருமேணியார்- நம்பியார் இணைப்புத் திட்டத்தை 2008ல் உருவாக்கியது.
வங்களா விரிகுடாவில் வீணாகக் கலக்கும் நதிகளால், தமிழகத்தின் நீர்த் தேவைகள் பூர்த்தி செய்யலாம்
பிரம்மபுத்திரா, கங்கை-மகாநதி இணைப்பு, வடக்கு நதிகளை கிழக்கு வரை இணைத்து,கிழக்கிலிருந்து மகாநதி-கிருஷ்ணா, கோதாவரி, காவிரி இணைக்கப் பட்டு, திமுகவால் இணைக்கப்படும் தமிழக நதி இணைபு காவிரி மூலம் சாத்தியமாகும்.
பாலாற்றை இணைப்பதன் மூலம், வட தமிழகமும் வளம் பெறும்.
நதிநீர் பங்கீட்டில் தமிழகம் இன்றுவரை தேசியக் கட்சிகளால் தமிழகம் ஏமாற்றுப்பட்டு வருகின்றன என்றால் அது மிகையல்ல.
அடுத்த தேர்தலில் தேசியக் கட்சிகள் வாக்குக் கேட்க வந்தால், தமிழர்கள் ஒவ்வொருவரும் அவரை வாசலில் நிறுத்தி தேசிய நீர் வந்தாலே உங்களுக்கு எங்கள் வாக்கு என்ற நிலை ஏற்படுத்த வேண்டும் என்று எழுதினால் அது மிகையா?
அன்புடன்
.கவி.
6 comments:
Thamizargalukku ippothu kannneRea surappathillay nathi neera inthiyaavil kidaikka pokirathu? chumma chumma araasiyal Peasi kamadi pannathinga kavi.poi thalaivar yethani manthiri kudumbatirku vangurarunu kanakku paarthu idugai podunga kavi.
அன்புள்ள அடையாளமற்ற தோழரே.
உங்கள் வருகைக்கு நன்றி.
நமது மண்ணின் நதிநீர் பேசினால், அது அரசியல் ‘காமெடி’ போலவா :(
இது போல சில சில வெறுப்புக்கள் தான் மக்கள் மனதை மாற்றும் பெரும் ஆயுதங்கள்.
இந்திய ஒருமைப்பாடு ”நதிநீர் இணைப்பில்” ஊசலாடுகிறது என்பது என் கருத்து.
தலைவரின் தேவைகள் ஒருபுறம். தங்களின் தேவைகள் மறுபுறம்
தங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வார்.
ஆனால் தேவை என்னவென்று தெரிவுயுங்களேன்.
தேவையுள்ளவர் கேட்டு வாங்கிக் கொள்வது தானே வழக்கமாக உள்ளது அடையாளமற்ற நண்பரே..
.கவி.
Very Good Article. Keep up the good work.
Please Publish all these articles as Book. Indian goverments should take input from these articles and they are accountable to provide explanation to public why these recommendations cannot be implemented. Great Job.
வருகைக்கும் , வாழ்த்துரைக்கும் நன்றி நல்லவரே.
மக்களை நீண்ட நாள் ஏமாற்ற இயலாது.
ஆட்சியில் அமர்வோர், தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களின் தேவைகளை தீர்க்க வில்லையெனில், அவர்கள் ஆட்சி பீடத்தை இழப்பர்.
.கவி.
Mr. Kavi
you are conveniently forgetting the fact that Mr. Karunanidhi shares the lions' share of the blame for the way Hogenekkal issue is handled. He chose to simply postpone the issue for the sake of Congress future in Karnataka, when it was ripe for action
Mr Karunanidhi's taking back the case in Supremecourt at the insistance of Indra Gandhi (as a bargain for dropping the sarkaria case) till date kept Kaviri an unresolved issue.
Same is true for Mullai Periyar as well as paalar. Mr Karunanidhi chooses between careful political gain and sheer inaction so that it becomes a larger issue which can be a inexpensive fodder for public for years!
I agree that Mr Karunanidhi is not the only one to blame as all the other CMs have chosen to play the same tune
It is perhaps our curse to have the choice only betweed devil and the dead sea!
--anamika
Post a Comment